Skip to main content

'மிசா சர்ச்சை' ஆதாரத்தை ஜெயகுமாருக்கு ரோட்டோரமா வந்து கொடுக்க கூட தயார் - அப்துல்லா தடாலடி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அக்கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு நிர்வாகி அப்துல்லாவிடம் நாம் பல்வேறு கேள்வியை முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

திமுக தலைவர் ஸ்டாலின் அவசரகால கட்டத்தில் சிறைக்கு சென்று உண்மை தான், ஆனால் மிசா  சட்டத்தின் கீழ் அவர் சிறைக்கு செல்லவில்லை என்றும், ஷா கமிஷன் அறிக்கையில் அவர் பெயர் இல்லை என்று சிலர் கூறுவதை பற்றி உங்களின் கருத்து என்ன?


மிகத் தகவறான ஒரு கருத்தை வேண்டும் என்றே பரப்ப முயற்சிக்கிறார்கள். கைதாகவில்லை என்று கூறும் அவர்கள்தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். உங்கள் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறினால் அவர்கள் தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். குற்றச்சாட்டு கூறுபவர் ஆதாரத்தை காட்டாமல்  யார் மீது குற்றம்சாட்டுகிறமோ அவர்களே ஆதாரத்தை காட்டி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்துக் கொள்ளுங்கள் என்பது எந்தவகையில் நியாயம். அவர் மிசாவில் கைதாகவில்லை என்றால் எந்த வழக்கிற்கு சிறை சென்றார் என்று கூற வேண்டியதானே? எங்களிடம் அவர் மிசாவில் சிறை சென்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது. அது அனைத்தையும் தற்போது காட்டுகிறேன். முதலில் ஷா கமிஷன் அறிக்கையை பற்றி கூறுகிறா்கள்.  அது எப்போது அமைக்கப்பட்டது அதன் வரலாறு என்ன என்று அதை பற்றி பேசுபவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
 

 

gfஅந்த ஆணையம் ஜனதா அரசு அமைந்த பிறகு நெருக்கடி கால கொடுமைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட ஆணையம். அந்த ஆணையம் விசாரணை செய்துவந்த நிலையில், அதற்குள் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வருகிறார். அவர் வந்த பிறகு, அந்த ஆணைய அறிக்கைகளை அழித்து முடிந்ததுதான் அவர்களின் முழு வேலையாக இருந்தது.  இப்போது விக்கிபீடியாவில் தேடி பார்த்தால் கூட அது பற்றிய எந்த தகவலும் இருக்காது. இப்போது காட்டப்படும் அறிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செழியன் அவர்கள் வெளியிட்ட ஆவணத்தை காட்டுகிறார்கள். 80களில் முடிந்த போன ஒரு சம்பவத்தை அவர் 2010 ஆம் ஆண்டில் என் வீட்டில் ஷா கமிஷன் அறிக்கையின் சில பகுதிகள் இருப்பதாக கூறி அதனை அத்வானியை கொண்டு புத்தகமாக வெளியிட்டார். அதை பதிப்பிக்க பல்வேறு நிறுவனங்களும் முதலில் மறுத்தன அதன் உண்மையை தன்மையை காரணம் காட்டி. அதில் பாஜக, ஜனதா உறுப்பினர்களின் தகவல்கள் மட்டுமே இருக்கிறது. 

மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக வேறு எந்த மாதிரியான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது? 

இதுதொடர்பாக அப்போது நீதிபதி இஸ்மாயில் தலைமையில் தமிழக  அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கைதான் இது. இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இண்டாவது பெயராக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் இருக்கிறதே? இதை இல்லை என்று சொல்வார்களா? வேண்டும் என்றே அவருக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதெல்லாம் காலத்தின் முன் காணாமல் போகிவிடும். மிசா என்று யாருக்காது ஞாபகம் வருகிறது என்றால் அப்போது அனிச்சை செயலாக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் நினைவிற்கு வரும். எனவே அவர்களின் எந்த விளையாட்டும் அவரிடம் எடுபடபோவதில்லை. இது அரசாங்கத்தை கையில் வைத்திருக்கும் அவர்களுக்கு தெரியாதா? அமைச்சர் ஜெயகுமாருக்கு தெரியாதா? அரசு அவண காப்பகத்திற்கு சென்று பணம் கட்டினால் யாரும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இல்லை ஜெயகுமாரின் அலுவலகத்திற்கு கொண்டுவந்து கொடுக்க சொன்னாலும் நான் தர தயார். அல்லது ரோட்டோரமா வர சொன்னாலும் வந்து தர தயாராக இருக்கிறேன்.

 

Vijayan


 

 

Next Story

‘மக்களைக் குழப்பும் புதிய கிரிமினல் சட்டங்கள்’ - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws that confuse people High Court opinion

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

New laws that confuse people High Court opinion

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள்; உயர் நீதிமன்றத்தை நாடிய திமுக!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws brought into force DMK appealed to the High Court

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். 

New laws brought into force DMK appealed to the High Court

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வர உள்ளது.