Advertisment

54வது ஆண்டு விழாவை சிறையில் கொண்டாடும்"திருடர் குல திலகம் சில்வர் ஸ்ரீனிவாசன்"

"சில்வெஸ்டர் ஸ்டாலோன்" உலகளவில் நடிப்பிற்கு ஃபேமஸ் என்றால், "சில்வர் ஸ்ரீனிவாசன்" திருட்டுக்குஃபேமஸ். ஸ்ரீனிவாசன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிழைப்புத்தேடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். சிறு,சிறு தொழில்களில் ஈடுபட்ட வந்தவர் ஒரு ஹோட்டலில் வேலைபார்த்து வந்தார். அங்கு ஒருவரிடம் ஜோதிடம் கற்றுக்கொண்டவர் அதனை திருட்டுத்தொழில் உபயோகப்படுத்தினார். 1964ஆம் ஆண்டு முதலில் திருடியதற்காக கைது செய்யப்பட்டார். ஆம் இவர் சுமார் 50 ஆண்டுகளாகசென்னையில் உள்ள பல வீடுகளில் சாமியார், ஜோதிடர் என்று வேடமிட்டுபரிகார பூஜை செய்வதாக கூறி வீடுகளுக்கு சென்று வெள்ளிப்பொருட்களைகண் இமைக்கும் நேரத்தில் திருடிசென்றுவிடுவார். இவருக்கு சில்வர் ஸ்ரீனிவாசன் என்று பெயர் வரவும்இதுதான் காரணம்.

Advertisment

The 54th anniversary will be held in jail

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

அதன்பின்னும்இத்தனைகாலமாக திருடி வந்தஇந்த 'திருடர் குல திலகம்" தனது எண்பதாவது வயதிலும் சுறுசுறுப்பாக நேற்றுஒரு திருட்டை மயிலாப்பூரில் நடத்தினார். ஆனால்சி.சி.டிவி கேமராவில்சிக்கிக்கொண்டது.

தனது ஐம்பதினான்காவது ஆண்டு விழாவை தற்போது சிறையில் கொண்டாடி வருகிறார். இவர் கைதாவது இது200வதுமுறையாகும். திருமணம் ஏன் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால் ஜாதகத்தில் தோஷம் உள்ளதாக கூறுகின்றார் ஸ்ரீனிவாசன். நான் சிறைக்கு சென்றுவிட்டு வந்தாலும் நான் திருட்டு தொழிலை தொடருவேன் என்றும் கூறுகிறார். இவர் கடைசியாக திருடியபொழுதுகூட பதினைந்து நிமிடத்தில் திருடிக்கொண்டு சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். வடிவேல் சொன்னதுபோல திருட்டு தொழிலில் இறங்குவதற்கு முன்பு குதிரை சவாரி, குங்ஃபூ எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் இறங்கிருக்கோம் என்பதை ஸ்ரீனிவாசனின் திருட்டு ஞாபகபடுத்துகிறது.

Chennai thief
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe