Advertisment

திருவள்ளுவரை கூண்டில் அடைத்து விட்டார்கள் - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதுதொடர்பான விளக்கத்தையும், அயோத்தி தீர்ப்பு பற்றியும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " இன்று திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூச பார்க்கிறா்கள். அதனை திருவள்ளுவர் மூலம் நடைமுறை படுத்தலாம் என்று மதவாத சக்திகள் முயற்ச்சிக்கிறார்கள். தமிழக மக்கள் மொழிசார்ந்த விஷயங்களில் ஒன்றிணைகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு இதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதில் அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள். சுதந்திரமாக இருந்த திருவள்ளுவர் சிலையை தற்போது கூண்டில் அடைத்துள்ளா்கள். திருவள்ளுவரை கூண்டில் அடைந்த பெருமை அவர்களையே சாரும். இன்றைக்கு அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவிக்க பயப்படுகிறார்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலைபடாமல் இந்தியாவிலேயே இது சமரச முயற்சி என்று சொல்லியவர் நம் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் மட்டும்தான். ஜனநாயக சக்திகள் கூட அதில் இருந்து பின்வாங்கும் நிலையே இருந்தது. ஆனால் நம்முடைய கட்சி எதைபற்றியும் கவலை படாமல் அந்த தீர்ப்பை பற்றி வெளிப்படையாக பேசினோம்.

Advertisment

gf

ராமர் கோயிலை இடித்துதான் மசுதி கட்டப்பட்டது என்று பல ஆண்டுகளாக மதவாத இயக்கங்கள் சொல்லிவந்த பொய் குற்றச்சாட்டுக்கள் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்ததுள்ளது. அந்த வகையில் முஸ்லிம்கள் மீது இருந்த பழி துடைக்கப்பட்டுள்ளது. மத, இன ரீதியாக மக்களை பிளவுபடுத்த மதவாதம் பேசும் கட்சிகள் காலங்காலமாக முயற்சி செய்தே வருகிறார்கள். அவர்களின் எண்ணம் தற்போது வெற்றிபெற்றதாக நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. இது அவர்களுக்கும் விரைவில் புரியவரும். இன்றைக்கு தனியார் துறையில் கூட வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக நம் தலைவர் குரல் கொடுத்து வருகிறார். இன்றைக்கு திமுக கூட பொதுக்குழுவில் தனி தீர்மானம் ஒன்றை போட்டுள்ளா்கள். நாம் மக்களை சமத்துவப்படுத்த இவ்வாறாக யோசிக்கும் நேரத்தில் அவர்கள் அதனை குலைக்கும் நோக்கத்தில் செயல்படுகிறா்கள். அவர்களை மக்கள் புறந்தள்ளும் காலம் விரைவில் வரும்.

vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe