ADVERTISEMENT

ஜெ.வின் மரணத்திற்கு காரணம் என்ன? உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல்? வெளியாகும் மர்மங்கள்...

06:57 PM Jul 30, 2019 | rajavel

ADVERTISEMENT

நீதிபதி ஆறுமுகபெருமாள்சாமி கமிஷன் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை பற்றி விசாரித்து வந்தது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது. திடீரென அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகபெருமாள்சாமி கமிஷன் விசாரணை தடை செய்யக்கோரி நீதிமன்றங்களை நாடியது.

ADVERTISEMENT


இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து வருகிறது. அதில் நீதிபதி ஆறுமுக பெருமாள்சாமி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், நாங்கள் எங்களது விசாரணையை என்பது சதவீதம் முடித்துவிட்டோம். ஜெயலலிதாவிற்கு அப்பல்லோவில் சிகிச்சை அளிப்பதற்கு முன்பு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பாக்டீரியா தாக்குதல், இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வில் பூஞ்சை காளான் வளர்ச்சி, நுரையீரலில் நீர் கோர்ப்பு, மூச்சு விட முடியாத நிலைமை என்ற நிலையில்தான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அப்பல்லோ மருத்துவமனை, அவரது நோயெல்லாம் குணமாகிவிட்டது. அவர் எந்த நேரத்தில் விரும்பினாலும் மருத்துவமனையைவிட்டு செல்லலாம் என அறிவித்தது. ஆனால் அவர்கள் அறிவித்ததற்கு நேர்மாறாக ஜெயலலிதா இறந்து போனார். அப்பல்லோ மருத்துவமனையில் எந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டாரோ, அந்த நிலையிலிருந்து அவர் சிறிதளவும் குணமடையவில்லை என்பது அவரது மரணம் சுட்டிக்காட்டுகிறது. எனவே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததில் அப்பல்லோ நிர்வாகம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. இறுதி கட்டமாக அவரது உடலில் பெட்டாசியமும், சோடியம் அளவும் மிக அதிகமாக காணப்பட்டது. அவருக்கு ஆஞ்சியோ கிராம் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதுவே அவரது மரணத்திற்கு காரணம். அப்பல்லோ மருத்துவமனை முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என கண்டுபிடித்தோம். இதை இறுதி அறிக்கையாக நாங்கள் தயார் செய்திருந்தோம். இதைத் தெரிந்து கொண்ட அப்பல்லோ நிர்வாகம் எங்கள் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றங்களை நாடியது. ஆகவே அப்பல்லோ கோரும் தடையை நீதமன்றம் வழங்கக்கூடாது என ஆறுமுகசாமி தாக்கல் செய்த மனுவில் விரிவாக ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான விசயங்களை தெரிவித்துள்ளார்.


இது ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தரும் என்பதால் அப்பல்லோ நிர்வாகமும், ஜெ.வுடன் இருந்து அவரது சிகிச்சைகளை கவனித்த சசிகலா வட்டாரமும் பீதியடைந்துள்ளது.

ஆறுமுகசாமி இந்த விசயத்தில் கடைசியாக ஓ.பி.எஸ்.ஸை அழைத்து விசாரித்துவிட்டு தனது விசாரணை அறிக்கையை சமர்பிக்க இருந்தார்.

ஆறுமுகசாமி கமிசனை சேர்நத் வழக்கறிஞர் பிரசாத், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம் இருக்கிறது என தெரிவிக்கிறார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், இவையெல்லாம் தவறான தகவல்கள் என ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கூறுவதை மறுக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT