ADVERTISEMENT

தமிழக இளைஞர் நடைப்பயணத்தின் போது மரணம்... அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் பேரவை கடும் கண்டனம்...

03:14 PM Apr 03, 2020 | kirubahar@nakk…


ஊரடங்கின் காரணமாக மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த தமிழக இளைஞர் தெலங்கானாவில் உயிரிழந்த சம்பவத்திற்கு 'அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக' மாணவர் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது அனைவரும் அறிவோம்.மக்களின் பங்களிப்பு இல்லாமல் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெற்றிபெறுவது என்பது சாத்தியமில்லாதது.அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் மக்களை அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட மாணவர் பாலசுப்ரமணிய லோகேஷ்,மகாராஷ்டிரா வில் படித்து வந்துள்ளார்.ஊரடங்கு காரணமாக எப்படியாவது சொந்த ஊருக்குப் போக வேண்டுமெனத் தனது நண்பர்களுடன் நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

யாரும் எதிர்பாரா வண்ணம் தெலங்கானாவில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் செய்தி தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவரும் தமிழருமான திரு கெளதம். கே கூறியதாவது "ஆண்டாண்டு காலமாக மாணவர் உரிமைக்கும், நலனுக்காகவும் போராடும் AMU மாணவர் பேரவை இன்று இச்சம்பவத்தைக் கண்டு தலைகுனிந்திருக்கிறது. இது முழுக்க மத்திய மாநில அரசின் அலட்சியத்தினாலே ஏற்பட்ட துயரமாகும்.மேலும் தமிழக முதல்வர் பழனிசாமியும், மகாராஷ்டிரா முதல்வரும் ட்விட்டரில் ஒருவருக்கொருவர் ட்வீட்டில்தான் மீட்புப் பணி செய்வர் நிஜத்தில் இது போல விஷயங்கள் மிகவும் கவலையளிக்கிறது.பலியான மாணவர் எங்கள் பல்கலைக்கழக மாணவர் இல்லையெனினும் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் சார்பாக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.மாணவரைப் பிரிந்து வாடும் அவரது பெற்றோருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழக அரசு மாணவனின் பெற்றோருக்கு உடனடியாக தக்க இழப்பீடு வழங்கக் கொங்கு மண்டல MLA திரு தனியரசு அவர்கள் அரசிடம் கோரிக்கையாக வைக்க வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT