Advertisment

அதிமுக – அமமுக இணைப்புக்கு அச்சாரம் போட்ட ஓ.பி.எஸ்.!!!

ops

Advertisment

சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் நேரம் நெருங்கும் இந்த நேரத்தில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற கேள்வி கட்சிக்குள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ஓ.பி.எஸ். நேற்று போட்ட ஒரு ட்வீட் அமமுக – அதிமுக இணைப்புக்கு அச்சாரம் என்று கட்சியின் உள் வட்டத்தை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற பரபரப்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் தரும் பதிலும் கட்சிக்குள் பெரிய அதிர்வலைளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கலந்து ஆலோசனை செய்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போன்றவர்கள் சொல்லும் கருத்துகள் இப்போது தேவையற்றவை. அவர் உங்களை முதல்வர் வேட்பாளர் என்று இப்போதே கூறுகிறார். இதுகுறித்து நீங்கள் தான் வெளிப்படையாக பேச வேண்டும் என்று சொல்ல அதற்கு எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் நானே பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

Advertisment

இந்த நிலையில் 13ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்திய பிறகு, “சட்டமன்ற தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். முதல்வர் வேட்பாளர் என்பதையெல்லாம் கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும்” என்று அறிவித்தார் கே.பி.முனுசாமி. வெளிப்படையாக பேசி இன்னும் டெம்போவை உயர்த்தினார்.

அதே வேகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம்செல்போனில பேசிய கே.பி.முனுசாமி, அமைச்சர் என்ற முறையில் உங்கள் துறை பற்றி பேசுங்கள். மாவட்ட விவகாரங்கள் பற்றி பேசுங்கள். யார் முதல்வர் என்பது பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாம் என்று கறாக பேசியதாக சொல்கிறார்கள்கட்சியின் உயர்மட்ட தொடர்பு உடையவர்கள்.

இந்த நிலையில் தொலைகாட்சிகளில் எல்லாம் அதிமுக அடுத்த முதல்வர் யார்? எடப்பாடி, பன்னீர் செல்வம், வேலுமணி, என்று மக்கள் கருத்து எடுத்து பெரிய டென்ஷனை உண்டாக்கியது கட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு.இந்த நிலையில் தான் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மாலை தனது ட்விட்டர் பதிவில், கருத்து தெரிவித்தார்.

ops

அதில், தொடர்ந்து 3-வது முறையாக 2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு.அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!”என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ்.-இன் இந்த ட்விட்டர் பதிவுக்கு அடிப்படைக்காரணம்தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!! என்கிற வார்த்தையில் ஜெ. வழியை பின்பற்றும் அனைவரும் நேர்வழியில் நின்றால் நாளை நமதே என்று வெற்றி என்பது, – தினகரனின் கட்சியியான அமமுக இணைப்பு தான் சொல்கிறார் என்கிறார்கள்.

ஏற்கனவே அதிமுகவில் சசிகலா தலையீட்டை எதிர்த்து வெளியே சென்று பிஜேபி ஆதரவுடன் மீண்டும் துணை முதல்வர் ஆன ஓ.பி.எஸ். தற்போது முதல்வர் யார் என்கிற சர்ச்சை தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் அம்மா வழி வந்த அனைவரும் நேர் வழி என்று அழைத்து அதிமுக – அமுமுக இணைப்பு அச்சாரம் என்று சொல்கிறார்கள்…

twitter ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe