Advertisment

கேவலமா இருக்குது... வெட்கப்படுகிறோம்... அதிமுக எம்எல்ஏக்கள் குமுறல்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற பிரச்சனைகளில் மிக முக்கியமானது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம். இதில் அதிமுக பங்கு என்பது எந்த வகையிலும் வெளிப்படையாக பேசப்படாத பொருளாகபோய்க்கொண்டிருக்கிறது.

Advertisment

ADMK MLAK's

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. ஒட்டுமொத்தமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றி பெற்றதற்கு அதிமுகவே காரணியாக அமைத்துள்ளது. இதை பிரதான எதிர்க்கட்சியான திமுக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டது. இந்தநிலையில் இன்று தந்தை பெரியாரின் 46 வது நினைவுநாள் தமிழகம் முழுக்க அனுசரிக்கப்பட்டது. அதேபோல் அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் நினைவு நாளும் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினர் எம்ஜிஆரின் புகைப்படங்களை வைத்து மலர் மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள்.அதேபோல் தந்தை பெரியாரின் 46 வது நினைவுநாளை ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிடர் கழகம் மற்றும் திமுக அதன் தோழமை கட்சிகள் மேலும் சமூகநல அமைப்புகள் பெரியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

Advertisment

ADMK MLAK's

இந்தநிலையில் பெரியாரை பற்றி பாஜகவின் தமிழ்நாடு பிரிவு ஒரு செய்தியை டுவிட்டர் மூலமாக பதிவேற்றியது. அந்த செய்தி தந்தை பெரியாரின் புகழை, தியாகத்தை சீர்குலைப்பதாக அமைந்தது என பெரியாரிய அமைப்புகள் தமிழகம் முழுக்க கண்டன குரல் எழுப்பியதோடு போராட்டங்களில் ஈடுபட்டது. கோவையில் தந்தை பெரியார் திராவிடர்கழகம் நடத்திய போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன அப்போது பாஜகவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள் பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும் எனவும் முழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ADMK MLAK's

இதுபற்றி கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் நம்மிடம் பேசிய போது, சூடு சுரணை எதுவுமே இல்லாமல் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவளித்தது மிக பெரிய வெட்கக்கேடானது. எங்கள் அம்மா இருந்திருந்தால் ஒருபோதும் இதை அனுமதிருக்க மாட்டார். ஆனால் இப்போது ஆட்சி இருக்கிற சூழலில் பாஜகவின் தயவு தேவை என்பதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் திட்டமிட்டு பாஜகவிடம் கட்சியை ஆட்சியை அடமானம் வைத்துவிட்டார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்களுக்கும் வேறு வழியில்லை ஏதோ இருக்கிற நாட்களை ஓட்டிக்கொண்டு செல்லலாம் என்பதால் அமைதியா இருக்கிறோம்.

ஆனால் இன்றைய தினம் தந்தை பெரியாரை பற்றிதமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை பார்க்கும் போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கிறது. தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா இதுதான் அதிமுகவின் வரிசை, ஆக கட்சியின் பிறப்பான தந்தை பெரியாரையே கொச்சைப்படுத்தி பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டது. இதை கண்டிக்கும் திராணியோ, முதுகெலும்போ இல்லாத தலைமையாக எங்கள் கட்சி மாறிவிட்டது. கொள்கை ரிதியான கேள்விக்கு கூட பதவிக்காக பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள். இதை எண்ணும்போது கேவலமாக இருக்கிறது. வெட்கப்பட வேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த ஆட்சியை இன்னும் ஒரு வருடம் ஓட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்பதால்தான் இப்படி அதிமுக எம்எல்ஏக்கள் மனம்விட்டு கூறுகிறார்கள்.

modi periyar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe