Advertisment

இந்திய எல்லையை வந்தடைந்தார் அபிநந்தன்... ஆர்ப்பரித்த மக்கள்...

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்ற இந்தியவிமானப்படை விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்திலிருந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில்சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் பாகிஸ்தான் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரைக் காயப்படுத்தி இழுத்துச் செல்லும் வீடியோ மற்றும் அவருடன் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பேசும் வீடியோ ஆகியவை சமூக ஊடங்களில் வெளியாகியது.

Advertisment

இதைத்தொடர்ந்து இந்தியா அவரை ஒப்படைக்குமாறு எச்சரித்தது. உலக நாடுகள் பலவும் அதற்கு ஆதரவு அளித்தன. நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுதலை செய்வதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய எல்லைக்குள்வந்தடைந்துள்ளார். இதை இந்திய மக்கள் அனைவரும் இதைகொண்டாடி வருகின்றனர். வாகா எல்லை முழுவதும் மக்கள் கூட்டம் உற்சாகமாகக் கூடியுள்ளது.

Advertisment

அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் நடைபெறவிருக்கின்றன. இதைத்தொடர்ந்து அவர் குடும்பத்தையும், மக்களையும் சந்திக்க இருக்கிறார்.

Pakistan India pulwama attack indian army abinandhan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe