Skip to main content

அயோத்தி தீர்ப்பு யாரும் எதிர்பாராத ஒன்று... பாஜகவின் அடுத்த அதிரடி திட்டம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போன்ற நிலைமையை உருவாக்கியிருப்பது பெரும் ஆறுதலானது. அதேநேரத்தில், அதுகுறித்து சட்டப்பூர்வ அறிவார்ந்த விவாதங்கள் தொடர்கின்றன.

 

ayothya



இதுபற்றி நம்மிடம் பேசிய மூத்த சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் "இந்த தீர்ப்பு யாரும் எதிர்பாராத ஒன்று' என வியப்பையே பதிவு செய்கிறார்கள். ""இந்தத் தீர்ப்பு இப்படி ஒருமனதான தீர்ப்பாக வரும் என யாரும் எதிர் பார்க்கவில்லை. ரஞ்சன் கோகாய், பாப்டே, அசோக் பூஷன் சந்திரசூட், அப்துர் நசீர் ஐந்து பேருமே வேறு பல வழக்குகளில் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை வழங்கியவர்கள். ஆனால் இந்தத் தீர்ப்பை ஒற்றுமையாக ஒரே தீர்ப்பாக வழங்கி யிருக்கிறார்கள்.
 

ayodhya



ஆனால் ஒவ்வொரு நீதிபதியும் ஒவ்வொரு பகுதியை தங்களது பங்களிப்பாக இணைத்திருக்கிறார்கள். அவை தீர்ப்பில் உள்ள எழுத்துக்களில் உள்ள கணினி தட்டச்சுக்களில்தான் தெரிகிறது. இந்த ஐந்து நீதிபதிகளும் தனித்தனியே முன்னர் வழங்கிய தீர்ப்புகளின் தட்டச்சு எழுத்துக்களை வைத்துதான் எந்தெந்த நீதிபதிகள் எதை சொல்லியிருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள முடிந்தது. தீர்ப்பு எழுதியவரின் பெயரை குறிப்பிடும் மரபு இவ்வழக்கில் கடைப்பிடிக்கப்படவில்லை என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள்.

 

bjp



அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தமிழ்நாட்டில் காமாட்சி அம்மன் போல அசாம் மாநிலத்தவர் வழிபடும் காமாத்யா என்கிற பெண் தெய்வத்தை வழிபடுபவர். அடுத்தவர், கோகாய்க்கு அடுத்தபடியாக தலைமை பதவி ஏற்க உள்ள பாப்டே. இவர் ஒரு ராமபக்தர் மட்டுமல்ல. ராமரி டமிருந்து பிரிக்க முடியாத சேவகனான அனுமன் பக்தர். இந்தியாவில் எந்த மாநிலத்திற்குப் போனாலும் அனுமன் கோயிலுக்கு போய் வணங்கிவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பார். சென்னை நங்கநல்லூர் அனுமன் கோயில் தொடங்கி நாமக்கல் ஆஞ்ச நேயர் வரை பாப்டேவின் கால் படாத அனுமன் கோயில்கள் இந்தியாவில் இல்லை. நீதிபதி அசோக் பூஷன் அயோத்தி வழக்குக்கு காரணமான பாபர் மசூதி இடிப்பு நடந்த உத்திரப் பிரதேசத்தின் மண்ணின் மைந்தர். இந்த வழக்கில் கடைசியில் இணைந்த சந்திரசூட்டும் அப்துல் நசீரும் முற்போக்கான சிந்தனை நிரம்பி வழியும் பல தீர்ப்புகளை அளித்தவர்கள். ஆகவே இவர்கள் விசாரிக்கும் அயோத்தி தீர்ப்பு வித்தியாசமாகத்தான் வரும் என எதிர்பார்த்தோம்.

