'Acting by acting driver' - Shocking background revealed in 7 hours Photograph: (sivakangai)
சிவகங்கையில் பெண் ஒருவர் சொகுசு காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசாரின் விசாரணையில் கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டி நகரைச் சேர்ந்தவர் பாண்டிய குமார். வெளிநாட்டில் பணியாற்றி வரும் பாண்டிய குமாரின் மனைவி மகேஸ்வரி. தனியாக வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து கணவன் அனுப்பும் பணத்தை வைத்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிலங்களை வாங்குவதற்கும் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் மகேஸ்வரி திட்டமிட்டு வந்துள்ளார். அதன்படி ஆவுடைபொய்கை பகுதியில் நிலம் வாங்குவதற்காக மகேஸ்வரி திட்டமிட்டு வந்துள்ளார்.
Advertisment
இதற்காக நேற்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். அப்பொழுது நிலத்தை ஒட்டியுள்ள தைலமரத்தோப்பில் காரில் காத்திருந்த மகேஸ்வரி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை அங்கு சென்று பார்த்தபோது மகேஸ்வரி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் குன்றக்குடி போலீசாரும், தேவகோட்டை டிஎஸ்பி கவுதம் தலைமையிலான போலீசாரும் அங்கு வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி வனப்பகுதியாக இருந்ததால் கொலையில் ஈடுபட்டவர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை திரட்ட முடியாத நிலை போலீசாருக்கு ஏற்பட்டது. சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதோடு மோப்ப நாய் முகுலியும் வரவழைக்கப்பட்டது.
தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்த நிலையில் மகேஸ்வரியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் ஆக்டிங் டிரைவராக இருந்த சசிகுமார் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. திருமணம் ஆகாத சசிகுமார் அந்த பகுதியில் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் அதிகம் என்ற நிலையில் அவர்களது வீடுகளில் உள்ள கார்களை ஓட்டும் பணியோடு, பெண்களுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் வேலையும் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மகள் மகேஸ்வரி ஆக்டிங் டிரைவர் சசிகுமார் அழைப்பின் பேரில்தான் நிலம் பார்க்க செல்வதாக கூறினார் என்ற மகேஸ்வரியின் தந்தை கொடுத்த தகவல் இந்த வழக்கில் போலீசாரின் பார்வையை சசிகுமார் பக்கம் திருப்பியது.
இந்த சம்பவத்தில் சசிகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகின. அந்த பகுதியில் வெளிநாட்டுக்கு சென்றவர்களின் மனைவிகளுடன் நன்கு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சசிகுமார் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி நல்ல பெயர் எடுத்ததோடு, அந்த பெண்களுக்கு கார் ஓட்டவும் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். அப்படி தன்னிடம் நட்பு ரீதியாக பழகி வரும் பெண்களில் அதிக பணப்புழக்கம் உள்ளவர்களிடம் பேசிப் பழகி அடிக்கடி செலவிற்கு பணம் பெற்று வந்துள்ளார். அப்படிபட்டவர்களில் ஒருவர்தான் மகேஸ்வரி.
மகேஸ்வரிடம் அடிக்கடி பணம் பெற்று வந்த சசிகுமாரிடம் தான் கொடுத்த பணத்தை மகேஸ்வரி கேட்டு வந்துள்ளார். ஆனால் சசிகுமார் கொடுக்க மறுத்துள்ளார். சசிகுமாரிடம் கார் ஓட்ட கற்றுக் கொண்ட மகேஸ்வரி தானாகவே காரில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய நண்பர் ஒருவர் அர்ஜெண்டாக ஒரு நிலத்தை விற்பதாகவும் நீங்கள் வாங்கி விற்றால் நல்ல லாபம் வரும் என்றும் சசிகுமார் சொன்னதை நம்பி ஆவுடைப்பொய்கை பகுதியில் சாய்பாபா நகரை ஒட்டியுள்ள ஆளரவமற்ற தைலமர காட்டுப் பகுதிக்கு மகேஸ்வரி காரில் சென்றுள்ளார். தான் செல்லும் இடத்தின் லொகேஷனை முன்னதாகவே தனது தந்தைக்கு கூகுள் லொகேஷன் மூலம் அனுப்பிவிட்டு தொடர்ந்து சசிகுமார் வருகைக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சசிக்குமார் எதிர்பாரா விதமாக திடீரென கற்களால் கொடூரமாக மகேஸ்வரியை தாக்கி கொலை செய்து காரில் போட்டுவிட்டு அவர் கழுத்தில் இருந்த 13 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியது தெரியவந்தது.
சசிகுமாரின் வீட்டில் இருந்து போலீசார் நகையை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? வேறு யாரேனும் கொலைக்கு உதவினார்களா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் ஆண் நண்பருடன் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண் போதை நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தில் 7 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Follow Us