
பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பகிர்ந்துகொள்கிறார்
உதயநிதியின் தலைக்கு விலை வைத்துள்ளார் ஒரு அயோத்தி சாமியார். ரவுடி பாகவதர் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற போலி சாமியார்களைத் தான் நாம் எதிர்க்கிறோம். ரத்தம் குடிக்க நினைப்பதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுடைய அடிப்படைக் கொள்கையே இதுதான். தன்னுடைய கருத்தில் உதயநிதி உறுதியாக இருக்கிறார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். சாமியார் தலையைக் கொண்டுவந்தால் 100 கோடி தருகிறேன் என்கிறார் சீமான். அவர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த வேண்டும்.
சீமான் போன்றவர்களின் கரிசனம் திமுகவுக்கு தேவையில்லை. உளறுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணாமலை கூட சீமானைக் கலாய்க்கிறார். சனாதனத்தை மையப்படுத்தி தேர்தலை சந்தித்தால் பாஜக நோட்டாவுக்கு கீழே சென்றுவிடும். பார்ப்பனியம் எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும். நாங்கள் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சக மனிதர்களை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்கள்.
உதயநிதிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுகிறார். உதயநிதி மீது இந்தியா முழுவதும் வழக்கு போட வேண்டும் என்கிறார்கள். ஹெச்.ராஜா பேசியதற்கெல்லாம் உலகம் முழுவதும் வழக்கு போட வேண்டும். இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை ஒருங்கிணைத்தது தமிழ்நாடு முதலமைச்சர் தான். இந்தக் கூட்டணி இணைந்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை உடைப்பதற்குத் தான் உதயநிதி பேசியதை கையிலெடுத்தார்கள். கலைஞரின் பேரன் அவர். அவரைக் கண்டு இவர்கள் பயந்து தான் ஆக வேண்டும்.
பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு தான் பாஜக அரசு. இப்போது இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இவர்கள் புதிய இந்தியா என்று சொன்னார்கள் போல. இந்தியாவின் பெயரை மாற்றினால் இப்போதிருக்கும் சான்றிதழ்களை என்ன செய்வது? இதில் என்ன விளையாட்டு? மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அவர்கள் எதையும் செய்யவில்லை. முழுக்க முழுக்க ஒரு கார்ப்பரேட் பிரதமராக நரேந்திர மோடி செயல்படுகிறார். மோடி பாய்ச்சிய விஷத்தை அகற்றுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று நிர்மலா சீதாராமனின் கணவர் கூறுகிறார். அந்த நிலையில் தான் இருக்கிறது இவர்களுடைய ஆட்சி.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்கில் காணலாம்...