 

bjp



குறைந்தது கடவுள் பக்தி கொண்ட மூன்று பேர் ஒருவிதமாகவும், கடவுள் விசுவாசத்தை பெரிய தகுதியாக மதிக்காத இரண்டு நீதிபதிகள் வேறு விதமாகவும் மூன்றுக்கு இரண்டு என்கிற அடிப்படையில் தீர்ப்பு வரும் என்றுதான் எதிர்பார்த்தோம். தீர்ப்பு வெளிவரும் போது கலவரங்கள் ஏற்படக் கூடாது என்று தான் சனிக்கிழமையை தீர்ப்பு நாளாக தேர்ந்தெடுத்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். உத்திரபிர தேசத்தின் டி.ஜி.பி.யையும் மத்திய அரசின் உள்துறை செயலாளரையும் அழைத்து "இந்த வழக்கில் தீர்ப்பு வருவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வருமா?' என கேட்டபிறகுதான் தீர்ப்பை வழங்கினார்கள்.


1528ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னன் பாபரின் படைத் தளபதியான மிக் பக்கியால் கட்டப்பட்ட மசூதியில் 1885ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ரகுபீர்தாஸ் என்கிற ராமபக்தர் சிறிய வழிபாட்டுத் தலம் ஒன்றை கட்டிக் கொள்ள கோர்ட்டில் அனுமதி கேட்கிறார். கோர்ட் அனுமதிக்க மறுக்கிறது.

சுதந்திரம் பெற்ற பிறகு 1949-ல் ராமர்சிலை அங்கே வைக்கப்படுகிறது. 1986-ல் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கப்படுகிறது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. பாபர் மசூதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ராமர் சிலையை நுழைத்த செயல்கள் அனைத்தும் தவறானவை என சொல்லும் நீதிபதிகள் 1992-ல் நடந்த பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று சொல்லி மட்டும் நிறுத்தவில்லை. அது ஒரு புனிதமான இடத்தின் புனிதத் தன்மையை சிதைக்கும் செயல் என வர்ணிக்கிறார்கள். ஆனால் ராமர் சிலை வைக்கப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம் என பெரும்பான்மையான மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கிறோம். இசுலாமியர்கள் அயோத்தி நகரின் மையப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் மசூதி கட்டிக் கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.


ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் இணைப்பு பகுதியாக ராமரின் பிறப்பை பற்றிக் கூறும் ஸ்கந்த புராணம், ராமர் நாமா, அயினி அக்பரி ஆகிய நூல்களில் உள்ள குறிப்புகளை 160 பக்க இணைப்பாகவும் வழங்கியுள்ளனர் நீதிபதிகள். பாபர் மசூதி ஒரு காலியிடத்தில் கட்டப்படவில்லை. அதன் இடிபாடுகளை தோண்டியெடுத்த இந்திய தொல்லியல்துறை கோயில்களில் காணப்படும் கலசம் போன்ற அமைப்பையும் பத்துக்கும் மேற்பட்ட தூண்களையும் கொண்ட கட்டிடத்தின் மேல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு கோயிலை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்கிற வாதத்தை ஏற்கவில்லை என ராமர் கோயில் விவகாரத்தில் இதுவரை பா.ஜ.க. செய்து வந்த பிரச்சாரத்தை பொய் என்கிறது சுப்ரீம் கோர்ட்.

"இந்தத் தீர்ப்பு இந்து மத சாஸ் திரங்களை சட்டம் மூலம் நிலைநாட்ட முயற்சிக்கிறது. பாபர் மசூதி இடித்ததை தவறு என சொல்கிறது, அதே நேரத்தில் ராமருக்கு கோயில் கட்ட பாபர் மசூதியை இடித்தவர்கள் கோரிக் கையை ஏற்று கோவில் கட்ட அனுமதிப்பது மிகவும் தவறான அணுகு முறை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வி.ஆர். பன்னி என்பவர் தலைமையில் அந்த இடத்தை மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்கிறது. அதில் எந்த ஒரு கோயிலும் இடித்து கட்டப்படவில்லை என தெளிவாகவே சொல்கிறது. 500 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விவகாரத்திற்கு மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்வு காண முயல்வது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்'' என்கிறார் பிரபல பத்திரிகையாளரும் ஃப்ரண்ட் லைன் பத்திரிகை ஆசிரியருமான விஜய் சங்கர் ராமச்சந்திரன். "இந்த விவகாரம் இத்துடன் நிற்காது. பாபர் மசூதியை இடித்தது குற்றம் என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. பாபர் மசூதி இடித்த குற்ற வழக்கில் குற்றவாளிகள் என விசாரிக்கப்படும் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி போன்றவர்கள் குற்றவாளிகள்தான் என அந்த குற்ற வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. நீதிமன்றம் எப்படி விடுவிக்கும்'' என கேட்கிறார் விஜய் சங்கர் ராமச்சந்திரன்.

