Skip to main content

120 ஆண்டுகால கனவு... நிறைவேற்றி காட்டிய தங்க மகன் நீரஜ் சோப்ரா!

Published on 07/08/2021 | Edited on 09/08/2021

 

 120 year old dream ... Neeraj Chopra, the who fulfilled!

 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து ஈட்டி எறிதலில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிக தூரம் ஈட்டி எறிந்து தொடர்ந்து தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னிலையில் இருந்த நீரஜ் சோப்ரா, 6 சுற்றுகள் முடிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். ஒலிம்பிக் தடகளப்போட்டியில் சுதந்திர இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ள நிலையில், இந்தியா ஒலிம்பிக் பதக்கப்  பட்டியலில் 66 வது இடத்தில் இருந்து 47 ஆவது இடத்திற்கு முன்னோக்கி நகர்த்துள்ளது. இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றும் நீரஜ் சோப்ராவின் வெற்றியை இந்திய ராணுவமே கொண்டாடி வருகிறது.

 

தகுதிச்சுற்றின் முதல் வாய்ப்பிலேயே  86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து காலிறுதி, அரையிறுதி என எதற்கும் இடங்கொடுக்காமல் நேராக இறுதிப்போட்டிக்கு தேர்வானார் நீரஜ் சோப்ரா. 1997 ஆம் ஆண்டு ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் காந்த்ரா என்ற கிராமத்தில் பிறந்தவர்  நீரஜ் சோப்ரா. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னுடைய முழு திறமையும் ஈட்டி எறிதலில்தான் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான முயற்சிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

 

 120 year old dream ... Neeraj Chopra, the who fulfilled!

 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 68.4 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இளையோருக்கான தேசிய சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு போலந்தில் நடந்த 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி வீசி தங்கப்பதக்கத்தை வென்று வெற்றி வாகை சூடினார். இதன் மூலமாக உலக சாம்பியன்ஷிப்  போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் நீரஜ் சோப்ரா. 

 

தொடர் பயிற்சியின் மூலம் ஒரே வருடத்தில் அதை விட 20 மீட்டர் தூரம் அதிகமாக ஈட்டி வீசக் கூடிய அளவுக்கு அதில் பயிற்சி பெற்ற நீரஜ், 2016 ஆம் ஆண்டு தெற்காசிய தடகளப் போட்டியில் 82.23 மீட்டர் தூரம் ஈட்டி வீசி தங்கம் வென்றார். அதற்கடுத்த வருடமே இந்தியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டு தங்கத்தை வென்றார். இப்படி தொடர்ச்சியாக தங்கவேட்டையை தொடர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த மாதம் லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிசுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தகுதியை இழந்தார். பல போட்டிகளில் தங்கம் வென்றிருந்தாலும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா தொடர் பயிற்சிகளுக்குப்பின் பாட்டியாலாவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 85.94 மீட்டர் ஈட்டி வீசி மிகுந்த நம்பிக்கையுடன் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டார். இதன் மூலமாக தடகளப் போட்டியான ஈட்டி எறிதலில் நட்சத்திரமாக ஜொலித்தார் சோப்ரா. இன்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வாகை சூட்டியுள்ளார். தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு  நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுகொடுப்பார் என்ற பலரின் வாக்கு தற்போது பலித்துள்ளது.

 

OLYMPICS

 

1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கொல்கத்தாவில் பிறந்த பிரிட்டிஷ் வம்சாவளி நார்மன் ட்ரிவோர் இந்தியா சார்பில் பங்கேற்று 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக் வரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் தடகளப் போட்டியில் பதக்கம் பெற வில்லை. 120 ஆண்டுகால கனவு இன்று பலித்துள்ளது. ஆம் அதை நிறைவேற்றி காட்டியுள்ளார் நிர்ஜ் சோப்ரா. 

 

ஒலிம்பிக்கில் தோல்வியை சந்தித்ததால் இந்திய மகளிர் அணி மைதானத்தில் கண் கலங்கிய காட்சி வெளியாகிய நிலையில், இன்று தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவிடம் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசித்தார். அப்போது பானிப்பட்டிலிருந்து வந்த நீங்கள் தவித்த வாய்க்கு (தண்ணீர்) பானி தந்து விட்டீர்கள் என்றுகூறி பெருமிதம் கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதயத்திலிருந்து போராடினேன்' - கண்ணீருடன் ஓய்வை அறிவித்த சாக்‌ஷி மாலிக்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 'Fought from the heart'-Sakshi Malik tearfully announces retirement

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்கு பிறகு பிரிஜ் பூஷண் தலைமை பதவியில் இருந்து விலகி விட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சாக்‌ஷி மாலிக் இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது கண் கலங்கிய சாக்‌ஷி மாலிக் தன்னுடைய காலணியை எடுத்து மேஜை மேல் எடுத்து வைத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு ஒரு பெண் தலைவர் வேண்டும் என தான் விரும்பியதாகவும் அது நடக்கவில்லை என்பதால் தான் ஓய்வு பெறுவதாகவும், இந்த தேர்தலில் பிரிஜ் பூஷண் தொடர்புடையவர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது வருத்தம் அளிப்பதாகவும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Cricket in the Olympics Official notification released

 

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.  இந்த போட்டிக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ்பால் - சாஃப்ட் பால், பிளாக் புட்பால் உள்ளிட்ட 5 போட்டிகளைச் சேர்த்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து இருந்தது. அதே சமயம் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டும், ரஷ்ய வீரர்கள் விருப்பப்பட்டால் ரஷ்ய நாட்டின் கொடியில்லாமல் தனிப்பட்ட முறையில் வீரர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ் பால் - சாஃப்ட் பால், லார்க்ரோஸ் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு ஒலிம்பிக் விளையாட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டதற்கான அடையாளமாக விராட் கோலியின் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.