amitabh bhachchan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2439263953"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நவம்பர் 15 2018, அன்று கஜா புயல், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களையும், டெல்டா மாவட்டங்களையும் தாக்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமகாலத்தில் நடந்த மிகப்பெரிய அழிவு. நிறைய மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். நிறைய கட்டிடங்கள் இடிந்துள்ளன. கிட்டதட்ட 3.7 இலட்சம் மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்.3.4 இலட்சம் வீடுகள் இடிந்துள்ளன. இந்தியாவிற்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.60 முதல் 80 சதவீதம் தென்னை மரங்கள் விழுந்துவிட்டன. இந்தியாவின் இளநீர் உற்பத்தியில் கால்பங்கு உற்பத்தியை அந்த பகுதிகள் பெற்றுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களை நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மரங்கள், மின்சார வசதி மற்றும் வாழ்க்கை சேதமடைந்துள்ளன. இது ஒரு கணிப்புதான். விவசாயம் முடங்கிப்போய் உள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த சேதங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றன. ஆனால் தன்னார்வலர்களும், சமூக நல இயக்கங்களும் தொடர்ந்து மக்களுக்காக உதவுகிறார்கள், நம்மக்களுக்காக. ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதுதான் இந்தியாவின் ஒற்றுமை. கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. சகோதரத்தை உணர்த்துவதற்கு இதுவே சிறந்த நேரம். முன்வருவோம் உதவுவதற்காக. கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர். அவரது அமைப்பான மக்கள் நீதி மய்யம் களத்திலிருந்து உழைத்துவருகிறது. உங்களின் மகத்தான பங்களிப்பை தாருங்கள். நன்றி...