Skip to main content

லாக்டவுனில் லாக்கான பிரபலங்கள்... 2020 திருமணங்கள்...

 

sd kajal

 

'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்பது தமிழ் பழமொழி. ஆனால் நம் பிரபலங்களின் திருமணங்கள் சொர்க்கத்திலேயே நடப்பது போன்று பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றன. அப்படி இந்த ஆண்டு பல சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களின் திருமணங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்தத் திருமணங்கள் சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட் அடித்தன. அப்படி இந்த ஆண்டின் ட்ரெண்டிங் திருமணங்களின் சிறு தொகுப்பே இப்பதிவு...

 

ராணா டகுபாட்டி
 

rana marriage


தற்போதைய தமிழ்த் திரையுலகின் காதல் மன்னனாக இருந்தவர் ஆர்யா. அதுபோலத்தான் தெலுங்கு திரையுலகின் காதல் மன்னனாக இருந்தவர் ராணா டகுபாட்டி. அனுஷ்கா, த்ரிஷா என ராணா டகுபாட்டியின் காஸிப் காதலிகள் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ராணா, கரோனா லாக்டவுன் சமயத்தில் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில், எங்கேஜ்ட் என்று பதிவிட்டு ஷாக் கொடுத்தார். அந்த சமயத்தில் அவரது உடல்நிலை குறித்து பல செய்திகள் வெளிவந்தன. அதற்கு ராணா தரப்பிலிருந்தும் பதில் தரவில்லை. அந்த சமயத்தில்தான் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது திருமணத் தேதியை அறிவித்தார் ராணா. தெலுங்கு திரையுலகின் பெரிய தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த ராணாவின் திருமணம் லாக்டவுன் சமயம் என்பதால் அவர்களுடைய சொந்த ஸ்டூடியோவான ராமா நாயுடு ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் 30 பேர் கெஸ்ட் மட்டுமே கலந்துகொண்டனர். கரோனா அதிகரித்துக் கொண்டிருந்ததால், திருமணத்தில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு, முன்கூட்டியே கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, சேஃப் அண்ட் செக்யூராக நடத்தப்பட்டது. ஆனாலும், ராணா திருமணத்தில் கலந்துகொண்ட ஒருவருக்கு கரோனா என காஸிப் நாயகனின் திருமணத்தில் கரோனாவை இணைத்து காஸிப் பரப்பப்பட்டது. 

 

யோகி பாபு

yogi babuநயன்தாராவை காதலித்து, ‘எனக்குக் கல்யாண வயசுதான் வந்துடுச்சு..’ என மேரேஜ் புரோபோசல் செய்ததிலிருந்தே யோகிபாபுவுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஏன் 'சர்கார்' ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யும் கேட்டார். 'தர்பாரில்' ரஜினியும் திருமணம் விரைவில் நடைபெறுமென ஆசிர்வதித்தார். அப்போதெல்லாம் கூச்சத்துடன் மேடையில் நின்றவர், எல்லாருக்கும் விரைவில் விருந்து வைப்பதாகச் சொன்னவர், திடீரென லாக்டவுனில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தனது நெருங்கிய வட்டத்துக்கு மத்தியில் திருத்தனி முருகன் சாட்சியாக, திருமணத்தை முடித்தது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின், சில காரணங்களால் யாரையும் அழைக்கமுடியவில்லை, மார்ச் மாதத்தில் சென்னையில் அனைவரையும் ஆழைத்து ரிசப்ஷன் நடத்துகிறேன் என்று யோகி பாபு தெரிவித்திருந்தார். ஆனால், அதை கலைத்துவிட்டது யாரும் எதிர்பார்க்காத கரோனா லாக்டவுன். மீண்டும் அவர் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். 

 

நிதின் ஷாலினி

தெலுங்கு தமிழ் டப்பிங் படங்கள் அதிகமாகப் பார்த்தவர்களுக்கு பரிச்சயமானவராக இருப்பவர் தெலுங்கு நடிகர் நிதின். தெலுங்கு 'ஜெயம்' படத்தின் மூலம் பெண்களுக்கு பிடித்தமான சாக்லேட் பாயாக அறிமுகமானவர் தற்போதுவரை அந்த சாக்லேட் பாய் லுக்கை மாற்றிக்கொள்ளாமல் நடித்து வருபவர். இந்த வருடத் தொடக்கத்தில் தெலுங்கு திரையுலகத்தையே துபாய்க்கு அழைத்துச் சென்று திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், லாக்டவுன் வந்துவிட்டதால் திருமணம் தள்ளிப்போய், பின்னர் இது இப்போதைக்கு ஆகாத காரியமென முடிவெடுத்தவர் ஹைதராபாத்திலேயே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஷாலினி என்பவருடன் திருமணம் செய்துகொண்டார். அச்சமயத்தில் கரோனா அச்சுறுத்தல் பரவலாக இருந்ததால் பெரிய நட்சத்திரங்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்தனர். நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தவர்கள் குறைவானவர்களே

