Skip to main content

"இரண்டாம் இடத்தில் இருந்த பேராசிரியர் மூன்றாம் இடத்தில் இருந்த எம்ஜிஆர் உடன் இணைந்து.." - சுவாரசியம் பகிர்ந்த அருணன்!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020


திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேராசிரியர் அருணன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " இன்றைக்கு ஒரு கட்சி தலைவர் சொல்லியிருக்கிறார், எங்கள் கட்சி இருக்கும் வரை ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக முடியாது என்று தெரிவி்த்திருக்கிறார். அப்படி என்றால் அவர்களுடைய கட்சியை அழித்துவிட்டு ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். அதுதான் தற்போதைய காலத்தின் தேவையாக இருக்கின்றது. பேராசியரை நான் நினைக்கும் போதெல்லாம் மலையாள நாவலாசிரியர் எழுதிய இரண்டாம் இடம் என்ற நாவல் என் நினைவுக்கு வரும். அந்த நாவல் மகாபாரதத்தை பற்றியது. இலக்கிய மொழியில் சொன்னால் அது மகாபாரதத்தின் மறுவாசிப்பு.
 

s



அந்த நாவலில் மூன்று கதாபாத்திரங்கள் முக்கிய இடத்தை வகிப்பார்கள். இரண்டாம் இடத்தில் பீமன் இருப்பார். அப்போது தமிழ்நாட்டிலும் மூன்று கதாபாத்திரங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தார்கள். முதலிடத்தில் கலைஞர் இருந்தார். இரண்டாம் இடத்தில் பேராசிரியர் இருந்தார், மூன்றாம் இடத்தில் எம்ஜிஆர் இருந்தார். ஆனால், இரண்டாம் இடத்தில் இருந்த பேராசிரியர் மூன்றாம் இடத்தில் இருந்த எம்ஜிஆர் உடன் இணைந்து முதலிடத்தில் இருந்த கலைஞருக்கு ஒருபோதும் தொந்தரவு கொடுத்ததில்லை. கொடுக்கவும் நினைத்திருக்கமாட்டார் என்பதே என்னுடைய கணிப்பு. அதனால் தான் நம்முடைய நெஞ்சிலே முதலாம் இடத்தில் இருக்கிறார். பேராசிரியர் நினைத்திருப்பார் தன்னைவிட வயதில் குறைந்தவர் கலைஞர், பேராசிரியர் நினைத்திருப்பார் தன்னைவிட படிப்பில் குறைந்தவர் கலைஞர் என்று, ஆனால் எனக்கும் அவர்தான் தலைவர் என்று முடிவு செய்துள்ளார் என்றால் மனதில் இருக்கும் அகத்தை எல்லாம் தூக்கி எறிந்துள்ளார். இன்றைய இளைஞர்கள் பேராசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கிறது. அதனால் தான் இரண்டாம் இடம் என்ற அந்த நாவல் எனக்கு நினைவுக்கு வருகின்றது என்று கூறினேன். 

கலைஞரை பற்றி பேராசிரியர் ஒருமுறை இப்படி சொல்லியிருக்கிறார். கலைஞர் எனக்கு ஒரு ஆயுதம் என்று, ஆனால் நான் கலைஞருக்கு ஆயுதம் அல்ல என்று தெரிவித்திருக்கிறார். இன்றைக்கு சில பேர் திராவிடம் என்ற வார்த்தையை சொன்னாலே சிலர் பொங்குகிறார்கள். கீழடி அகழ்வாய்வை வைத்து சிந்து நதியோடு தொடர்புப்படுத்தி திராவிட நாகரிகம் என்ற ஒரு பதிவை நான் முகப்புத்தகத்தில் பதிவு செய்தேன். உடனடியாக ஒரு கோஷ்டி எப்படி திராவிட நாகரிகம் என்று சொல்லலாம் என்று என்னை தாக்கி பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழனுக்கும் திராவிடனுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றது. இதற்கு நான் பெரிய ஆய்வு செய்ய தேவையில்லை. பேராசிரியர் நம்மோடு இருக்கிறார். பேராசிரியரிடம் தமிழர், திராவிடர் என்ற பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அவர் மிக அழகாக சொல்லியுள்ளார். "தமிழர் என்றால் தமிழ் உணர்வை குறிக்கிறது, திராவிடர் என்றால் சொரணையை குறிக்கின்றது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சொரணை என்பது சுயமரியாதையை குறிக்கும். தனக்கு மேலாகவும், தனக்கு கீழாகவும் யாரும் இல்லை என்பதை அந்த சுயமரியாதைத்தான் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. ஏன் திராவிடர் என்ற சொல்மீது அந்த கோஷ்டிக்கு இவ்வளவு வன்மம் என்று தெரியவில்லை. அதனால் தான் நம்முடைய இளைஞர்கள் பெரியாரின் படைப்புக்களை, அண்ணாவின் படைப்புக்களை, கலைஞரின் படைப்புக்களை, பேராசிரியரின் படைப்புக்களை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிலபேர் சர்வ சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள். திராவிடத்துக்கு மாற்று என்று, மாற்று இருக்கட்டும், திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் மொழி உணர்வு, திராவிடம் என்றால் சுயமரியாதை, திராவிடம் என்றால் விழிப்புணர்வு. இவைகள் அனைத்தின் கலவை தான் திராவிடம். இதை எல்லாம் வேண்டாம் என்று மாற்று குறித்து பேசுபவரகள் கூறுகிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இதையும் தாண்டிய அம்சம் இருக்கிறது என்று வேண்டுமானால் தைரியம் இருந்தால் சொல்லுங்கள்" என்றார்.
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.