இதுபற்றி நம்மிடம் பேசிய டெல்லி வழக்கறிஞர்கள், ""பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது 2,000 பேர் இறந்தார்கள். கலவரத்தால் 2,000 பேர் இறந்த குற்றத்தையும் சேர்த்து நடக்கும் இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி தான் அதுவரை கவர்னராக இருந்ததால் வழக்கில் ஆஜ ராகாமல் இருந்த கல்யாண்சிங்கை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரித்திருக் கிறது. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் தினமும் நடக்கும் விசாரணையில் அரசியல் சாசன பெஞ்ச் சொன்னது போல பாபர் மசூதி இடித்தது சட்ட விரோதம் என தீர்ப்பளிப்பதை தவிர வேறு வழியில்லை'' என்கிறார்கள்.

அயோத்தியை போலவே கிருஷ்ணன் பிறந்த இடமான மதுராவில் மசூதியும் கோவிலும் ஒரே காம்பவுண்டில் அமைந்திருக்கிறது. காசி விசுவநாதர் கோயில் வளாகத்திலும் மசூதி இருக்கிறது. அங்கெல்லாம் முன்பு அயோத்தியில் குழுமியது போல இந்துக்களும் முஸ்லிம்களும் எந்த பிரச்சினையுமில்லாமல் வழிபாடு செய்கிறார்கள். அடுத்த கட்டமாக அதை கைவைக்க பா.ஜ.க. திட்டமிடுகிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

அயோத்தி தீர்ப்பு வந்ததும் அடுத்தது என்னவென பத்திரிகையாளர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டதற்கு, "வேறென்ன பொது சிவில் சட்டம்தான்'' என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். பொது சிவில் சட்டம் என்றால் ஒவ்வொரு மதப்பிரிவினருக்கும் தனித்தனியாக இருக்கும் திருமணம், தத்தெடுப்பு, விவாகரத்து, பழக்க வழக்கங்கள் தொடர்பான சட்டங்களை பொதுமைப்படுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாகத் தான் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றி முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைத்தனர். அடுத்து மிச்சமிருப்பது கிறிஸ்துவர்கள்தான்.

"1951-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காஷ்மீர் மக்களுக்கு தனி உரிமை தரும் 370, ராமர் கோயில் கட்ட வேண்டும், பொது சிவில் சட்டம் ஆகிய மூன்று பிரச்சார கோஷங்களை முன்வைத்து தான் பாரதிய ஜன சங்கத்தை துவக்கியது. ஜன சங்கமே பா.ஜ.க.வாகி ஆட்சிக்கு வந்தது. அதன் நோக்கத்தில் இரண்டு முடிந்தது. மூன்றாவது பொது சிவில் சட்டம்தான். இந்துக்களிலே பல திருமண முறை உள்ளது. நாளை இந்தியாவில் உள்ள அனைவரும் அக்னி வளர்த்து பிராமணர் முன்னிலையில் தீயை ஒருமுறை வலம் வந்து திருமணம் செய்தால்தான் செல்லும் என பா.ஜ.க. சட்டம் கொண்டு வரும். பொது சிவில் சட்டம் எனப்படும் அந்த சட்டத்திற்கு ஜி.எஸ்.டி. வரிக்கு கட்டுப்பட்டது போல் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கட்டுப்பட்டு திருமணம் செய்யும் நிலை கூட வரலாம்'' என்கிறார் மார்க்சிய அறிஞரும் பேராசிரியருமான அருணன்.

1925-ல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது நூற்றாண்டை 2025-ல் கொண்டாடும் போது இந்தியாவை முழுமையாக இந்துத்துவா நாடாக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவும் மூர்க்கமாகவும் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் இயக்கமான பா.ஜ.க.

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.