ADVERTISEMENT

அம்பேத்கர் சிலை உடைப்பு...வேதாரண்யம் ஜாதி மோதலின் பின்னணி...அதிர்ச்சி ரிப்போர்ட்!

11:30 AM Aug 29, 2019 | Anonymous (not verified)

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சட்டமேதை அம்பேத்கரின் சிலை கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம். வேதாரண்யம் அருகிலுள்ள ராஜகாளிகாட்டைச் சேர்ந்தவர் பாண்டியன். முக்குலத்துப் புலிகள் அமைப்பின் மாணவரணி மா.செ.வாக இருக்கிறார். இவருக்கும் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலருக்கும் அடிக்கடி மோதல் ஈடுபட்டு, வழக்காகவும் மாறியிருக்கிறது.

ADVERTISEMENT



25-ந் தேதி மாலை தனது சகாக்களுடன் வேதாரண்யத்தில் சென்று கொண்டிருந்த பாண்டியனின் கார், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற இளைஞரின்மீது மோதியது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன அவரது சமுதாய இளைஞர்கள் சிலர் ஓடிவந்து ராமச்சந்திரனை மருத்துவமனையில் சேர்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் செய்தி ராமகிருஷ்ணாபுரத்தில் பரவ, அங்கிருந்து ஓடிவந்த இளைஞர்கள் காவல்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பாண்டியனின் காரை சாவகாசமாக அடித்து நொறுக்கிவிட்டு, தீயிட்டுக் கொளுத்தினர்.

ADVERTISEMENT

பாண்டியனின் கார் கொளுத்தப்பட்ட செய்தி வேதாரண்யம் முழுவதும் உள்ள அவரது சமுதாய இளைஞர்களுக்கு தெரியவர, அரிவாள், கடப்பாரைகளோடு பெருங்கூட்டமாக திரண்டுவந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ரகளை செய்தனர். காக்கிகளிடம் இருந்து இந்தமுறையும் எதிர்வினை இல்லை. தொடர்ந்து அந்த இளைஞர்கள், காவல்நிலையத்திற்கு எதிரே பேருந்துநிலைய வாசலில் இருந்த அம்பேத்கர் சிலையின் தலையை வெட்டி உருட்டிவிட்டு, வெறித்தனமான குதூகலத்துடன் அங்கிருந்து வெளியேறினர். அடுத்துவந்த கூட்டம், தலையில்லாத அம்பேத்கர் சிலையை கடப்பாரை, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்தியது. அதோடு நிறுத்தாமல் பட்டியலின சமுதாயத்தின ரின் கடைகளாக தேடித்தேடி அடித்து நொறுக்கினர். மாலை 5.15க்கு தொடங்கிய இந்த அலப்பறைகள், 6.05-க்கு நாகையில் இருந்து காவலர்கள் வந்து தடை உத்தரவு பிறப்பிக்கும்வரை நீடித்தது.

பதற்றம் தொற்றிக்கொள்ள, வேதாரண்யத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும் முதல்வர் பழனிசாமியிடம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருமாறு முறையிட்டனர். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர் பழனிசாமி, உடனடியாக சேலம் ஆத்தூரில் இருந்து 6 அடிஉயர அம்பேத்கர் சிலையைக் கொண்டுவந்து, பழைய சிலை இருந்த இடத்திலேயே நிறுவி பதற்றத்திற்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தார். ""இந்த சம்பவத்தில் தொடர் புடைய முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தேவேந்திர குல சமுதாயத்தினரும் இதில் அடக்கம். பாண்டியனை தேடி வருகின்றனர்''’என்றனர் அப்பகுதி வாசிகள் நம்மிடம்.

வேதாரண்யத்தின் பதற்ற நிலை அறிந்திருந்தும், அங்கி ருந்து வேளாங்கண்ணிக்கு பாதுகாப்புக்காக காவலர்களை அனுப்பி வைத்துள்ளனர் அதிகாரிகள். வேளாங்கண்ணி சர்ச்சுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து என்ற உளவுத் தகவலே இதற்குக் காரணம். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத் தைக் கண்டித்து வி.சி.க., இடதுசாரி கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து இருதரப்பு பிரச்சனைகளையும் அறிந்த காவல்துறையினரிடம் கேட்டோம்.…""டெல்டாவில் வளர்ந்துவரும் சாதிய அமைப் பாக இருக்கிறது முக்குலத்து புலிகள் அமைப்பு. மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அதே சமுதாய கட்சிகளோடு ஈடுகொடுக்க தனது இளைஞர் களை உசுப்பேத்துவதை முக்குலத்து புலிகள் அமைப்பு சமீபத்திய வேலையாக செய்து வருகிறது. இங்குள்ள அம்பேத்கர் சிலையை அகற்றவேண்டும் என தொடர்ந்து பேசி சர்ச்சைக்கு ஆளாகிவருகிறார் முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன்.


தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்து தலைவரான இமானுவேல் சேகரின் நினைவுதினமான செப்டம்பர் 11-ல்தான், ஆறு.சரவணனுக்கு பிறந்ததினம். அந்தநாளில் இமானுவேல் சேகரனுக்காக ஒட்டப்படும் போஸ்டர்களை மறைத்து தன் பிறந்ததின போஸ்டர்களை, ஒட்டுவதால் மோதல்களும் வெடித்துள்ளன.

சிலமாதங்களுக்கு முன்னர் தமிழக தேவேந்திர குல மக்கள் இயக்கத் தலைவரான குமுளி ராஜ்குமார், ராமகிருஷ்ணா புரத்தில் நடந்த திருமண விழாவுக்கு வந்திருந்தார். அவருக்கு பிரம்மாண்ட வர வேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவரை அழைத்துச் செல்வதற்காக வந்தவர்களில் சிலர், எதிரே வந்த முக்குலத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை விலகிப்போகச் சொல்லி அடித்துள்ளனர். இதையறிந்த ஆறு.சரவணன், குமுளி ராஜ் குமாரை கைதுசெய்யச் சொல்லி வாய்மேட்டில் சாலைமறியலில் இறங்கினார். வேறுவழியின்றி கோபாலசமுத்திரத்தில் குமுளி ராஜ்குமாரைக் கைதுசெய்து, சிலர்மீது குண்டாஸும் போட்டார்கள். அதிலிருந்து வெளியில் வந்தவர்களுக்கும் முக்குலத்து புலிகள் அமைப் பின் பாண்டியனுக்கும் அடிக்கடி சண்டை மூண்ட நிலையில், சிலை உடைப்பில் முடிந்திருக்கிறது''’என்றனர் விரிவாக.

தேசத்தின் அடையாளம் சட்டமேதை அம்பேத்கர். அவர் அனைத்து மக்களுக்கு மானவர். அவரை சாதிய அடையாளமாக குறுக்கு வதும், அவரது சிலைகளைத் தகர்ப்பதும் மடமையின்றி வேறில்லை. சிலைகளைக் கடந்து சித்தாந்தமாக எப் போதும் உயர்ந்து நிற்கிறார் அம்பேத்கர்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT