Skip to main content

களையிழந்த அம்மன் கோயில்கள்... ஆடிமாத திருவிழாக்கள் ரத்து எதிரொலி...

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
6666


ஆடி மாதம் எப்போது பிறக்கும் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் அம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள். ஆடி மாதம் முழுக்க கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் அம்மன் கோவில்களில் விழாக்கள் களை கட்டி நிற்கும்.

 

வட மாவட்டங்களில் உள்ள பல துரோபதை அம்மன் மாரியம்மன் அங்காளம்மன் கோவில்களில் ஆடி மாதம் காப்புக்கட்டி 18 நாட்கள் மகாபாரதம் கதைகளை காலட்சேபமாக நடத்துவார்கள். தெருக்கூத்து மூலம் மகாபாரத போர் நடத்தி முடித்து, அம்மனுக்கு தீமிதி திருவிழா நடத்துவார்கள். மாரியம்மன் கோவில்களில் மாரியம்மன் பிறப்பு, காத்தவராயன் கதை போன்றவைகளை பம்பை, உடுக்கை உடன் காலட்சேபம் நடத்துவார்கள். பல ஊர்களில் அம்மன் திருவிழாக்களில் திரைப்பட இசை அமைப்பாளர்களை கொண்டு மேடைக் கச்சேரிகள் நடத்தப்படும். இப்படி ஆடி மாதம் முழுவதும் தூங்கா இரவுகளாக மக்கள் விழித்திருந்து அம்மனுக்கு விழா நடத்துவார்கள்.

 

காணும் இடங்களிலெல்லாம் பெண்கள் மஞ்சள் ஆடைகளுடன் வலம் வருவார்கள். அம்மனுக்கு காவடி எடுப்பது அலகு போடுவது பால் குட ஊர்வலம், இரவு நேரங்களில் தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமங்களில் தூள் பறக்கும். இந்த திருவிழா காலங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் காதல் பிறக்கும், வலுப்படும். இதற்காகவே தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஹீரோவாகவும், ஹீரோயின்களாகவும் வலம் வருவார்கள். உற்றார், உறவினர்களை எல்லாம் வரவழைத்து ஊர்கூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து உறவினர்கள் புடைசூழ சென்று அம்மனை வழிபடுவார்கள்.

 

ஆனால் இந்த ஆண்டு அம்மன் கோவில்கள் களை இழந்து நிற்கின்றன. அம்மனை வழிபடும் மக்கள் திருவிழா நடத்த முடியாத நிலைகண்டு வருத்தம் கலந்த சோகத்துடன் உள்ளனர். இந்தாண்டு இந்த கரோனாவால் திருவிழா நின்று போச்சே என்று அங்கலாய்த்து பேசி வருகிறார்கள். தமிழக அரசின் அறநிலையத் துறை கோவில் திருவிழாக்களை தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் எதுவும் மாறுதல் இல்லாமல் கோவில் வளாகத்திற்குள் மட்டும் மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்த வேண்டும். இப்படி அறநிலையத்துறைக்கு சொந்தமான அம்மன் கோவில்களில் ஆடிமாத வழிபாடு செய்வதற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

 

அதன்படி கோவில்களில் பாரம்பரிய வழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களை அதிகாரிகளின் அனுமதியோடு குறைந்த நபர்களைக் கொண்டு கோவில் வளாகத்திற்குள் மட்டும் நடத்த வேண்டும். மேலும் கோவில்களில் குறைந்த அளவில் பணியாளர்களை வைத்துக்கொண்டு அவர்கள் கட்டாயம் முக கவசம்  அணிய வேண்டும். கோவில் வளாகத்திற்குள் மக்கள் ஆறு அடி சமூக இடைவெளியை கடைப்பிடித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். இந்த விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை. கரோனா நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தையும் முறையாக கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

 

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பெரிய அளவில் திருவிழாக்கள் நடத்தக்கூடாது, கோவிலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை வீடுகளிலிருந்து காணும் வகையில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து கொள்ளலாம் இப்படிப்பட்ட உத்தரவுகளை அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். பிறப்பித்துள்ளார்.

 

இப்படிப்பட்ட விதிமுறைகளுடன் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் எங்காவது திருவிழா நடத்த முடியுமா அறநிலைத்துறை அறிவிப்பு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள், கிராம கோயில் பூசாரிகள், கிராம தர்மகர்த்தாக்கள் ஆகியோர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது அதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள கிராம பூசாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து திருவிழாக்கள் நடத்துவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இந்த கூட்டங்களில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் நடைபெறும் தீமிதி  திருவிழாக்கள், தெருக்கூத்து ஆகியவற்றை நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதால் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் புது மக்கள்  அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும், பெரிய அளவில் திருவிழாக்கள் நடத்த வேண்டுமானால் அது குறித்து திட்டங்கள் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே நடத்தவேண்டும், அதிலும் அறநிலையத்துறையின் விதிமுறைகளை மீற கூடாது என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

 

அறநிலையத்துறை காவல்துறை ஆகியவற்றின் விதிமுறைகள் வழிகாட்டுதல்படி, எந்த கோவில்களிலும் திருவிழா நடத்துவதற்கு சாத்தியமில்லை காரணம் கிராமங்களில் திருவிழாக்கள் நடத்த துவங்கினால் கிராம மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க முடியாது. 6 அடி சமூக இடைவெளியை கிராம கோயில்களில் கடைபிடிப்பது சாத்தியமற்றது என்று கூறி புலம்புகிறார்கள் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள்.

 

பல ஊர்களில் கோயில் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை மட்டுமே பூசாரிகளை வைத்து முடியும். அதையும் கூட பயந்து, பயந்து செய்யவேண்டிய நிலை உள்ளது என்று ஒருவருக்கொருவர் களையிழந்த முகத்துடன் வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். சந்தோஷத்துடன் திருவிழா நடத்த முடியாத வருத்தம் கிராமப்புற மக்களிடம் உள்ளது. 

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.