நேற்று முன்தினம் (மே 30) பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது.
அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்... அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.
இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன.