Skip to main content

பா.ஜ.க -அ.தி.மு.க. கூட்டணி ! புலம்பும் சீனியர்கள்

Published on 18/02/2019 | Edited on 04/03/2019

பாம்பென்று அடிக்கவும் முடியவில்லை. கயிறு என்று தூக்கிப் போடவும் முடியவில்லை என பா.ஜ.க.வின் கூட்டணி விவகாரத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. என புலம்புகிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

பிப்ரவரி மாதம் 13-ம் தேதியன்று எடப்பாடி வீட்டில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி, ""நாம் அறிவித்த 2,000 ரூபாய் திட்டம் தி.மு.க.வை கதிகலங்க வைத்துள்ளது. மாநில அரசு குடும்பத்திற்கு 2,000 ரூபாய் கொடுக்கிறது. மத்திய அரசும் முதல் கட்டமாக 2,000 ரூபாய் கொடுக்கிறது.

eps-ops


இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இதில் நாம் பா.ஜ.க.வோடு சேர்வதால் மைனாரிட்டிகள் ஓட்டு போட மாட்டார்கள். அந்த ஓட்டு தி.மு.க.வுக்கு போனால் தி.மு.க. வெற்றி பெறும். ஆனால், அந்த ஓட்டுகளை டி.டி.வி. வாங்கி விடுவார். இப்படி மும்முனை போட்டி நிலவுவது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை எளிதில் வெற்றிபெற வைக்கும்'' என்று எடப்பாடி உற்சாகமாக பேசியிருந்தாலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அத்தனை சுலபமாக இறுதியாகவில்லை.

கூட்டணி தொடர்பாக மோடியின் குமரி விசிட்டும் தள்ளிப்போனது. முதலில் நிர்மலா சீதாராமன் அ.தி.மு.க.வுடன் பேசினார். அடுத்த கட்டமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அ.தி. மு.க.வுடன் பேசி வந்தார். அ.தி.மு.க. 25, பா.ஜ.க. 8 என இறுதியாக பேசப்பட்டது. பா.ஜ.க.வின் 8-ல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், வின் டி.வி. தேவநாதன் ஆகியோ ருக்கு சீட் கொடுத்தால் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், தமிழிசை போன்ற "மந்திரி யோகம்' உள்ள பா.ஜ.க. பிரபலங்களுக்கு இடம் கொடுக்க முடியாது என்பதால் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர் களை இரட்டை இலையில் போட்டி யிட வைக்கலாம் என பா.ஜ.க. யோசனை சொன்னது.
amitsha
""அது முடியாது. நாங்கள் ஏற் கனவே சரத்குமாரை தூத்துக்குடியிலும், கொங்கு கட்சி ஒன்றை அந்த பெல்ட்டிலும் இரட்டை இலையில் நிற்க வைக்க முடிவு செய்துள்ளோம்'' என அ.தி.மு.க. பதில் சொல்லிவிட்டது.

அதேபோல் த.மா.கா.வின் ஜி.கே.வாசன் தஞ்சாவூர் தொகுதியை கேட்கிறார். முக்குலத்தோர் நிறைந்த அந்த தொகுதியில் வாசனுக்கு ஆதரவு குறைவு என அ.தி.மு.க. வேறு தொகுதி யைத் தர... அதை ஏற்க வாசன் தயங்குகிறார்.

"பா.ம.க.விற்கு எவ்வளவு சீட் தருகிறீர்களோ அதை எங்களுக்கும் கொடுங்க. மற்றவையும் வேண்டும்' என அமெரிக்காவிலிருந்து பிரேமலதா, பா.ஜ.க. தலைவர் தமிழிசையிடம் வலியுறுத்தியிருக்கிறார். விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை வந்ததும், அவர் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்கிறார்கள் அ.தி.மு.க. வினர் அதிர்ச்சியுடன். பா.ம.க.வும் மதில் மேல் பூனையாக நின்றுகொண்டி ருக்கிறது.

""தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தங்கமணி, வேலுமணி கூட தனிப்பட்ட முறையில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை விரும்பவில்லை. "கூட்டணி சேரலைன்னா நம்மள அடிப்பாங்க. அதான் கூட்டணி' என கட்சித் தொண்டர்களிடம் பேசுகிறார்கள். ஓ.பி.எஸ்.தான் பா.ஜ.க. கூட்டணி விஷயத்தில் பச்சைக்கொடி அசைப்பவர். ஆனால் இவர்கள் அனைவரையும் தினகரனின் பா.ஜ.க. எதிர்ப்பு வேகம் கவலைகொள்ள வைத்துள்ளது.

""அதேபோல அ.தி.மு.க. சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் தொண்டர்கள் மத்தியில் இல்லை. ஒவ்வொரு அமைச்சரும் தனது மாவட்டத்தில் உள்ள ஒன்றியச் செயலாளர்களை வலியுறுத்தியும்கூட முந்தைய தேர்தலுடன் ஒப்பிட்டால் 60% விண்ணப்பங்களே வந்தன. 21 தொகுதி இடைத்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலோடு நடத்தினால் மத்திய அரசு, மாநில அரசு மீதான இரட்டை அதிருப்தியை எப்படி சமாளிப்பது என்பதுதான் கூட்டணியை விட எடப்பாடியின் தூக்கத்தை கலைக்கும் விவகாரம்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

vijayakanthஇந்நிலையில், பிப்ரவரி 14-ந் தேதி அமித்ஷாவும் அதன்பின்னர் பியூஷ்கோயலும் தமிழகம் வந்தது கூட்டணி நிலவரத்தை விறுவிறுப்பாக்கியது. 14ஆம் தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் வீட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பமானது. பியூஷ் கோயல் முன்னி லையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் கலந்து கொண்டனர். பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழிசையும் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.வுக்கு 20 தொகுதி என பேச்சை ஆரம்பித்த பொன்.ராதா ""மீண்டும் மோடி தான் பிரதமர் ஆவார். தமிழகத்திலிருந்து நிறைய பேர் மத்திய அமைச்சர்களாக வர வேண்டியுள்ளது. உங்க ஆட்சியும் இரண்டு ஆண்டுகள் பிரச்சினை இல்லாமல் நடக்கும்'' என விளக்கமாகப் பேசியிருக்கிறார். மோடி ஆட்சி மீது அதிகரித்து வரும் அதிருப்தியை சுட்டிக்காட்டி, சிங்கிள் டிஜிட்டிலேயே நின்றி ருக்கிறார்கள் வேலுமணி யும் தங்க மணியும்.

டபுள் டிஜிட்டில் ஸ்ட்ராங்காக இருந்தது பா.ஜ.க.





 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.