Advertisment

இந்த திட்டங்களால் தான் சனாதனத்தை காப்பாற்றுகிறார்கள் - ஆண்டாள் பிரியதர்ஷினி 

Andal Priyadharshini Interview

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு திமுக மக்கள் செய்தித் தொடர்பு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

குடியரசுத் தலைவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற நிலை வந்தால், அது இந்த நாட்டில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். பொருளாதாரம் சேமிக்கப்படும் என்று ஒன்றிய அரசு இதற்கு காரணம் சொல்கிறது. ஆனால் இவர்களுடைய நண்பர்களுக்கு இவர்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். அதை நிறுத்தினாலே நமக்கு நிறைய செலவுகள் மிச்சமாகும். மோடி செய்யும் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும்.

Advertisment

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக கலைஞர் ஒருகாலத்தில் எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இப்போதைய காலம் என்பது வேறு. தமிழ்நாட்டின் முதலமைச்சர் இதைக் கடுமையாக எதிர்க்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியில் இருக்கும்போது இந்த திட்டத்தை எதிர்த்துவிட்டு இப்போது ஆதரிக்கிறார். எப்போதுமே தலைப்புச் செய்தியில் தான் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். மிகப்பெரிய சூழ்ச்சி இது. சனாதனிகளின் மேலாதிக்கத்தை ஒழித்தது தான் நீதிக்கட்சி செய்த முதல் சாதனை.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள்தான் அனைவருடைய கொள்கையாகவும் இருக்க வேண்டும். அனைத்து சாதியினரும் பெரிய இடத்துக்கு செல்ல முடியும் என்கிற நிலையை உருவாக்க வித்திட்டது நீதிக்கட்சி தான். அந்த எரிச்சல் சனாதனிகளுக்கு எப்போதுமே இருக்கும். உண்மையான வறுமை ஒழிப்பு என்பது தமிழ்நாட்டில் தான் நடந்து வருகிறது. பெண்ணின் கல்விக்காக மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது தமிழ்நாடு. பள்ளி செல்லும் குழந்தைகளின் பசியாற்ற காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு. மக்களின் வாழ்வை நாம் சிறப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு செய்யும் அனைத்தும் வாய்ஜாலம் தான்.

சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருக்கும் விஸ்வகர்மா திட்டம் தான் இவர்கள் சனாதனத்தை ஒழிக்கவே மாட்டார்கள் என்பதற்கான சான்று. குழந்தைகளைப் படிக்க விடாமல் வேலை செய்ய ஊக்குவிக்கிறது இந்தத் திட்டம். இந்தியாவை மாற்ற வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு சொன்னார் மோடி. அதைப் பலரும் நம்பினோம். ஆனால் இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவதைத் தான் அவர் அப்படிச் சொன்னார் என்பது இப்போதுதான் புரிகிறது. அண்ணாமலையின் பேச்சுக்கள் எதுவும் எடுபடவில்லை. ஆடுகளை ஒழுங்காக மேய்க்கும் வேலையையாவது அண்ணாமலை செய்ய வேண்டும்.

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/z2FDulV4cKw.jpg?itok=pCvsfKrb","video_url":" Video (Responsive, autoplaying)."]}

udhayanidhistalin modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe