Skip to main content

“நேருவை ஒதுக்கிவிட்டு சாவர்க்கருக்கு மரியாதையா?” - இள. புகழேந்தி காட்டம் 

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

"Abandon the Nehru film.. Respect for Savarkar?" - young. Pugahendi Ghattam

 

புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார். 

 

புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்களின் எண்ணை உயர உள்ளதால் புதிய நாடாளுமன்றம் அதற்கேற்ப இருக்கைகள் அதிகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்கிறாரே?

 

“இந்திய சுதந்திரத்துக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு துணையாகவும் கடைசி கால  கட்டத்தை கழித்த சாவர்க்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகள் சிறையிலேயே தங்கள் வாழ்நாட்களை கழித்த நேரு போன்றோர் எத்தனையோ தலைவர்களை ஒதுக்கி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக தேடப்பட்ட சாவர்க்கர் படத்தை வணங்கி இந்த பாராளுமன்றத்தை திறந்து வைத்துள்ளார்கள். இது ஜனநாயக படுகொலையாகவும் இந்திய இறையாண்மையை தீங்கு விளைவிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

 

சீனாவை விட 135 கோடிக்கு மேல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது இந்தியா வளர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள  தொகுதிகளை பிரிப்பதற்காக தான் அதிக இருக்கைகள் கொண்ட புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாஜக அதிக வாக்கு வாங்கும் இடங்களான மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தன்னுடைய வசதிக்கேற்ப தொகுதிகளை அதிகப்படுத்தி தென்மாநிலங்களில் உள்ள தொகுதியை குறைப்பதற்கான சதி திட்டமா? என்பதே பலருடைய கேள்வியாக இருக்கிறது.

 

ஆங்கிலேயர் கட்டிய பழைய பாராளுமன்றம் கிட்டதட்ட 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது. ஆனால் மோடி கட்டிய இந்த புதிய பாராளுமன்றம் எத்தனை ஆண்டுகள் இடியாமல் இருக்கும் என்பதை உத்தரவாத்தை  தரமுடியுமா? எதற்கு அவசர அவசரமாக புதிய பாராளுமன்றத்தை கட்டினார்கள்?. என்ற கேள்விகளும் எழுகிறது.

 

ஆரம்பத்தில் இந்த புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக முதல் முதலில் முன்மொழிந்தது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அவருடைய மகளான அப்போது பேரவை தலைவராக இருந்த மீரா குமார். அதன் பிறகே இந்த அரசு பாராளுமன்றத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டது.

 

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்காக அன்றைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது திறப்பு விழாவுக்கு இன்றைய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவும் அழைக்கப்படவில்லை. இவை மட்டுமில்லாமல், பாராளுமன்ற திறப்பு விழாவில் உரையாற்றிய மோடி, முதல் முதலில் பாராளுமன்றத்தை கட்டுவதற்கு முன்மொழிந்த மீரா குமார் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இந்த விழா தீண்டாமையை கடைப்பிடித்தே நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்; “நாட்டுக்கு இரண்டு அரசியல் சட்டம் எப்படி இருக்க முடியும்?” - அமித்ஷா கேள்வி 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Revocation of Kashmir special status issue on Amitsha Questioned How can a country have two constitutions?

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது விவாதம் நடந்தது.

 

இந்த விவாதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சியாம பிரசாத் முகர்ஜி பெயர் கொண்ட கல்லூரியில் நான் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளேன். ‘ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம்’ என்பது தான் அவர்களது கோஷம். அது ஒரு அரசியல் கோஷம்” என்று பேசினார். 

 

உடனே குறுக்கிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டுக்கு 2 கொடி, 2 பிரதமர்கள் எப்படி இருக்க முடியும்?. ‘ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம்’ என்பது அரசியல் கோஷம் அல்ல. அந்த தத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாட்டுக்கு ஒரே கொடி, ஒரே பிரதமர், ஒரே அரசியல் சட்டம் தான் இருக்க வேண்டும் என்பதை கடந்த 1950ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் சொல்லி வருகிறோம். அதன்படி தான் நாங்கள் செய்துள்ளோம். அரசியல் சட்டம் 370வது பிரிவை யார் அமல் செய்திருந்தாலும் அது தவறு தான். அதை நரேந்திர மோடி சரி செய்தார். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ பிரச்சனையே இல்லை. ஆனால், மக்கள் அதை விரும்புகின்றனர். சவுகதா ராய் பேசியது ஆட்சேபனைக்குரியது” என்று பேசினார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஷமியை கட்டி அணைத்த பிரதமர்! - வீடியோ வைரல்! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Prime Minister Narendra Modi met Indian players in dressing room video

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

போட்டி முடிந்து இந்திய அணி வீரர்கள் தங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தபோது, பிரதமர் மோடி அவர்களை அங்கு சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பில் பிரதமர் மோடி, “10 போட்டிகளில் தொடர்ந்து நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த தோல்வி சாதாரணமானது, இதுபோல் நடக்கும். ஒட்டுமொத்த நாடும் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது சிரியுங்கள்” என்று தெரிவித்தார். 

 

மேலும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை கட்டி அணைத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்து, “இந்தத் தொடரில் நீங்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினீர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

 

தொடர்ந்து பிரதமர் மோடி, “நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தீர்கள். அனைவரும் இணைந்து இருந்து ஒருவரையொருவர் உத்வேகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் டெல்லி வரும்போது உங்களை மீண்டும் நான் சந்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

விரிவான அலசல் கட்டுரைகள்