/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hjkl_34.jpg)
உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அமைச்சராக வருவார் என்று அமைச்சர்களால் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து அதிமுக மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவரைத்தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடியின் தொடர் விமர்சனம் குறித்து திமுகவின் விஷ்ணு பிரபு அவர்களிடம் கேட்டோம். இதுதொடர்பாக பேசிய அவர், " எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம். உதயநிதி அவர்கள் போகுமிடமெல்லாம் அவரைக் காணபொதுமக்கள், கட்சிக்காரர்கள் என்று ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். எடப்பாடி எங்கே மக்களைச் சந்திக்கிறார்.குறிப்பிட்ட சில இடங்களில் அவர் பொதுக்கூட்டங்களை நடத்துகிறார்.
குறிப்பாகக் கோவை, சேலம், கரூர், ஈரோடு எனக் குறிப்பிட்ட சில இடங்களைத் தேர்ந்தெடுத்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். இவர் ஏன் தமிழகம் முழுவதும் இதைப்போலப் போராட்டங்களை நடத்த முடியவில்லை.ஏனென்றால் அங்கே எல்லாம் போராட்டம் நடத்தினால் மக்கள் யாரும் இவரைப் பார்ப்பதற்கு வரமாட்டார்கள் என்ற உண்மை அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து கோதா செய்யலாம் என்று பார்க்கிறார். இன்னும் சொல்கிறேன், பசும்பொன்னில் தேவர் ஐயா விழாவிற்கு இவர் போக முடிந்ததா? இவரால் ஏன் போக முடியவில்லை.இவரை யார் தடுத்தா, என்ன காரணம் இவர் அங்கே செல்லாமல் புறக்கணித்ததற்கு? இவருடைய செல்வாக்கு என்பதே ஒரு ஐந்தாறு மாவட்டத்தில் சுருங்கிவிட்டது. எடப்பாடி தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள ஏதோ பேசுகிறார்.எடப்பாடியின் ஸ்டார் வேல்யூ என்பது முடிந்துவிட்டது. அவர் என்னைக்குமே கூவிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
இப்போது அண்ணாமலையும் அவரோடு சேர்ந்துகொண்டு திமுகவை விமர்சனம் செய்து வருகிறார். அவரைப் பற்றி முதலில் ஒன்றைக் கூற வேண்டும். தினமும் அவரைப் பற்றிய செய்தி தொலைக்காட்சிகளில் வர வேண்டும், அதற்காக வாயில் என்ன வருகிறதோ அந்தப் பொய்யைக் கூச்சமே இல்லாமல் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுவார். அந்த வகையில் எடப்பாடியை எல்லாம் அவர் ஓவர் டேக் செய்து விடுவார். ஏதாவது ஒரு பொய் சொல்ல வேண்டும், அது மக்களிடம் நெகட்டிவ்வாக ரீச் ஆக வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார். நல்ல முறையில் பணி செய்து மக்களிடம் செல்லலாம் என்பது ஒரு வகை என்றால், இந்த மாதிரி வாயில் வந்ததை எல்லாம் உளறி மக்களிடம் எதிர்மறையாகவாவது சென்றுவிடலாம் என்ற நினைப்பில் உள்ளவர் அண்ணாமலை, இல்லையென்றால் அவர் ஏன் கடந்த வருடம் பெய்த மழையில் தண்ணியே இல்லாத இடத்தில் அதாவது முழங்கால் அளவு கூட இல்லாத இடத்தில் போட்டில் போய் அரசியல் செய்ய வேண்டும்.அவரைப் போல் ஒரு பப்ளிசிட்டி மன்னன் யாரும் இல்லை" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)