Skip to main content

அரசுப் பள்ளியில் பாதிப்புக்கு ஆளான 13 மாணவிகள்! -மறைக்கப்பட்ட விவகாரம்!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நடுவப்பட்டியில் உள்ளது திரு ராமமூர்த்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி.  அந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள், 13 மாணவிகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள்.  இந்தக் கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர், தொலைபேசி மூலம் உதவும் அமைப்பான குழந்தைகள் உதவி மையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். விசாரணை நடந்தது. ஆனால்,  நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகள்,  பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு, வெவ்வேறு கல்லூரிகளில் போய்ச் சேர்ந்துவிட்டனர். நடவடிக்கைக்கு ஆளாகாத அந்த 2 ஆசிரியர்களும், அடுத்து எதுவும் பண்ணி விடுவார்களோ என்ற கவலை, அங்கு படிக்கின்ற 341 மாணவ, மாணவியரின் பெற்றோரை வாட்டி வதைக்கிறது.

 

 13 students affected in government school -The hidden affair!

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நடுவப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இப்படி ஒரு தகவலைச் சொன்னார், பெயர் வெளிவர விரும்பாத அந்த ஊர்க்காரர்.  

குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பள்ளியின் ஆசிரியர் ராமரிடம் பேசினோம்.
 

“என்ன நடந்துச்சுன்னா.. 27 நாள் ஸ்டடி வச்சோம். அப்ப எச்.எம்.கூட ஸ்கூல்ல இருந்தாங்க. பதிமூணு பிள்ளைங்கன்னா சொல்லுறாங்க? சைல்ட் ஹெல்ப் லைன்ல இருந்து ஸ்கூலுக்கு வந்து விசாரிச்சாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாலகூட சம்பந்தப்பட்ட பெற்றோரைப் பார்த்து நான் பேசினேன். இப்ப யாரு இந்த விவகாரத்தை உங்ககிட்ட கொண்டு வந்தாங்கன்னு தெரியல. ஏதோ ஒரு வழியில் நான் பழிவாங்கப்படுகிறேன். நான் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். பிரச்சனை பண்ணுனதுக்குக் காரணம் அதுதான். என்னைப் பிடிக்காத ஆசிரியர்கள்தான் மாணவிகளைத் தூண்டிவிட்டாங்க.

 

 13 students affected in government school -The hidden affair!

 

குறிப்பாக ஒரு ஆசிரியை. அவங்க பெயரைச் சொல்ல நான் விரும்பல. யார்கிட்டயாச்சும் நன்கொடை கேட்டு,  ஸ்டடிக்கு வர்ற பசங்களுக்கு புரோட்டா, வடை, சாப்பாடுன்னு வாங்கிக்கொடுத்து படிக்க வைப்பேன். அதனால கொஞ்சம் உரிமை எடுத்துக் கண்டிப்பேன். அன்னைக்கு சாயங்காலம்.. இருட்டிருச்சு.. மணி 6-50 இருக்கும். கிளாஸ் ரூம்ல ரெண்டு கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் ஒரு பையனோடு ஒண்ணா படுத்திருத்தாங்க. அவன், ஒரு கேர்ள் ஸ்டூடண்ட் காலைப் பிடித்து இழுத்துக்கிட்டிருந்தான். நான் பார்த்துட்டேன். சத்தம் போட்டேன். இந்த விஷயத்தை எச்.எம்.கிட்டயும் சொன்னேன். பிரச்சனை இப்படித்தான் ஆரம்பிச்சுச்சு. நான் தவறு பண்ணியிருந்தால்.. மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்.” என்றார். 

 13 students affected in government school -The hidden affair!

 

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சிலம்புச்செல்வி நம்மிடம் “நாங்க மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வேலை பார்க்கிறவங்க. ராமர் சார் அவரு பாடம் உண்டு.. அவரு உண்டுன்னு இருக்கிறவர். எல்லாத்தயும் விசாரிச்சிட்டு,   சைல்ட் ஹெல்ப் லைன்காரங்க அந்த ஃபைலை க்ளோஸ் பண்ணிட்டாங்க. திரும்பவும் நீங்க விசாரிக்கிறீங்க. அந்த இன்னொரு வாத்தியார் பேரு பாரத்குமார். அவரு வந்து டிராயிங் சார்.

 

 13 students affected in government school -The hidden affair!

 

ஸ்டூடண்ட்ஸை அடிக்கிறப்ப படக்கூடாத இடத்துல ஸ்கேல் பட்டுச்சுன்னு சொன்னாங்க. மத்தபடி எதுவும் நடக்கல. அப்பவே, அவரை வார்ன் பண்ணிட்டேன். கிளாஸ் ரூம்ல ஸ்டூடண்ட்ஸ் படுத்திருந்ததை உடனே என்கிட்ட வந்து ராமர் சார் சொன்னாரு. நடந்ததை பேரண்ட்ஸ்கிட்ட நானும் சொன்னேன்.  ராமர் சார் கறாரா இருப்பாரு. அது சில டீச்சர்ஸுக்கு பிடிக்கல. அவ்வளவுதான். இனிமே பிரச்சனை வராம பார்த்துக்குவேன்.” என்றார். 

மாணவிகள் இருவரின் பெற்றோரைத் தொடர்புகொண்டோம். “அதுவந்து..” என்ற வார்த்தைக்குப் பிறகு எதுவும் பேசவில்லை. மகள்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தால் அவர்கள் பேச முன்வரவில்லை. அந்தப் பள்ளியில்  விசாரணை நடத்தியது குறித்து சைல்ட் ஹெல்ப் லைனிடம்  கேட்டோம். அவர்களிடமிருந்தும் சரியான பதில் இல்லை.   

தங்களுக்குப் பிடிக்காதவர் என்பதால், சில ஆசிரியர்கள் மாணவிகளைத் தூண்டிவிட்டு, அந்த ஆசிரியரை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்க முடியுமா? வகுப்பறையில் தவறாக நடந்ததைப் பார்த்துக் கண்டித்த ஆசிரியரை, மாணவிகளே திட்டமிட்டு, பழியை அவர் பக்கம் திருப்ப முடியுமா? பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது; மாணவிகளுக்கும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு, நடந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா? என கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.

 

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.