தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை வியூகங்களை தாண்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அதிமுகவில் அங்கம் வகிக்கும் நிலையில் அண்மையில் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட விரும்பும் பட்டியலை வழங்கியதாக தகவல்கள் வெளியானது.

Advertisment

தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச பாஜக தேசிய தலைமைகள் தமிழக வர உள்ளது. இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கட்சிகளின்   தேர்தல்  நகர்வுகள் குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த பைஜன் பாண்டா மாற்றப்பட்டிருக்கிறார். பியூஷ் கோயல் மட்டுமல்லாது புதிய இரண்டு பேரை தேர்தல் பொறுப்பாளர்களாக போட்டுள்ளார்கள். இந்த திடீர் மாத்துறதுக்கு என்ன காரணம்?  

088
NEWS Photograph: (NAKKHEERAN)

ஹரியானா தேர்தலில் மிகப்பெரிய அளவில் பைஜன் பண்டாவின் நடவடிக்கை இருந்தது. மகாராஷ்டிரா தேர்தலில் பாண்டாவுடைய நகர்வுதான் யுக்திதான் வெற்றியை கொடுத்தது என சொன்னாங்க. ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் வேலை பார்த்த ஒரு நபர் தமிழ்நாட்டில் எப்படி வேலை பார்க்கணும் என அவருக்கு தெரியும் என்றெல்லாம் பேசப்பட்டது. பைஜன் பண்டாதான் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் என்று சொல்லும் பொழுது பாஜக பெரிய திட்டத்தை போடுறாங்க அப்படில்லாம் நாம் பேசி இருக்கோம். ஆனால் இப்போது பியூஸ் கோயலை போட்டது ஒரு கண்டிப்பாக ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

Advertisment


பைஜன் பாண்டாவை  ஒப்பிடும் பொழுது தேர்தல் விஷயத்தில் பியூஸ் கோயல் பெரிய ஆள் இல்லை. பாண்டா ஒரு முக்கியமான தலைவர்தான். 2024 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அவர்தான் இங்கே இருந்தார். இங்க ஏற்கனவே பெரிய அளவில் பாஜக ஒன்றும் வெற்றி பெறவில்லை. ஆனால் பாண்டாவ தூக்கியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்றாங்க. தொடர்ச்சியாக பாண்டா எங்க போனாலும் வெற்றியைதான் கொடுத்திருக்கார். தோல்வியை கொடுக்கவில்லை. பாண்டா தமிழ்நாட்டுக்கு வந்து சூழ்நிலையை பார்த்துவிட்டு இங்கு 2026ல் வெற்றி பெறுவது கடினம் என்று முடிவு எடுத்திருக்கலாம். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம். அதிமுகயை வெற்றிபெற வைப்பதற்கு பாண்டா செயல்படுகிற மாதிரி தெரியவில்லை. நயினார் நாகேந்திரன் டெல்லியில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு 'நான் சும்மா போற வழியில் பார்க்க வந்தேன்' என்கிறார். சும்மா யார் பிளைட் ஏறி டெல்லி செல்வார்கள். ஏனென்றால் அடுத்த வாரம் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார். தமிழ்நாட்டில் அவருடைய திட்டங்கள் என்ன? எத்தனை இடம் கேட்பார்கள்? கிட்டத்தட்ட 70 இடங்களை பாஜக கேட்பதாக பத்திரிகை செய்திகள் வருகிறது. குறிப்பாக 54 இடங்களை பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவர் வந்திருக்கிறார் (நயினார் நாகேந்திரன்). அவரிடம் எந்த தொகுதியில் நாம் நின்றால் வெற்றி பெறலாம் என அமித்ஷா கருத்து கேட்டிருப்பார். வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ள தொகுதிகள் என்ன என்று  கண்டிப்பாக கேட்டிருப்பார். கண்டிப்பாக லிஸ்ட் கொடுத்திருப்பாங்க. அது ஒன்றும் பெரிய தவறான விஷயம் இல்லை. எல்லாக் கட்சியிலும் தேர்தலுக்கு ஒரு ஆறு மாதத்துக்கு முன்பு இதை பேசுவது வழக்கம்தான். நிச்சயம் அமித்ஷா கேட்டிருப்பார். அதைவிட வேட்பாளர் பட்டியல் கூட கொடுக்கப்பட்டிருக்கலாம். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று நான்கு பேர் கொண்ட லிஸ்ட் கூட கொடுத்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பாஜக போட்டியிடலாம் என்ற பட்டியலை கொடுத்தால் அந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்ற அடுத்த கேள்வியை அமித்ஷா கேட்டிருக்க மாட்டாரா? எடுத்துக்காட்டுக்கு நெல்லை தொகுதி என்றவுடன் நயினார் நாகேந்திரன் என்று புரிந்து கொள்ளலாம். அதேநேரம் ராமநாதபுரம் தொகுதியில் யாரை நிறுத்துவது எனக் கேட்டால் ஒரு நான்கு பேரை கொடுக்க வேண்டாமா? மதுரையில யாரு? என்றால் கேட்டிருந்தால், அதற்காக உத்வேகமான முறையில் ஒரு உத்தேச பட்டியல் கொடுத்திருக்கலாம்.

அதிலிருந்து நாளைக்கு எதிர்காலத்தில் அவரைப் பற்றிய செய்திகளை சேகரித்து அமித்ஷா டிக் பண்ணலாம். அது நமக்கு தெரியாது. தான் வெற்றி பெறக்கூடிய தொகுதியை பாஜக அடையாளப்படுத்துகிறார்கள். பாஜகவிற்கு தெளிவாத் தெரியும் அதிமுக செல்வாக்கும் பாஜக செல்வாக்கையும் சேர்த்து வெற்றி பெற்றால்தான் முடியும். ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடம் வென்றார்கள். பாமகவும் வந்துரும். உறுதியா 75 தொகுதிகளில் ஒரு 50க்கு மேற்பட்ட தொகுதிகளை பாஜக டிக் பண்ணி கொண்டு போயிருக்காங்க. அப்படிங்கிற ஒரு பார்வை இருக்கிறது. இது அதிமுகவடைய வட்டாரத்துக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும்'' என்றார்.