Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...

சூடுபிடித்துள்ளது வேலூர் எம்.பி. தேர்தல் களம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிகார அமைப்புகளின் பறக்கும்படை, வருமான வரித்துறை, மத்திய- மாநில உளவுத்துறை, சி.பி.ஐ. புலனாய்வுக்குழு போன்றவை களமிறக்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க எனச் சொல்லி சுமார் 58 குழுக்களை உருவாக்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். அதோடு பறக்கும்படை கண்காணிப்புக் குழு என மொத்தம் 108 குழுக்கள் உள்ளன. இவையெல்லாம் வாக்குப்பதிவு நெருங்க, நெருங்க தி.மு.க.வை மட்டுமே குறிவைக்கப் போகிறது என்கிற தகவலால் தி.மு.க. தலைமை, கட்சி பட்டாளத்தை வேலூரில் முகாமிட வைத்துள்ளது. "ஆளுந்தரப்பினர் அதிகார அத்துமீறல் நடத்துவார்கள்' என தி.மு.க. தலைவர் அறிக்கைவிட்டு எச்சரித்துள்ளார்.

 

dmkகடந்த 12-ந் தேதி வேலூர் அடுத்த புதுவசூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஏழுமலை என்பவர் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தி.மு.க. வேட்பாளர் பணம் என தகவல் பரவியது. ""தி.மு.க. பிரமுகர்கள் வச்சிருக்கற பணமெல்லாம், வேட்பாளர் பணமாகிடுமா? ஏழுமலை காங்கிரசில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தார். வேலூரில் பிர பலமான ரியல் எஸ்டேட் அதிபர். எழுதப் படிக்க தெரியாத அவர், ஒரு சொத்தை கைமாற்றியுள் ளார். அதற்கான தொகை வந்துள்ளது. அதோடு, வருமானவரித்துறை, தேர்தல் களத்தில் பண நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளது. அதை பார்த்துவிட்டு யாரோ தகவல் சொல்ல... அதன்படி ரெய்டு நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளது. புடிக்கற பணமெல்லாம் எங்க பணம்ன்னு சொல்றது வேடிக்கையா இருக்கு'' என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர். ஆனாலும் வேட்டை தொடர்கிறது.
 

admkஇதனை எதிர்கொள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு முன்னாள் அமைச்சர் என பொறுப்புகளை தந்துள்ளது தி.மு.க. தலைமை. பொன்முடி, எ.வ.வேலு, முத்து சாமி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் வந்து முதல்கட்ட ஆலோசனைகளை முடித்துவிட்டு சென்றுள்ளனர். வழக்கறிஞர் அணியும் களமிறக் கப்பட்டுள்ளது. அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத் துறை செயலாளர் சண்முகசுந்த ரம் தலைமையில் ஜூலை 14-ந் தேதி வேலூரில் ஒருங்கிணைந்த வழக்கறிஞர் அணி கூட்டத்தில், ""நம் கட்சி நிர்வாகிகளை குறி வைத்து காவல்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை என பலவற்றை களத்தில் இறக்கி பா.ஜ.க. உத்தரவில் அ.தி. மு.க. அரசாங்கம் நம்மை மட்டும் குறிவைத்துள்ளது. தேர்தல் களத் தில் பணியாற்றும் கட்சி நிர்வாகி களை பாதுகாப்பது நமது கடமை, அப்போதுதான் தேர்தல் வேலை தடையில்லாமல் நடக்கும், அதனால் வழக்கறிஞர் அணி கவனமாக இருக்கவேண் டும்'' என அறிவுறுத்தியுள்ளனர்.


படுவேகமாக களத்தில் தி.மு.க. இறங்கியுள்ள நிலையில், சில புலம்பல்களும் தி.மு.க.வில் இருந்து கேட்கின்றன. ""அ.தி.மு.க. அணியின் ஏ.சி.எஸ். டீம், வேலூர் மாவட்டத்தில் இயங்கும் சமூக வலைத்தள குழுமங்கள், மீம்ஸ் கிரியேட்டர் குழுக்களை வளைத்து லட்சங்களில் கவனித்து தி.மு.க. வையும், அதன் வேட்பாளரை யும் டேமேஜ் செய்யச் சொல்லியும், ஏ.சி.சண்முகத்தை புரமோட் செய்யச் சொல்லியுள்ளது. தி.மு.க. வில் வலிமையான இணையதள அணியிருந்தும் எங்களை பயன் படுத்திக்கொள்ள மறுக்கிறது'' என்கிறார்கள்.

ஏ.சி.சண்முகம், 6 சட்ட மன்ற தொகுதியிலும் ஒரு ரவுண்ட் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை முடித்துவிட்டு, பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளார். வேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,26,991. இதில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, வேலூர் தொகுதிகளில் உள்ள இஸ்லாமிய வாக்குகள் சுமார் 3 லட்சம். வேலூர், குடியாத்தம், வாணியம் பாடி பகுதிகளில் பரவலாக வாழும் முதலியார் சமூக வாக்கு கள் மட்டும் 2 லட்சம், அணைக் கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வன்னியர் வாக்குகள் 3 லட்சம், குடியாத்தம், ஆம்பூர், கே.வி.குப் பம் பகுதிகளில் வாழும் நாயுடு வாக்குகள் 1.2 லட்சம், தலித் சமுதாய வாக்குகள் 3.2 லட்சம். மீதி பிற சமுதாய வாக்குகள்.

இதில் தனது முதலியார் சமூக வாக்குகள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள ஏ.சி.சண் முகம், 3 லட்சம் வன்னியர் வாக்குகளைக் கவர வியூகம் வகுத் துள்ளார். தி.மு.க.வுக்கு விழும் நாயுடு வாக்குகளை நம் பக்கம் திருப்ப என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தியுள்ளது ஏ.சி.சண்முகம் டீம். பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தர்றார் எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி வெளிப்படும் வேளையில், பா.ம.க. தரப்போ "எங்களை முன்புபோல கண்டு கொள்ளவில்லை' என்கிறது. அதுபோல "எங்களையும்தான் மதிக்கிறதில்லை' என்கிற குற்றச்சாட்டு பா.ஜ.க. தரப்பில் இருந்தும் எழுப்பப்படுகிறது. தொகுதியில் 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. 

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி என்பதால் அ.தி.மு.க.வில் உள்ள இஸ்லாமியர்களே அதிருப்தி யில் உள்ளனர். அதனால் பா.ஜ.க.வை ஒதுக்கிவைக் கிறோம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது ஏ.சி.சண்முகம் டீம். அதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைக்கிறது. உண்மையில் ஏ.சி.சண்முகம் வெற்றிக்காக அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க. தீவிரமாக உழைக்கிறது'' என்கிறார்கள் உள்விபரம் அறிந்தவர்கள். பணத்தை வாரித்தந்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார் ஏ.சி.சண்முகம். பணத்தை கட்சியினரின் கண்களுக்கு காட்ட மறுக்கும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் அப்பா துரைமுருகன், சில அமைப்புகளை தங்கள் பக்கம் இழுக்க சாமியார்களை பயன்படுத்தி வருகிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...