Skip to main content

"விஜய் செல்பி எடுத்து பந்தா காட்டுகிறார்..." - அர்ஜூன் சம்பத் பேச்சு!

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

ghjசில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சமீபகாலமாக அரசியல் நோக்கத்துடன் இத்தகைய வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக ஒரு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டு வருகின்றது. இதைபற்றி நீங்களும் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தீர்கள். இந்த சோதனையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

திரு ஜோசப் விஜய் அவர்களின் திருமணத்தின் போது நாங்கள் சில விமர்சனங்களை முன்வைத்தோம். திருமணம் செய்துகொள்வது அவரின் தனிப்பட்ட உரிமை. அவர் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த சங்கீதா என்ற சைவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கிருஸ்துவ மற்றும் இந்து உள்ளிட்ட இரண்டு வழிமுறைகளிலும் திருமணம் நடைபெற்றது. அவர் இந்து பெண்ணை திருமணம் செய்துகொண்டாலும், அவர் கிருஸ்துவராகவே அவர் வளர்க்கப்பட்டார். அவரின் அம்மா ஒரு இந்து பெண். அவரின் தந்தையார் ஒரு கிருஸ்துவர். இவர் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு அவரின் பெயரை மாற்றி, அவரை மதம் மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது. இது அவருடைய தனிப்பட்ட விரும்பம் என்று நீங்கள் கேட்கலாம், தனிப்பட்ட விருப்பமாகவே இருந்தாலும் நாங்கள் விவேகானந்தர் வழியை பின்பற்றுபவர்கள். ஒருவர் இந்து மதத்தில் இருந்து மேறு மதத்திற்கு செல்கிறார்கள் என்றால் எண்ணிக்கை ஒன்று குறைகின்றது என்று நினைக்காதீர்கள், ஒரு புதிய எதிரி உண்டாகிறார்கள் என்று நினையுங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

அதனை நாங்கள் பின்பற்றுகிறோம். அதனால் நாங்கள் அவரை விமர்சனம் செய்கிறோம். பிகில் படம் வெளியான போது பிகில் செட் என்று அந்த படத்தில் அவர் போடுகின்ற ஆடை மற்றும் பொருட்களுடன் சிலுவை மாலையையும் விற்பனை செய்தார்கள். இந்த செட்டை வாங்கினால் டிக்கெட் இலவசம் என்று அறிவித்தார்கள். இதனை கண்டித்து நாங்கள் ருத்ராட்ச மாலைகளை வழங்கினோம். தற்போது விஜய் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் கிருஸ்துவ மதத்தை புரோமோட் செய்கிறார்கள். அதை நாங்கள் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதை தான் செய்து வருகிறோம்.  அதனால் தான் வருமானவரித்துறையினர் அவரை சோதனை செய்துள்ளார். பல முக்கிய ஆவணங்களை வீட்டில் இருந்து எடுத்து சென்று இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்களிடமும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வருமான வரி சோதனை செய்யப்பட்டது. எனவே இந்த சோதனைகளில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அவருக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் அறிக்கை வெளியிடுகிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறார். இது எல்லாம் தேவையில்லாத விஷயம்.

நெய்வேலில் விஜய் படத்தின் சூட்டிங்கின் போது பத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியானது. அங்கு ஆயிரக்கணக்கான மக்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா?

என் பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் காட்டுவதற்காக விஜய் செல்பி எடுத்து பந்தா காட்டுகிறார். அவருக்கு அனைத்து மதத்தினரும் ரசிகர்களாக இருக்கும் போது அவர் ஏன் பிகில் படத்தின் போது சிலுவையை போட்டால்தான் படத்திற்கு டிக்கெட் கிடைக்கும் என்று சொல்கிறார். தற்போது திமுக, காங்கிரஸ் கட்சியினர் விஜயை தங்கள் பக்கத்தில் இருப்பதை போன்று காட்டிக்கொள்வதற்காக அவருக்கு ஆதரவான பேட்டிகளை கொடுக்கிறார்கள். விஜய் தன்னுடைய ரசிகர்களை மதம் மாற்றிவிடுவாரோ என்று நாங்கள் பயப்படுகிறோம். திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் இதில் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்கள். எங்களுக்கும் விஜய்க்கும் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவரே தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் என்று லெட்டர் பேடில் போட்டுக்கொண்டுள்ளார். அதற்காக விஜயை பாராட்டுகின்றோம். அவருத்து நிறைய பேர் ரசிகராக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி மதமாற்றிவிடாதீர்கள் என்று கேட்கிறோம். அதனால் தான் விஜயை பார்த்து பயப்படுகிறோம். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்