Advertisment

 இப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக!

"சமீபத்தில் நடந்த மிகப்பெரிய வருமானவரித் துறை சோதனைகளில் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டில் கிடைத்த 77 கோடி ரூபாய்தான் மிகப்பெரிய கேட்ச். ஆனால் அவ்வளவு பணம் வருமானவரித் துறையிடம் சிக்கியது பற்றி அன்புச்செழியன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ள வில்லை. இப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்கள் பார்த்ததில்லை' என அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

Advertisment

it raid

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வருமானவரித்துறை ரெய்டு நடத்த வேண்டுமென்றால் புதிதாக துறைக்கு வந்திருக்கும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் ஒரு முழுமையான ரிப்போர்ட்டை தயார் செய்வார்கள். அதில் ரெய்டு செய்யப்போகும் இடம் அது தொடர்பான நபர், ஏன் ரெய்டு செய்யவேண்டும், ரெய்டு செய்தால் என்ன கிடைக்கும், எப்படி ரெய்டு நடத்த வேண்டும் என விரிவாக ரிப்போர்ட் தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் ஓ.கே. செய்தால்தான் ரெய்டு நடக்கும். ஆளும் மத்திய அரசுக்கு வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் என ஆராய்ந்துதான் ஓ.கே. கிடைக்கும். சிலசமயம் டெல்லி மேலிடமே எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனி நபர்களின் விவரங்களை எடுக்க ஜூனியர் அதிகாரிகளுக்கு கட்டளையிடும். அந்த விவரங்கள் சரிபார்த்த பின் ரெய்டுக்கு ஓ.கே. சொல்லப்படும்.

vijay

அப்படித்தான், "பிகில்' பட விவகாரத்தை வருமானவரித்துறையின் ஜூனியர் அதிகாரி ஒருவர் கவனித்திருக்கிறார். "பிகில்' படத்தை, நிலங்களை வாங்கி, கட்டிடம் கட்டும் வணிகரான பூமி பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர், தமிழ்நாடு முழுவதும் விநியோகித்திருக்கிறார். பொதுவாக இதில் கறுப்புப் பணம்தான் விளையாடும். ஆனால் முழு பணத்தையும் வெள்ளைப் பணமாக சினிமா துறையில் அள்ளி வீசியிருக்கிறார். "பிகில்' படம் சுமார் 300 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறது. நடிகர் விஜய்க்கு 50 கோடி ரூபாய் சம்பளம் மட்டும் தரப்பட்டிருக்கிறது. சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திற்கு கடன் கொடுத்துள்ளார். பூமி பில்டர்ஸ், கல்பாத்தி அகோரம், ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரை குறிவைத்து ரெய்டு நடத்தினால் நிச்சயம் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கிடைக்கும் என்கிற ஜூனியர் அதிகாரியின் ரிப்போர்ட்டை நீண்ட நாட்கள் ஆலோசனைக்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கேட்டு ஓ.கே. வாங்கினார்கள் மத்திய வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள்.

admk

இதில், "அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடத்துவது தவறு. அங்கு எதுவும் கிடைக்காது. அன்புச்செழியனுக்கு ரெய்டு என்பது புதிதல்ல. அவர் வீட்டை ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறை சோதனை போட்டிருக்கிறது. அவர்தான் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநர் மணிரத்தினத்தின் மூத்த சகோதரருமான ஜி.வி. தற்கொலைக்கு காரணம். இயக்குநர் சசிகுமாரின் மச்சான் அசோக்குமாரின் தற்கொலைக்கும் அவர்தான் காரணம். அவர் மீது தமிழக போலீசார் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை' என அன்புச்செழியனின் கடந்தகாலத்தைப் பற்றி உயரதிகாரிகள் சொன்னார்கள்.

