ADVERTISEMENT

மோடிக்கு இந்த விருது பொருத்தம்தானா? ஐ.நா.செயலாளருக்கு என்ன தெரியும்?

06:42 PM Oct 03, 2018 | Anonymous (not verified)

மக்களுடைய கலாச்சாரத்துக்கும் சுற்றுச்சூழல், பேரிடர் ஆபத்து ஆகியவற்றுக்கும் தொடர்பு இருப்பதாக பிரதமர் மோடி ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ADVERTISEMENT



தூய்மை இந்தியா என்ற திட்டத்தை அறிவித்து, டாய்லெட்டுகளை கட்டும்படி சொன்னார் மோடி. அதுதவி, கங்கை நதியை தூய்மைப்படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியதோடு அந்த ரூபாய் எங்கே போச்சு என்றே தெரியவில்லை.

அவ்வப்போது, நல்லாயிருக்கிற சாலையில் குப்பையை அள்ளிக் கொட்டி மோடியும் அமைச்சர்களும் சுத்தப்படுத்துவது போல போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதுபோக, தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் திட்டத்துக்கும், காவிரி பாசனப்பகுதியை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கும், சென்னை டூ சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்துக்காக விளை நிலங்களையும், பாசனக் கிணறுகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களை அழிக்கும் திட்டத்துக்கும் மோடி அரசு ஆதரவாக இருக்கிறது.

இந்நிலையில்தான் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் பசுமை பாதுகாப்பு ஆகியவற்றில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக சாம்பியன்ஸ் ஆப் எர்த் என்ற விருதை ஐ.நா. சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டெரெஸ் வழங்கினார்.

டெல்லியில் இந்த விருதைப் பெற்றுக்கொண்ட மோடி பழைய வேதத்திலிருந்து சில வாக்கியங்களை எடுத்துப்போட்டு, இந்திய கலாச்சாரமே இயற்கையை பாதுகாப்பதுதான் என்று கூறினார். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் கேட்டுக்கும், பேரிடர் தாக்குதலுக்கும் கலாச்சாரத்துக்கும் முடிச்சுப் போட்டு பேசினார்.

ஆனால், தனது அரசு அறிவித்துள்ள சாகர் மாலா திட்டம் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலை கெடுப்பதாக இருக்கிறது என்றும், சென்னை டூ சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்காக விளை நிலங்களும், பாசனக் கிணறுகளும், குடியிருப்புகளும், வனம் மற்றும் மலைப்பகுதிகளும் அழிக்கப்பட இருப்பதையும் எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்களை மோடி கண்டுகொள்வதில்லை என்பது ஐ.நா. பொதுச்செயலாளருக்கு தெரியுமா என்று சமூக ஆர்வலர்கள் வினா எழுப்பி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT