Advertisment

சில காலம் பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்..? - ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!

ரக

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

Advertisment

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பேசிய ஜோதிமணி, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்தக் கரோனா நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பிரதமர் உள்ளிட்டவர்களைப் பொதுமக்கள் கல்லால் அடித்திருப்பார்கள் என்று பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

Advertisment

ஜோதிமணி மோடி குறித்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. 'பப்பு' எனச்சொல் என்று குழந்தையைச் சொல்லச் சொல்லி தனிமனித தாக்குதலை முதலில் செய்தவர் பிரதமர் மோடி. அவர்கள் தனிமனித தாக்குதல் என்று சொல்வதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ராகுல் ஒன்றும் மோடியைப்பார்த்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. சோனியா காந்தியை இத்தாலி இறக்குமதி என்று பா.ஜ.க.-வினர் இன்றைக்கும் பேசி வருகின்றது. ஆனால் அதுகுறித்து சோனியா காந்தி இதுவரை பேசியதில்லை. எனவே நாகரிகத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி யாருக்கும் பாடமெடுக்கும் இடத்தில் பா.ஜ.க. இல்லை. அவர்களுக்கு அந்தத் தகுதி எப்போதும் இருந்தது இல்லை. விவாதங்களில் அவர்கள் கட்டற்று பேசுகிறார்கள். என்ன நினைக்கிறார்களோ அதைப் பேசுகிறார்கள். அநாகரிகமாகத்தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

தொலைக்காட்சி விவாதங்களுக்கு முதலில் அவர்கள் வருகிறார்களா? சில காலம் வராமல் இருந்தார்கள், தற்போது வருகிறார்கள் இதற்கு என்ன காரணம். நாங்கள் இந்த விஷயத்தில் அனைவரும் சேர்ந்து எழுத்துப்பூர்வமாக அந்தத் தொலைக்காட்சிக்குக் கடிதம் கொடுக்கிறோம். "உங்கள் தொலைக்காட்சியில் அந்தக் குறிப்பிட்ட நபர் அவ்வாறு பேசியதும், அவரை வெளியேற்றாமல் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கினீர்கள். விவாத சமநிலை இல்லாத இடங்களில் நாங்கள் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்துள்ளோம். மக்களிடம் அதற்கான காரணத்தை நாங்கள் தெரிவித்துவிட்டோம். ஆனால் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் கலந்துகொள்ளவில்லையே? அதற்கான காரணத்தைத் தெரிவித்தார்களா, இப்போது தொலைக்காட்சிகளில் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள், அதற்கும் அவர்கள் காரணம் சொல்லவில்லை.

தொலைக்காட்சிகளுக்கு அவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். நாங்கள் கூறும் தலைப்புகளில் விவாதங்களை நடத்துங்கள் என்று நெருக்கடி தருகிறார்கள். இந்த மாதிரி இதுவரைக்கு தொலைக்காட்சிகளுக்கு யாராவது நெருக்கடி கொடுத்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? இதுவரை ஆண்ட தி.மு.க. செய்திருக்கிறதா? அல்லது இப்போது ஆள்கின்ற அ.தி.மு.க. அவ்வாறு செய்கிறதா? இல்லை நாங்கள் யாராவது அதுமாதிரி கேட்டிருக்கிறோமா? அப்படி ஏதுமில்லை என்றால் அப்போது ஏன் வரவில்லை, இப்போது ஏன் வருகிறார்கள் என்ற காரணத்தை அவர்களைக் கூறச்சொல்லுங்கள். அவர்களுக்கு விவாதங்களின் மீது நம்பிக்கை கிடையாது. ஊடகங்களில் போய்த் தகராறு செய்வதும், தொலைக்காட்சி அலுவலகங்களின் மீது அவர்கள் ஆதராளர்கள் தாக்குதல் நடத்துவது என்று தொடர்ச்சியாக இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அவர்கள் அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கவே விருப்பம் இல்லை என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மையாக இருக்கிறது.

jothimani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe