Skip to main content

700 கிளைச்செயலாளர்கள் தயார்... தேனி கர்ணன் அதிரடி..!

Published on 14/06/2021 | Edited on 15/06/2021

 

Theni Karnan

 

அதிமுக, அமமுக கட்சியினரிடம் சசிகலா பேசும் ஆடியோ தொடர்பாக சசிகலாவின் ஆதரவாளரும் அண்ணா திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவருமான தேனி கர்ணனை தொடர்புகொண்டோம். 

 

சசிகலா பேசும் ஆடியோக்களை வெளியிடுவது யார்? இந்த நேரத்தில் ஏன் வெளியிட வேண்டும்? 

 

இந்த ஆடியோக்களை வெளியிடுவது தொண்டர்கள்தான். சென்னையில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு தொடர்ந்து தொண்டர்கள் கடிதம் எழுதிவருகின்றனர். கரோனா காலம் என்பதால் பதில் கடிதம் போய் சேருமா, சேராதோ என்பதால் கடிதத்தில் உள்ள தொண்டர்களின் எண்களுக்குத் தொடர்புகொண்டு சசிகலா பேசுகிறார். 

 

சசிகலா சம்மதம் இல்லாமல் வெளியிட முடியுமா? அல்லது சசிகலாதான் வெளியிட சொல்கிறாரா?

 

சசிகலா வெளியிட சொல்லவில்லை. மிகப்பெரிய ஆளுமை தன்னிடம் பேசியதைத் தொண்டர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் அதனை வெளியிட்டுவருகிறார்கள். தான் எழுதிய கடிதத்திற்கு சசிகலா ஃபோனில் பேசிவிட்டார் என்பதை சந்தோசமாக நினைக்கிறார்கள். அதனால் தொண்டர்களே வெளியிடுகிறார்கள். 

 

ஒருசில தொண்டர்கள்தான் பேசியிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். ஆனால் மற்ற நிர்வாகிகள் யாரும் சசிகலாவுடன் பேசவில்லை என்கிறார்களே?

 

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள 11 கிளைக் கழகச் செயலாளர்கள் என்னிடம் வந்தார்கள். சசிகலாவின் குரலைக் கேட்டோம். கட்சியை இப்படியே விட்டுவிட முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்ந்த கட்சி. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோரின் சுயநலத்துக்காக விட்டுவிட முடியாது. 

 

கரோனா காலம் முடிந்தவுடன் நாங்கள் சசிகலாவை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோர் கொடுத்த அடையாள அட்டையுடன்தான் என்னை வந்து சந்தித்தனர். அப்போது அவர்கள் மேலும், அந்த அடையாள அட்டையைக் காண்பித்து இன்றிலிருந்து ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தரப்பிலிருந்து விலகுகிறோம். சசிகலாவின் ஆதரவாளர்களாக செயல்படுகிறோம். மேலும் 700 கிளைக் கழகச் செயலாளர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர் என தெரிவித்துவிட்டுச் சென்றனர். 

 

கட்சியைக் காப்பாற்ற வேண்டும். அடுத்தமுறையாவது அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்திற்காக மாவட்ட வாரியாக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கப்போகிறார். உள்ளாட்சித் தேர்தல் வருவதற்குள் கட்சியில் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

 

கருவாடு கூட மீன் ஆகலாம். சசிகலா அதிமுகவில் இணைய முடியாது என்று கூறுகிறாரே சி.வி. சண்முகம்?

 

சின்னம்மா இல்லை. அம்மான்னு சொல்லுங்க... அம்மான்னு சொல்லுங்க... என்று சொன்னவர் சி.வி. சண்முகம். இப்போது மாற்றிப் பேசுகிறார். இது தமிழக மக்களுக்குத் தெரியும்.

 

ஜெ. ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்க வேண்டும் என்கிறாரே முனுசாமி?

 

தொடர்ந்து ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டவர் கே.பி. முனுசாமி. சசிகலாவைப் பற்றி பேச அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது. பாமகவின் ஸ்லீப்பர் செல்தான் முனுசாமி. இவரைப்போன்று நான்கு, ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்களால்தான் இந்தக் கட்சி வீணாகி வருகிறது. இவ்வாறு கூறினார்.  

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.