Skip to main content

சூரியனைப் போன்று பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில்... ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

Published on 27/07/2018 | Edited on 27/07/2018

மக்களின் குடியரசுத் தலைவர் என்றும், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் மக்களால் போற்றப்பெற்றவர், ஏ.பி.ஜெ அப்துல் கலாம். இந்தியாவின் வருங்கால செல்வங்களாக இருக்கின்ற இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் இவர் ஒரு முன்மாதிரியாகவே இருந்தார். நாட்டின் குடியரசு தலைவர், அக்னி என்கிற சக்திவாய்ந்த ஏவுகணையை கண்டுபிடித்ததைவிட ஆசிரியராக இருப்பதுதான் பெருமை என்று கருதினார். நான் மறையும் தருவாயில்கூட மாணவர்களுக்கு ஏதேனும் கற்றுத்தர வேண்டும் என்று சொல்லியவர். 2020 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும், அதுவும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்று சொல்லியவர். 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மறைந்தார். 

 

apj

 

 

 

அப்துல் கலாம் பல மேடைகளில் தன்னுடைய அறிவையும், வாழ்க்கை தருணங்களையும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்வதில் பல விஷயங்கள் இளைஞர்களின் வாழ்க்கைக்கு ஒரு உந்துகோலாக இருக்கும், அதில் சிலவற்றை இங்கு  பார்ப்போம்...

 

"சூரியனைப் போன்று பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் தன்னை தானே எரித்துக்கொள்ளத் தயாராக வேண்டும்"  

 

"எல்லோருக்கும் சமமான திறமை இருப்பதில்லை, ஆனால் திறமையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு சமமாக கிடைக்கிறது " 

 

"ஒரு விஷயத்தின் மீதுள்ள பார்வை ஒன்றுதான், ஆனால் சிந்தனை வேறாக இருப்பதுதான் படைப்பாற்றல். தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தால் தோல்வி நம்மை துவண்டுபோகசெய்யாது"

 

apj

 

"நீ தோற்றுவிட்டால், அதை விட்டுவிடாதே மீண்டும் முயற்சி செய். தோல்வி என்பது முதல் கட்டம்" 

 

"உங்கள் பணியில் வெற்றி பெற, அதை நோக்கி ஒரு மனதாக இருங்கள்"

 

 

 

"முதல் வெற்றியை அடுத்து ஒய்வு பெறாதே, இரண்டாவது போட்டியில் தோல்வியை கண்டால் முதல்வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்லிவிடுவார்கள்"

 

"கனவு காணுங்கள், கனவு எண்ணங்களாக மாறும், எண்ணங்கள் செயல்களாக மாற்றம் பெரும்"

     

 


           

Next Story

அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா! (படங்கள்)

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

நேற்று (2.11.2021) சென்னை வடபழனியில் உள்ள க்ரீன் பார்க்கில் ஸ்மார்ட் வில்லேஜஸ் என்னும் மாபெரும் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்தப் புத்தக பங்களிப்பாளர்களில் கல்வியாளர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மிக முக்கியமாக தீர்வு செயல்படுத்தப்படுபவர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில் வெ. பொன்ராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

 

 

Next Story

மாணவர்கள் கொண்டாடிய டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் (படங்கள்)

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

சென்னை, கண்ணகிநகர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (15.01.2021) டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும்  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஜெ. 11 காவல் நிலைய ஆய்வாளர் ஆல்ஃபின் ராஜ் வருகை தந்து பரிசுகளை வழங்கினார். குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பரிசுகளாக இயற்கை முறையில் விதைகளுடன் தயாரிக்கப்பட்ட எழுதுகோல், நோட்டு மற்றும் ஆத்திச்சூடி போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 

ad