Skip to main content

குஷ்பு கொடுத்த பதிலும் மாதர் சங்க வாசுகியின் கேள்வியும்!

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

The answer given by Khushbu; Mathar Sangha Vasuki's question too

 

அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்புவை அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் பதவியில் இருந்து திமுக நீக்கியது. இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது குறித்தும் குஷ்பு செய்தியாளர் சந்திப்பு குறித்தும் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகியை சந்தித்து பேட்டி கண்டோம். அதில் ஒரு பகுதி: 

 

பாஜகவில் இருக்கக்கூடிய டெய்ஸிக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடக்கும் போது குஷ்பு அமைதியாக இருந்ததற்கு காரணம் என்ன?

 

எல்லா விஷயத்திற்கும் குஷ்பு தலையிட வேண்டும் என அவரை பெரிய ஆளாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாஷேத்ரா விவகாரத்தில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, 'என்னை பற்றி விமர்சனம் செய்தால் தான் மாதர் சங்கம் லைம் லைட்டுக்கு வரும்’ என எங்களது பொதுச்செயலாளருக்கு பதில் அனுப்பியிருந்தார் குஷ்பு. இதற்கு பதில் அளித்த நான், ஜனநாயக மாதர் சங்கத்துக்கு அந்த புகழெல்லாம் தேவை இல்லை. இத்தனை வருடங்களில் அந்த புகழை எதிர்பார்த்து  நாங்கள் காவல் துறையிடமும், சமூக விரோதிகளிடமும் மோதவில்லை. உங்களை பற்றி அதிகமாக யோசிக்கிறீர்கள் என்று தெரிவித்திருந்தேன்.

 

ஆனால், ஆணைய உறுப்பினர் என்ற முறையில் முக்கியமான விஷயங்களில் குஷ்பு தலையிட வேண்டும். குற்றவாளிகள் பலரும் அவருடைய கட்சியில் இருப்பதன் பின்னணியில் பாஜக உறுப்பினராக இல்லாமல் மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து அவருடைய கட்சி தலைமையோடு கூட குஷ்பு மோத வேண்டிய அவசியம் ஏற்படும். அவர் அதை செய்ய வேண்டும் என்பதை தான் நாங்கள் கூறுகின்றோம்.

 

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராடிக் கொண்டிருந்தபோது குஷ்பு அமைதியாக இருந்ததன் காரணம் என்ன ?

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுகவில் இருந்தால் பாஜக தரப்பினர் தேடித் தேடி அதில் தலையிடுவார்கள். சமீபத்தில் கூட மைக்கல்பட்டியில் பள்ளி சிறுமி மரணம் அடைந்த விஷயத்தில் குழந்தை உரிமைகள் ஆணையம் உடனே தேடி வந்து விசாரித்தார்கள். அதில் காட்டிய கவனம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளிலும் காட்ட வேண்டும். காஷ்மீர் கத்துவாவில் நடந்ததற்கு தேசிய மகளிர் ஆணையம் கவனம் காட்டியது இல்லை. அதே போல் உத்தரப்பிரதேசம் உன்னாவ் சம்பவம் உட்பட அந்த மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் பல நிகழ்ந்து உள்ளன. ஆனால், மகளிர் ஆணையம் அங்கு என்ன கவனம் காட்டியது என்ற கேள்வி எழுகிறது.

 

பாஜகவில் இருப்பவர்கள் அரசியல் நோக்கத்தை வைத்து கொண்டு பார்ப்பது, எதிர்க்கட்சியினர் குற்றத்தில் சம்பந்தப்பட்டால் உடனே அதில் தலையிடுவது மற்றும் மைக்கல்பட்டி போன்ற மத சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிடுவது போன்று குறிப்பிட்ட விஷயத்தில் தான் தலையிடுகிறார்கள். மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில், நீதிமன்றத்தில் விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர அங்கு போராடும் வீராங்கனைகளுக்கு நேரில் சென்று ஆதரவு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது. சட்டம் எங்களுக்கு தெரியவில்லையா அல்லது குஷ்புவுக்கு தெரியவில்லையா என்று தான் நான் கேட்கிறேன்.

 

உங்களுடைய கணவருடைய  சொத்தை பாதுகாப்பதற்குத்தான் கட்சி மாறுகிறீர்களா என்று குஷ்புவிடம் ஒருவர் கேட்டபோது, உங்கள் வீட்டுப் பெண்களை வைத்துத்தான் நீங்கள் வியாபாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார் குஷ்பு. பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய குஷ்பு பிறர் வீட்டுப் பெண்களை இழிவாகப் பேசுகிறாரே?

 

எல்லோருக்கும் அளவுகோல் என்பது சமம் தான். பெண்களை பாலியல் ரீதியாக அவதூறுகள் செய்யக்கூடாது என்று சொன்னால் அது அனைவருக்கும் சமமான ஒரே நிலைப்பாடுதான். குஷ்பு அதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரியங்காவை சகோதரி என்று சொன்னதற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய ரேகா ஷர்மா 'ரெண்டு பேருக்கும் ஒரே அப்பாவா' என்று இழிவாகப் பேசுகிறார். ஒரு ஆணையத்தின் தலைவராக இருக்கக் கூடியவரே இப்படி பேசினால் மற்றவர்கள் எப்படி பேசுவார்கள்.

 

 

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது. 

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.