 

ஸ்கார்லெட் ஜொஹன்சன்

36 வயதானாலும் தனது அழகாலும் நடிப்பாலும் ஸ்டைலாலும் உலகமுழுவதும் உள்ள பல கோடி இளைஞர்களைக் கட்டிப்போட்டிருக்கும் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சனும் இந்த லாக்டவுனில் நெருங்கிய வட்டங்களுக்கு மத்தியில், தனது காதலர் காலின் ஜோஸ்ட்டை திருமணம் செய்துகொண்டார். ஸ்கார்லெட்டின் பரம ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஷாக்காக இருந்தது. பலரும் இதை வருத்தமான செய்தியாகக் கருதி, நீண்ட பதிவெல்லாம் பதிவிட்டனர். ஆனால், ஸ்கார்லெட் ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் செய்து, அது சரிவராததால் விவாகரத்துப் பெற்றார் என்பது பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது அந்த ரசிகர்களின் ஆழ்ந்த சோகக் கவிதைகளின் மூலம் வெளிப்பட்டது.

 

காஜல் அகர்வால் 

kajal

 

cnc

 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தனக்கென ரசிகர் கூட்டத்தையும் வைத்திருப்பவரான காஜல், திடீரென இன்ஸ்டாவில் ஒரே ஒரு காதல் போஸ்ட்டை மட்டும் பதிவிட்டு, எல்லோரையும் குழப்பினார். காஜலுக்கும் தொழிலதிபருக்கும் திருமணம் எனச் செய்திகள் வெளியாகத் தொடங்கின. பின்னர், பொருத்தது போதுமென திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக முதலில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த திருமணம், அவரது வீட்டில் மாற்றி ஜாம் ஜாம் என நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவு சென்று சமூக வலைதளங்களில் ஹனிமூன் பிக்குகளை பதிவிட்டு, தனது ரசிகர்களை அழவைத்தார். இவர் சென்றதற்குப் பிறகு அடுத்தடுத்து பல பிரபலங்கள் மாலத்தீவுக்கு வெக்கேஷனை கொண்டாடச் சென்றுவிட்டனர்.

 

சனா கான் 

sana khanசிம்புவுடன் நலந்தானா பாட்டில் ஆட்டம்போட்டு பலரையும் கிரங்கடித்த சனா கான், இந்தி பிக்பாஸின் ஓவியா. சாரி, இவரை பார்த்துதான் ஓவியா. இங்கெல்லாம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியில் பிக்பாஸ் தொடங்கப்பட்டுவிட்டது. அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம், அவருடைய மாடலிங் புகைப்படங்களை லைக் செய்யவென தனி ஃபாலோவர்ஸுகள் என்று இணையத்தில் கொடிகட்டிப் பறந்த சனாவுக்கு கடந்த வருடம் காதலருடன் பிரச்சனை, பிரேக்கப், மனக் குழப்பம் என்று மோசமானதாக இருந்தது. கரோனா லாக்டவுன் சமயத்தில் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று புர்கா அணிந்துகொண்டு சனாகான் தனது ரசிகர்களிடம் சினிமாவிலிருந்து விடைபெறுவதாக அறிவித்த செய்தி சர்ச்சையையானது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மவுலானா என்பவருடன் சனாகான் திருமணம் செய்துகொண்டதாகவும், அந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின. 

 

யுஸ்வேந்திர சகால்

கெயிலின் செல்லக்குட்டி, இந்திய அணியின் கடக்குட்டி என்னும் வகையில் பல கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்தவராக இருக்கும் யுஸ்வேந்திர சகால், பலவருடங்களாகக் காதலித்து வந்த தனுஸ்ரீ வெர்மாவை, இந்த வருட இறுதியில் கரம் பிடித்துவிட்டார். ஆர்.சி.பி. அணிக்கு விக்கெட் வேண்டும் என்கிற சமயத்திலெல்லாம் அறிவார்ந்தபடி செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்துக்கொடுப்பவர் சகால். விராட்டின் நம்பிக்கை எனவும் சொல்லலாம். ஆஸ்திரேலியாவில் டி20 மேட்ச் சீரிஸை வென்றுவிட்டு இந்தியா திரும்பியவர் ஒருசில சக அணிவீரர்களை மட்டும் அழைத்து, திருமணத்தைக் கொண்டாட்டத்துடன் முடித்துள்ளார். கன்கஷன் விதிமுறைப்படி ஜடேஜாவுக்கு பதிலாக பாதி மேட்ச்சில் களமிறங்கி, அந்தப் போட்டியை வெல்ல காரணமாக இருந்த சகாலின் திருமணப் புகைப்படத்தையும் மீம் டெம்பிளேட்டாகி சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இவரை வைத்துப் பிரபலமான மீம்கள் உலாவருகின்றன. மிகவும் ஜாலியான வீரரான சகாலுக்கு வாழ்த்துகளும் ஜாலியாகவே வருகிறது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !