சாமி சிலைகள், உருவ சிலைகள் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள், தங்க சிலைகள் செய்வதற்கு தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் சுவாமிமலைப் பகுதி புகழ் பெற்றதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து இளைஞர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான உருவ மற்றும் சாமி சிலைகளை செய்து உலக நாடுகளுக்கு பரவலாக அனுப்பிய சம்பவம் அனைவர் மத்தியிலும் பாராட்டை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மோகன் மகன் ராஜேஷ் (வயது 38 ) அவரது அம்மா வழி உறவினர்கள் கும்பகோணம் சுவாமிமலைப் பகுதியில் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது இவர் சிறுவயதில் இதன் மீது ஆர்வம் கொண்டு சிலை செய்யக்கூடிய நுணுக்கங்களை கற்று வந்துள்ளார். இதற்காக பட்டய படிப்பையும் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் ஆன்மீகத் தலமான சிதம்பரத்தில் தனியாக ஐம்பொன் சிலைகள் செய்யும் பட்டறை அமைத்து சாமி சிலைகள் உருவ சிலைகளை தத்ரூபமாக செய்து வழங்கி வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஐம்பொன் சிலைகள் லண்டன், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா, கலிபோர்னியா, சிட்னி, கனடா, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை செய்து வழங்கியுள்ளார்.
இவரது கலை ஆர்வத்தையும் தொழில் திறமையை பாராட்டி அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தற்போது 450 கிலோ மதிப்பில் நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை செய்து இவர் மலேசியா நாட்டிற்கு அனுப்புவதற்கு தயாராக வைத்துள்ளனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் ஆன்மீக பற்று உள்ளவர்கள் இவர் செய்த தத்துருவ சிலைகளை கண்டு வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிறு வயதிலிருந்தே கைகளால் சிலைகளை தத்துருவமாக செய்ய வேண்டும் என உறுதியுடன் இந்த தொழிலை கற்றுக் கொண்டேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/09/cdm-statue-1-2026-01-09-19-09-42.jpg)
தற்போது நான் செய்யும் சிலைகள் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த தொழிலில் ஈடுபட இளம் தலைமுறையினருக்கு அதிக நாட்டமில்லை. இந்த தொழிலில் ஈடுபட மிகவும் பொறுமை அவசியம் எனவே என் காலத்திற்குப் பிறகு இந்த தொழில் நீடித்து நிற்க வேண்டும் என இளைஞர்கள் மற்றும் உறவினர்களுக்கு கற்றுத் தருகிறேன். நான் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு கார்ல் மார்க்ஸ் சிலை, விழுப்புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் சிலை, தனியார் வங்கியின் நிறுவனர் சிலை உள்ளிட்ட பல்வேறு உருவ சிலைகள் மற்றும் சாமி சிலைகளை செய்துள்ளேன். இந்த தொழில் எனக்கு ஆத்ம திருப்தி தருகிறது. தற்போது எவ்வளவோ நவீன தொழில்நுட்பம் வந்தாலும் கைகளால் செய்யும் சிலைக்கு தனி மகத்துவம் உள்ளது. நாடுகளை கடந்து அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த தொழிலை கற்க இளைஞர்கள் முன் வர வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/cdm-statue-2026-01-09-19-08-49.jpg)