Skip to main content

பன்னீரின் மகனால் பரிதவிக்கும் ஏசிஎஸ்... மூன்று தொகுதிகளை ஸ்பெஷலாக கவனிக்க முடிவு..!

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக, திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் தொகுதி இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 5 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளது. தற்போது அதிமுக சார்பாக களமிறங்கியுள்ள ஏ.சி சண்முகம் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். மேலும் 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தலில் அதிமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டுயிட்டும் வெற்றிபெற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த அவர், எம்.ஜி.ஆர் பெயரில் பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். திமுக சார்பாக களமிறங்கும் கதிர் ஆனந்த் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.

 

 acs contest vellore election



இந்நிலையில், முத்தலாக் விவகாரத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை நிலையை எடுத்துள்ளனர். குறிப்பாக துணை முதல்வர் பன்னீரின் மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் முத்தலாக் மசோதாவை ஆதரித்து பேசினார். இந்த மதோசா பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், மாநிலங்களவையில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் நவநீதிகிருஷ்ணன் முத்தலாக் தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசினார். ஆனால், ஓட்டெடுப்பில் அரசுக்கு மறைமுக ஆதரவை தெரிவிக்கும் பொருட்டு அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேறினார்கள். இந்நிலையில், முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலை தன்னுடைய வெற்றியை கேள்விக்குறியாக்கும் என்று ஏசிஎஸ் தரப்பு கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஸ்பெஷல் கவனிப்புகளை செய்யலாமா என்று யோசிப்பதாகவும் ஒரு டாக் ஓடுகிறது.

 


 

Next Story

தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பா.ஜ.க.!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
BJP started negotiations with alliance parties in Tamil Nadu

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இல்லத்தி்ல் பா.ஜ.க. - த.மா.க. இடையே கூட்டணி குறித்துப் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடனும் கூட்டணி குறித்து அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி. சண்முகம் பேசுகையில், “வாஜ்பாய் காலத்தில் இருந்து இன்று வரை 23 ஆண்டு காலமாக புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது. பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும். போட்டியிடக் கூடிய தொகுதிகளை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடி தான் பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். இந்தியா கூட்டணியிலும், அதிமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பிரதமர் மோடிக்கு இணையான தலைவர்கள் இன்றைய தினம் இந்தியாவில் யாரும் இல்லை” எனத் தெரிவித்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களான பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் ஆகியோரையும் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேச உள்ளார். 

Next Story

“வேலூரில் தாமரை மலரும்” - புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் பேட்டி!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Lotus blooms in Vellore New justice party leader AC Shanmugam interview

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சி போட்டியிடுகிறது. எனவே புதிய நீதிக் கட்சி சார்பில் கடந்த 6 மாதங்களாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். தாமரை சின்னத்தில் போட்டியிட 15 வேட்பார்கள் போட்டியிட தேர்தல் களத்தில் உள்ளனர். குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

மும்முனை போட்டியாக இருந்தாலும் வேலூர் கோட்டையில் தாமரை மலரும். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதனால் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம்” எனத் தெரிவித்தார்.