Skip to main content

தினகரன் இரண்டு தொகுதிகளில் போட்டி ஏன்...? ஜெமிலா விளக்கம்... 

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

 

அ.ம.மு.க.வின் புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் 12.03.2020 வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெமிலா நக்கீரன் இணையத்தளத்திடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 
 

கட்சிக்காக புதிய அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறதே?
 

தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அடுத்தகட்டமாக அமமுகவின் வளர்ச்சி நல்ல திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. 
 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருட காலம்தான் உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறுகின்றன. அமமுகவும் தொடங்கிவிட்டதா?


 

jameela ammk



நாங்கள் எப்போதோ தொடங்கிவிட்டோம். அம்மா பிறந்தநாள் நலத்திட்ட விழா என்று தொடங்கி தெருமுனைக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். தினமும் தமிழ்நாட்டில் 100 இடங்களில் கூட்டங்கள் நடந்து வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் இப்போதுகூட ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன். தினந்தோறும் மக்களை சந்தித்து வரும்காலங்கிளில் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கையை கொடுத்து வருகிறோம்.
 

அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமையுமா? 
 

அதனை கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நாளில் சொல்லியிருக்கிறார். நிச்சயமாக அமமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். 2021ல் ஒரு நல்ல ஆட்சியை கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். 
 

திமுக, அதிமுகவிடம் பெரும்பலான கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது. கூட்டணி குறித்து எந்த கட்சிகளிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? 
 

அதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரங்களில்தான் அதைப்பற்றி பேச முடியும். சொல்ல முடியும். சிறப்பான கூட்டணி அமையும் என்று பொதுச்செயலாளர் சொல்லியிருக்கிறார். அதன்படி அமையும் எதிர்பாருங்கள்.
 

ஆர்.கே.நகரிலும், தென்மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். ஏன் இரண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தோல்வி பயமா என்று சிலர் விமர்சிக்கிறார்களே...
 

கட்சியினர் விரும்புகிறார்கள். தென் மாவட்ட கட்சியினர் அந்த பகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அந்த தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அங்கு போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார். ஏற்கனவே ஆர்.கே.நகர் எம்எல்ஏ என்ற முறையில் மீண்டும் அங்கு போட்டியிடவும் கட்சியினர் விரும்புகின்றனர். தோல்வி பயமெல்லாம் இல்லை. ஏற்கனவே நிறைய தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். அம்மா அவர்களும் இரண்டு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இது தேர்தலுக்கான ஒரு வியூகம் என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். 

 

அதிமுக மாநிலங்களவை பதவிகளில் இரண்டு பதவிகள் கட்சியினருக்கும், ஒரு பதவி கூட்டணிக்கும் கொடுக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம், அம்மா வழியில் கட்சி நடத்துகிறோம் என்று சொல்கிறார்களேயொழிய அம்மா அவர்கள் வழியில் இவர்கள் நடத்துகொள்ளவில்லை. ஏற்கனவே அம்மா இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளில் இரண்டு பதவிகளை பெண்களுக்கு வழங்கினார். அந்த இரண்டு பெண் எம்பிக்களுக்கான பதவிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த பதவிகளை பெண்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். அதையும் புறக்கணித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் இளம் வயதினரை அம்மா பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அதுவும் செய்யவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டணி வைத்திருப்பதால் அவர்களுக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்கிறார்கள். இல்லையென்றால் ஆட்சியை தொடர முடியாது, ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து கூட்டணிக்கு ஒரு பதவியை ஒதுக்கியிருக்கிறார்கள். 


 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...