Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

அந்தப் பொண்ணுங்க சொல்லுறதெல்லாம் தவறான விஷயம்...ஆவினில் அதிர வைக்கும் பாலியல் புகார்! 

இனியும் தொந்தரவு தொடர்ந்தால் நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக தீக்குளித்து உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை' -தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் புகார் அளித்திருக்கும் திருநெல்வேலி ஆவினில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் இருவரின் குமுறல் இது.

 

avinயாரால் அந்தப் பெண் அதிகாரிகளுக்கு என்ன தொந்தரவு?

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை ஒருங்கிணைத்து நெல்லை ஆவின் செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனாக இருக்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை. இவருடைய தயவால் அதிகார மையமாகச் செயல்படும் சாந்தி என்பவரும், ஆவினில் உயர் பொறுப்பில் உள்ள அருணகிரிநாதன் என்பவரும் அந்த இரு பெண் அதிகாரிகளிடமும் “"சேர்மன் சொல்றத கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க. நம்ம சேர்மனோட பாக்கெட்ல இருக்காரு அந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி. அந்தப் பிரதிநிதியோட பிடியில் இருக்காரு நம்ம சி.எம். சேர்மனை பகைச்சுக்கிடாம நடந்துக்கிட்டா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று அன்புகலந்த மிரட்டலாகச் சொல்லியிருக்கின்றனர்.

நான்கு மாதங்களுக்கு முன்பும் இதே பெண்களிடம் தேவைக்காக’ வலை விரித்தனர். ‘முடியவே முடியாது’ என்று இருவரும் மறுத்து விட, திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு ‘டிரான்ஸ்பர்’தந்தனர். அப்போது பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந் திரபாலாஜியிடம் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் இதுகுறித்து முறை யிட்டனர். அமைச்சரும் அந்தப் பெண்களிடம் விசாரித்து உண்மையை அறிந்து, இடமாற்ற உத்தரவை ரத்து செய்ததோடு, சின்ன துரையையும் அழைத்துக் கண்டித்திருக்கிறார்.

 

avinவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அவ்விருவரும் மசியவில்லை. அதனால், இருவரில் ஒருவர் உட்பட 25 பேருக்கு டிரான்ஸ்பர் தந்தனர். இதுவும் தற்போது அமைச்சர் வரையிலும் புகாராகி, விசாரணை நடத்தப்பட்டு, டிரான்ஸ்பர் ஆர்டர்கள் அத்துறையால் கேன்சல் செய்யப்பட்டிருக்கின்றன. பெயர்களைக் குறிப்பிட வேண்டாம்...' என்ற வேண்டுகோளோடு, பெண் அதிகாரிகள் இருவர் ஆவின் சேர்மன் சின்னதுரை மீது அளித்த புகாரை அப்படியே நம்மிடம் ‘ரிபீட்’ செய்தனர்.

 

aavinசேர்மன் சின்னதுரை அலுவலகத்துக்கு வந்ததும் முதல் வேலையாக எங்கள் இரு வரையும் ஒருவர்பின் ஒருவராக தனது அறைக்கு அழைத்து வேலைக்கு சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார். அவரது நோக்கத்தை அறிந்துகொண்ட நாங்கள், "சார்.. நாங்க ஆபீஸ் வேலையைப் பார்க் கணும்..,'என்று சொன்னாலும் விடமாட்டார். தவறான எண்ணத்தோடு பேசிக்கொண்டே இருப்பார். ஒருநாள், நாங்கள் அமர்ந்திருக் கும் இருக்கைக்கு நேராக சி.சி.டி.வி. கேமராவைப் பொருத்தினார்கள். அதன்பிறகு சேர்மன் எங்களிடம், "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களைப் பார்க்காம என்னால் இருக்க முடியாது... அதனால்தான், உங்க ளுக்கு நேரா சி.சி.டி.வி. கேமராவை வச்சு, அதை என் செல்போனோட இணைச்சு வச்சிருக்கேன்' என்று அவருடைய செல் போனை எங்களிடம் காட்டினார்.

 

admkஒவ்வொருநாளும் இரவு 10 மணிக்குமேல் செல்போனில் எங்களைத் தொடர்புகொள் வார். ஆரம்பத்தில், அவருடைய போனை நாங்கள் அட்டெண்ட் செய்திருக்கிறோம். அப்போது, ஆபீஸ் வேலை குறித்துப் பேசி விட்டு, பிறகு வேறு மாதிரி பேச ஆரம்பித்து விடுவார். அதன்பிறகு, இரவு நேரங்களில் அவர் போனில் அழைத்தால், நாங்க அட்டெண்ட் பண்ணமாட்டோம். மறுநாள் ஆபீசுக்கு வந்ததும் எங்களை அழைத்து, "ஏன் போனை எடுக்கல?' என்று திட்டுவார். நாங்களும், "சார் அன்டைமில் சம்பந்தமில்லாம பேசுறீங்க. இது எங்களுக்குப் பெரிய மனஉளைச்சலா இருக்கு. நாங்க குடும்பப்பெண்கள். எங்கள விட்ருங்க சார் ப்ளீஸ்...' என்று கதறுவோம். எங்களது பரிதவிப்பை அவர் கண்டுகொள்ளவே மாட்டார்.


எங்களில் ஒருவர் தனியாக வீடு பிடித்து நெல்லையில் வசித்து வருகிறார். சேர்மன், அவரை அழைத்து, "நான் உன்னை தூத்துக் குடிக்கு டிரான்ஸ்பர் பண்ணிடறேன். என் சொல்படி கேட்டால் அதுக்கப்புறம் உன் ரேஞ்சே மாறிடும்' என்றார். நாங்கள் தொடர்ந்து மறுக்கவே, சொன்னபடியே எங்களை அவர் தூத்துக்குடிக்கு மாற்றி விட்டார்'' என அவர்களின் புகார் நீள்கிறது. வழக்கம்போல, அமைச்சரிடமும் மேலதிகாரிகளிடமும் சின்னதுரை எங்களிடம் நடந்துகொண்ட விதத்தைச் சொன்னோம். தற்போது, ஆவினில் சேர்மனுக்கான அதி காரங்கள் குறைக்கப்பட்டு, பொது மேலாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது'' என்று பெருமூச்சு விட்டனர். அரசியலில் சின்னதுரையின் வளர்ச்சி குறித்து சீரியஸாகச் சொல்கிறார்கள் தூத்துக்குடி அ.தி.மு.க. வட்டாரத்தில்.

2001-க்குப் பிறகுதான் மாவட்ட அரசியலுக்கு வந்தார் சின்னதுரை. அமைச்சர்கள் இருவரின் தேவையை அறிந்து சேவை செய்தார். அப்போது ஒருவரின் அன்பை தாராளமாகப் பெற்று நிழலாகவே (அமைச்சராக) ஆனார். அடுத்து, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவரானார். எந்த நேரத்திலும் அந்த விஷயத்தில் இவருடைய மனம் குரங்குப்பிடியாகவே இருந்தது. பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது, அங்கு பணியில் இருப்பவர்கள் முரண்டுபிடித்தாலும் தன் வழிக்குக் கொண்டு  வந்துவிடுவார். அவர் களை, அரசியல் பிரபலங் களுக்கு சுடச்சுட அறி முகப்படுத்துவார். அத னால்தான், அரசியலிலும் பொருளாதாரத்திலும் இவரால் டாப் லெவ லுக்கு வரமுடிந்தது. ஒருகட்டத்தில், ருசிகண்ட முக்கிய நிர் வாகிகளின் பலத்த சிபாரிசால், ஜெயலலிதா வால் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். எதிரணியினர் விடுவார்களா? இவர் கட்சிக்கு செய்த துரோகங்களையும், பலியான பெண்களின் பட்டியலையும் ஜெயலலிதாவின் பார்வையில் வைத்தனர். ராஜ்யசபா எம்.பி. வாய்ப்பு பறிபோனது.


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் சின்னதுரையும் 2006 காலகட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருந்தவர்கள். அந்த ரூட்டைப் பிடித்துக்கொண்டு, தற்போதைய அமைச்சர் ஒருவரும் அவரது செல்வாக்கு மிக்க உதவியாளரும், அந்த சிறப்பு பிரதிநிதியும் அழுத்தம் தந்தனர். அதனால்தான், சீனியர்களின் எதிர்ப்பையும் மீறி இவரால் நெல்லை ஆவின் சேர்மன் ஆகமுடிந்தது.

நாம் நெல்லை ஆவின் சேர்மன் சின்னதுரையை தொடர்புகொண்டோம். அந்தப் பொண்ணுங்க சொல்லுறதெல்லாம் தவறான விஷயம். உண்மைன்னு நினைச்சிடாதீங்க. ஆபீஸ் நடைமுறைதான், வேற எதுவுமில்ல. நிர்வாகத்துல எல்லாரையும் வேலை வாங்குறோம். மற்றபடி எதுவும் இல்லை. சேல்ஸை கூட்டுறதுக்கு கூடுதல் பொறுப்பா ஒவ்வொருத்தருக்கும் தாலுகா வாரியாக பிரிச்சு போட்டிருக்கோம். வேற எந்த உள்நோக்கமும் இல்ல. முன்னால ஆவின் மைனஸ்ல ஓடுச்சு. இப்ப லாபத்துல ஓடுது. வொர்க்கை கூட்டிருக்கோம். ஆறே மாசத்துல பத்தாயிரம் லிட்டர் கூட்டிருக்கோம். நிர்வாகம் எல்லாம் கரெக்டா பண்ணுவோம். நைட்ல நான் போன் பண்ணுனேன்னு சொல்லுறாங்கள்ல. ஒண்ணும் பிரச்சனை இல்ல. எவிடன்ஸ் எதுவும் இருக்கா? அந்தப் பொண்ணுங்க தீக்குளிக்கப் போறாங்கன்னா... அது ஏன்னு அவங்களுக்குத்தான் தெரியும். மந்திரி டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாருன்னா... அதுவிஷயமா மந்திரிதான் பேசணும். 1981-ல இருந்து எம்.ஜி.ஆர். இளைஞரணில இருந்திருக்கேன். தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவரா 2006-ல ரெண்டு தடவை இருந்திருக்கேன். அதுக்கு முன்னால கிளைச்செயலாளரா இருந்திருக்கேன். பேரவைச் செயலாளரா இருந்திருக்கேன். நாம கரெக்ட்டா இருக்கணும். எவனுக்கும் நான் பதில் சொல்ல வேண்டியது இல்ல'' என்று சீறலாக வெடித்தார். மதுரை ஆவினில் பணிபுரியும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்திலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பில் இருக்கிறது நெல்லை ஆவின் வட்டாரம்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...