தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/021-2026-02-17-15-03-50.jpg)
ஆண்ட கட்சியான காங்கிரசுக்கு திமுக மரியாதை கொடுக்கவில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கொந்தளிக்கின்றனரே?
பீகார் தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கடைசியில் என்ன நிலைமை. காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டது. ஒட்டுமொத்தமாக 2020 தேர்தலில் 125 இடங்களில் வெற்றிபெற்ற அந்த கூட்டணி இந்த முறை 50 இடங்களில் வெற்றி பெறவில்லையே. யார் காரணம்? தேஜஸ்வி காங்கிரஸை நம்பினார். தேஜஸ்வியை காங்கிரஸ் காலி பண்ணிட்டீங்க. இது ஒரு பாஜகவுடைய சதி என்று கூட அங்குள்ள பத்திரிகைகள் பேசினார்கள். அதே பார்முலாவை தமிழ்நாட்டில் நீங்கள் கொண்டு வர பார்க்கீர்கள். அங்கு இருக்கின்ற சில தலைவர்கள்தான் தான் இந்த பிரச்சனையை செய்தார்கள். ராகுல் காந்தி கண்டுகொள்ளவில்லை. அதே மாதிரி தமிழ்நாட்டில் நடக்கிறது. மதுரையில ஏற்கனவே மாணிக்கம் தாகூர் எங்களை மதிக்கவில்லை என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
பிப்ரவரி 22ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்படும் திமுக தரப்பில் சொல்லிட்டார்கள். கடந்த முறை தேர்தலுக்கு ஒரு ஒன்றரை மாதத்திற்கு முன்னாடி தான் அறிவித்தார்கள். அதே மாதிரி பிப்ரவரி 22 தேதி குழு அமைக்கப்படும். அப்படி குழு அமைக்கப்பட்டால் யாரை முதலில் கூப்பிடுவார்கள்? காங்கிரஸைதான் கூப்பிடுவார்கள். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா? சில காங்கிரஸ் நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் 'திமுக எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. எங்களை மதிக்கவில்லை' என்று சொல்கிறார்கள். உங்கள் கட்சியை சார்ந்த சிலர் திமுகவுடைய குடும்பத்தை கேவலமாக பேசுகிறார்களே அதையெல்லாம் நீங்கள் எதுவும் கேட்டீர்களா? படு கேவலமாக பேசுகிறார்களே.
இதே மாணிக்கம் தாகூர் நேற்று பேசுகிறார் 'மரியாதை இல்லை. நாங்கள் இப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் இருக்க மாட்டோம்' என்கிறார். ஒருகாலத்தில்ஆண்ட கட்சிதான் காங்கிரஸ் யார் இல்லை என்று சொன்னது. ஆனால் இப்போது எத்தனை சதவீதம் வாக்கு இருக்கிறது. ஒரு 4% இருக்குமா? இன்னைக்கு நிலைமை இதுதான். ஆனால் உங்கள் 4% வாக்குக்கு எத்தனை இடங்களை திமுக கொடுக்கிறது. தேசிய கட்சி, ஆண்ட கட்சி என்ற மரியாதை கொடுகிறார்களா இல்லையா? இன்னைக்கு 'இந்தியா' கூட்டணி என்று ஒரு மிகப்பெரிய அளவில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி இந்தியாவில் எங்கு வலுவாக இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் இருக்கிறதா? டெல்லியில் இருக்கிறதா? உத்தரபிரதேசத்தில் அல்லது பீகாரில் இருக்கிறதா? எங்கும் இந்தியா கூட்டணி வலுவாக இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருகிறது.
பீகாரில் காலி பண்ண மாதிரி ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவை காலி செய்தீர்கள். அதனால்தான் உங்களை மம்தா பானர்ஜி ஒரு லெவல்ல வச்சிருக்காங்க. காரணம் காங்கிரஸில் இப்படித்தான் இருப்பாங்க சிலர் என நினைத்து உங்களை மம்தா நம்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நீங்க பாராட்ட வேண்டும். இங்கே இருக்கிற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுவதை நாம் பார்த்தோம். 'சிலர் காங்கிரஸுக்கு உள்ளேயே இருந்துக்கொண்டு சதி பண்றாங்க' என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியுடைய துணைத் தலைவர் கோபண்ணா தெளிவாக சொல்கிறார். 'கூட்டணி பற்றி இவங்க எல்லாம் பேசுறதுக்கு என்ன இருக்கு? அதற்கான தலைவர்கள் இருக்கிறார்கள். சிலர் வேண்டுமென்றே கூட்டணியை உடைக்கின்ற வேலையை காங்கிரசுக்குள் இருந்து செய்கிறார்கள். இது பாஜகவுக்கு ஆதரவு குரல்கள்' என்று கோபண்ணா சொல்கிறார். இதே வார்த்தையைத்தான் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலும் பேசுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/350-2026-02-17-15-42-01.jpg)