"ஒருமுறை ரெய்டு போனாலே வருமானவரித்துறை பற்றி குற்றவாளிக்கு தெளிவு பிறந்துவிடும். அதன்பிறகு எதைச் செய்தாலும் ஒருவேளை வருமானவரித்துறை ரெய்டு வந்தால் எப்படி சமாளிப்பது என சிந்தித்தே செயல்படுவார்கள்' எனச் சொன்ன உயரதிகாரிகளிடம், "ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை. இதே அன்புச்செழியனை ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்து கவனிக்க வேண்டிய வகையில் கவனித்ததோடு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்திருக்கிறார்' என இன்னொரு தகவலை இளம் அதிகாரிகள் சொன்னார்கள்.

"சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்து ஜெ. முதல்வராக இருந்த 2001 காலகட்டத்தில் சசிகலாவின் பணத்தை அன்புச்செழியன் சினிமாவில் போட்டு பல மடங்கு பெருக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஃபைனான்ஸ் விஷயமாக அன்புச்செழியன் ஒருவரை கடத்திச் சென்று அடைத்து துன்புறுத்துகிறார் என ஒரு புகார் அப்போது மதுரையில் வேலை பார்த்த எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் வந்தது. அவர் அன்புச்செழியனை கைது செய்து லாக்அப்பில் போட்டுக் கவனித்தார்.

அப்பொழுது புலனாய்வுத் துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் தொடங்கி அனைத்துப் போலீஸ் உயரதிகாரிகளும் ஓ.பி.எஸ். தொடங்கி பத்து அமைச்சர்களும் அன்புச் செழியனுக்காக அஸ்ரா கார்க்கிடம் பேசி அவரை விடுவிக்கச் சொன்னார்கள். அஸ்ரா கார்க் அன்புச்செழியனை குண்டர் சட்டத்தில் போட்டார். அது சசிகலா ராஜ்ஜியம் நடந்த காலம்.

சசிகலா தொடங்கி அனைத்து அமைச்சர்களுக்கும் இன்றுவரை சினிமா ஃபைனான்ஸ் செய்கிறார் அன்புச்செழியன். அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழலில் ஐம்பது கோடி கிடைத்தால் அதை அன்புச் செழியனிடம் கொடுத்துவிடுவார்கள். சினிமாவில் மீட்டர் வட்டிக்கு விட்டு அதை ஐநூறு கோடியாக்குவார் அன்பு. அன்புவை தொட்டால் தமிழக அமைச்சரவையே மாட்டும். அந்த அளவுக்கு "அன்பு'ப் பிடியில் அமைச்சர்கள் சிக்கியிருக்கிறார்கள்'' என இளம் அதிகாரிகள் சொல்ல... அன்புச்செழியன் வீட்டில் களமிறங்கியது வருமானவரித்துறை.

ரொக்கமாக 77 கோடி, ஏராளமான கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துப் பத்திரங்களை அள்ளிக்கொண்டு வந்தது. நடிகர் விஜய்யிடம் அவர் சம்பளமாக வாங்கிய 50 கோடி ரூபாய் முழுமையாக வெள்ளைப் பணம் என கண்டறிந்து அதற்கான கணக்கு விவரங்களைத் திரட்டினர். "விஜய் கணக்கு க்ளியராக இருந்தது. தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகள் வருமானவரித் துறையின் விசாரணைக்கு வந்து சென்றார். பூமி பில்டர்ஸ் உரிமையாளரும் விசாரணைக்கு வந்துபோனார். ஆனால் அன்புச் செழியன் வருமானவரித்துறை இரண்டு தேதிகளில் வரச் சொன்னதை மதிக்கவேயில்லை. அவர் எடப்பாடி மூலமாக பா.ஜ.க.வை சரிக்கட்டி தப்பிக்க நினைக்கிறார். அது அத்தனை எளிதல்ல. அன்புவையும் அவருடன் தொடர்பில் உள்ள அமைச்சர்களையும் மத்திய அரசு தன் பிடியில் வைத்துக்கொள்ளும் என உறுதியாகச் சொல்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

minister actor vijay it raid politics admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe