Skip to main content

அந்தப் பொண்ணுங்க சொல்லுறதெல்லாம் தவறான விஷயம்...ஆவினில் அதிர வைக்கும் பாலியல் புகார்! 

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

இனியும் தொந்தரவு தொடர்ந்தால் நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக தீக்குளித்து உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை' -தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் புகார் அளித்திருக்கும் திருநெல்வேலி ஆவினில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் இருவரின் குமுறல் இது.

 

avin



யாரால் அந்தப் பெண் அதிகாரிகளுக்கு என்ன தொந்தரவு?

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை ஒருங்கிணைத்து நெல்லை ஆவின் செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனாக இருக்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை. இவருடைய தயவால் அதிகார மையமாகச் செயல்படும் சாந்தி என்பவரும், ஆவினில் உயர் பொறுப்பில் உள்ள அருணகிரிநாதன் என்பவரும் அந்த இரு பெண் அதிகாரிகளிடமும் “"சேர்மன் சொல்றத கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க. நம்ம சேர்மனோட பாக்கெட்ல இருக்காரு அந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி. அந்தப் பிரதிநிதியோட பிடியில் இருக்காரு நம்ம சி.எம். சேர்மனை பகைச்சுக்கிடாம நடந்துக்கிட்டா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று அன்புகலந்த மிரட்டலாகச் சொல்லியிருக்கின்றனர்.

நான்கு மாதங்களுக்கு முன்பும் இதே பெண்களிடம் தேவைக்காக’ வலை விரித்தனர். ‘முடியவே முடியாது’ என்று இருவரும் மறுத்து விட, திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு ‘டிரான்ஸ்பர்’தந்தனர். அப்போது பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந் திரபாலாஜியிடம் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் இதுகுறித்து முறை யிட்டனர். அமைச்சரும் அந்தப் பெண்களிடம் விசாரித்து உண்மையை அறிந்து, இடமாற்ற உத்தரவை ரத்து செய்ததோடு, சின்ன துரையையும் அழைத்துக் கண்டித்திருக்கிறார்.

 

avin



வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அவ்விருவரும் மசியவில்லை. அதனால், இருவரில் ஒருவர் உட்பட 25 பேருக்கு டிரான்ஸ்பர் தந்தனர். இதுவும் தற்போது அமைச்சர் வரையிலும் புகாராகி, விசாரணை நடத்தப்பட்டு, டிரான்ஸ்பர் ஆர்டர்கள் அத்துறையால் கேன்சல் செய்யப்பட்டிருக்கின்றன. பெயர்களைக் குறிப்பிட வேண்டாம்...' என்ற வேண்டுகோளோடு, பெண் அதிகாரிகள் இருவர் ஆவின் சேர்மன் சின்னதுரை மீது அளித்த புகாரை அப்படியே நம்மிடம் ‘ரிபீட்’ செய்தனர்.

 

aavin



சேர்மன் சின்னதுரை அலுவலகத்துக்கு வந்ததும் முதல் வேலையாக எங்கள் இரு வரையும் ஒருவர்பின் ஒருவராக தனது அறைக்கு அழைத்து வேலைக்கு சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார். அவரது நோக்கத்தை அறிந்துகொண்ட நாங்கள், "சார்.. நாங்க ஆபீஸ் வேலையைப் பார்க் கணும்..,'என்று சொன்னாலும் விடமாட்டார். தவறான எண்ணத்தோடு பேசிக்கொண்டே இருப்பார். ஒருநாள், நாங்கள் அமர்ந்திருக் கும் இருக்கைக்கு நேராக சி.சி.டி.வி. கேமராவைப் பொருத்தினார்கள். அதன்பிறகு சேர்மன் எங்களிடம், "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களைப் பார்க்காம என்னால் இருக்க முடியாது... அதனால்தான், உங்க ளுக்கு நேரா சி.சி.டி.வி. கேமராவை வச்சு, அதை என் செல்போனோட இணைச்சு வச்சிருக்கேன்' என்று அவருடைய செல் போனை எங்களிடம் காட்டினார்.

 

admk



ஒவ்வொருநாளும் இரவு 10 மணிக்குமேல் செல்போனில் எங்களைத் தொடர்புகொள் வார். ஆரம்பத்தில், அவருடைய போனை நாங்கள் அட்டெண்ட் செய்திருக்கிறோம். அப்போது, ஆபீஸ் வேலை குறித்துப் பேசி விட்டு, பிறகு வேறு மாதிரி பேச ஆரம்பித்து விடுவார். அதன்பிறகு, இரவு நேரங்களில் அவர் போனில் அழைத்தால், நாங்க அட்டெண்ட் பண்ணமாட்டோம். மறுநாள் ஆபீசுக்கு வந்ததும் எங்களை அழைத்து, "ஏன் போனை எடுக்கல?' என்று திட்டுவார். நாங்களும், "சார் அன்டைமில் சம்பந்தமில்லாம பேசுறீங்க. இது எங்களுக்குப் பெரிய மனஉளைச்சலா இருக்கு. நாங்க குடும்பப்பெண்கள். எங்கள விட்ருங்க சார் ப்ளீஸ்...' என்று கதறுவோம். எங்களது பரிதவிப்பை அவர் கண்டுகொள்ளவே மாட்டார்.


எங்களில் ஒருவர் தனியாக வீடு பிடித்து நெல்லையில் வசித்து வருகிறார். சேர்மன், அவரை அழைத்து, "நான் உன்னை தூத்துக் குடிக்கு டிரான்ஸ்பர் பண்ணிடறேன். என் சொல்படி கேட்டால் அதுக்கப்புறம் உன் ரேஞ்சே மாறிடும்' என்றார். நாங்கள் தொடர்ந்து மறுக்கவே, சொன்னபடியே எங்களை அவர் தூத்துக்குடிக்கு மாற்றி விட்டார்'' என அவர்களின் புகார் நீள்கிறது. வழக்கம்போல, அமைச்சரிடமும் மேலதிகாரிகளிடமும் சின்னதுரை எங்களிடம் நடந்துகொண்ட விதத்தைச் சொன்னோம். தற்போது, ஆவினில் சேர்மனுக்கான அதி காரங்கள் குறைக்கப்பட்டு, பொது மேலாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது'' என்று பெருமூச்சு விட்டனர். அரசியலில் சின்னதுரையின் வளர்ச்சி குறித்து சீரியஸாகச் சொல்கிறார்கள் தூத்துக்குடி அ.தி.மு.க. வட்டாரத்தில்.

2001-க்குப் பிறகுதான் மாவட்ட அரசியலுக்கு வந்தார் சின்னதுரை. அமைச்சர்கள் இருவரின் தேவையை அறிந்து சேவை செய்தார். அப்போது ஒருவரின் அன்பை தாராளமாகப் பெற்று நிழலாகவே (அமைச்சராக) ஆனார். அடுத்து, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவரானார். எந்த நேரத்திலும் அந்த விஷயத்தில் இவருடைய மனம் குரங்குப்பிடியாகவே இருந்தது. பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது, அங்கு பணியில் இருப்பவர்கள் முரண்டுபிடித்தாலும் தன் வழிக்குக் கொண்டு  வந்துவிடுவார். அவர் களை, அரசியல் பிரபலங் களுக்கு சுடச்சுட அறி முகப்படுத்துவார். அத னால்தான், அரசியலிலும் பொருளாதாரத்திலும் இவரால் டாப் லெவ லுக்கு வரமுடிந்தது. ஒருகட்டத்தில், ருசிகண்ட முக்கிய நிர் வாகிகளின் பலத்த சிபாரிசால், ஜெயலலிதா வால் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். எதிரணியினர் விடுவார்களா? இவர் கட்சிக்கு செய்த துரோகங்களையும், பலியான பெண்களின் பட்டியலையும் ஜெயலலிதாவின் பார்வையில் வைத்தனர். ராஜ்யசபா எம்.பி. வாய்ப்பு பறிபோனது.


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் சின்னதுரையும் 2006 காலகட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருந்தவர்கள். அந்த ரூட்டைப் பிடித்துக்கொண்டு, தற்போதைய அமைச்சர் ஒருவரும் அவரது செல்வாக்கு மிக்க உதவியாளரும், அந்த சிறப்பு பிரதிநிதியும் அழுத்தம் தந்தனர். அதனால்தான், சீனியர்களின் எதிர்ப்பையும் மீறி இவரால் நெல்லை ஆவின் சேர்மன் ஆகமுடிந்தது.

நாம் நெல்லை ஆவின் சேர்மன் சின்னதுரையை தொடர்புகொண்டோம். அந்தப் பொண்ணுங்க சொல்லுறதெல்லாம் தவறான விஷயம். உண்மைன்னு நினைச்சிடாதீங்க. ஆபீஸ் நடைமுறைதான், வேற எதுவுமில்ல. நிர்வாகத்துல எல்லாரையும் வேலை வாங்குறோம். மற்றபடி எதுவும் இல்லை. சேல்ஸை கூட்டுறதுக்கு கூடுதல் பொறுப்பா ஒவ்வொருத்தருக்கும் தாலுகா வாரியாக பிரிச்சு போட்டிருக்கோம். வேற எந்த உள்நோக்கமும் இல்ல. முன்னால ஆவின் மைனஸ்ல ஓடுச்சு. இப்ப லாபத்துல ஓடுது. வொர்க்கை கூட்டிருக்கோம். ஆறே மாசத்துல பத்தாயிரம் லிட்டர் கூட்டிருக்கோம். நிர்வாகம் எல்லாம் கரெக்டா பண்ணுவோம். நைட்ல நான் போன் பண்ணுனேன்னு சொல்லுறாங்கள்ல. ஒண்ணும் பிரச்சனை இல்ல. எவிடன்ஸ் எதுவும் இருக்கா? அந்தப் பொண்ணுங்க தீக்குளிக்கப் போறாங்கன்னா... அது ஏன்னு அவங்களுக்குத்தான் தெரியும். மந்திரி டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாருன்னா... அதுவிஷயமா மந்திரிதான் பேசணும். 1981-ல இருந்து எம்.ஜி.ஆர். இளைஞரணில இருந்திருக்கேன். தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவரா 2006-ல ரெண்டு தடவை இருந்திருக்கேன். அதுக்கு முன்னால கிளைச்செயலாளரா இருந்திருக்கேன். பேரவைச் செயலாளரா இருந்திருக்கேன். நாம கரெக்ட்டா இருக்கணும். எவனுக்கும் நான் பதில் சொல்ல வேண்டியது இல்ல'' என்று சீறலாக வெடித்தார். மதுரை ஆவினில் பணிபுரியும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்திலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பில் இருக்கிறது நெல்லை ஆவின் வட்டாரம்.
 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.