தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/269-2026-02-06-17-13-49.jpg)
திமுக போன்ற கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு பக்கம் நிக்கிறாங்க. பாஜக அதனுடைய என்டிஏ கூட்டணி மற்றும் எலக்ஷன் கமிஷன் உடன் ஒரு பக்கம் நிக்கிறாங்க. எலக்ஷன் கமிஷன் தான் சகல அதிகாரம் படைத்தது. ரிசல்ட் இன்னைக்கே ரெடி. நாளைக்கு காலையிலயோ அல்லது இன்னைக்கு ராத்திரிக்ககோ கேட்டீங்க என்றால் கூட ரிசல்ட் ரெடி என்று கொடுத்துடுவாங்க. அண்மையில் பீகாரில் என்ன ஆச்சு, மகாராஷ்டிராவில் என்ன ஆச்சு, இப்படி பல கேள்விகள் வரும். மகாராஷ்டிராவில் பிரச்சாரத்துக்கு ஒரு துணை முதல்வர் பாஜகவை விட்டு விலகப் போகிறேன் என்று அனௌன்ஸ்மென்ட் சொல்லிட்டு போனார். போனவர் போனதுதான்.
மம்தா பானர்ஜி கேள்வி கேக்குறாங்க, ஒவ்வொருத்தரும் கேள்வி கேக்குறாங்க என்ன பதில் இருக்கிறது. எல்லாமே இங்கு அரசியல் தான். பகல்காம் விவகாரம் பேக் பயர் ஆகி போச்சு. அதனால்தான் பீகார் எலக்ஷனுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி டெல்லியிலயே ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்துச்சு. தமிழ்நாட்டில் மட்டும் என்ன, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய் வரும்போது 41 பேரை கொன்று முடிச்சி உயிர்பலியை கொண்டு வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு பதினைந்து இருபது நாட்களில் ஒரு சாதி கலவரம் ஒன்று நடக்கும்.
திருப்பரங்குன்றத்தை மத கலவரத்திற்கு ட்ரை பண்ணாங்க சரியா ஒத்து வரவில்லை. பகல்காம் போல ஃபெயிலியர் ஆயிடுச்சு. அதனால் வேற ஏதாவது ட்ரை பண்ணி, ஒரு ஜாதி கலவரத்தை உண்டாக்கிட்டு இந்த கலவரங்களால் திமுக கூட்டணி மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று ஞானேஷ்குமார் கொடுக்கிற தேர்தல் முடிவுகளை நியாயப்படுத்துவதற்காக, இதெல்லாம் நடந்ததுனாலதான் திமுக தோற்றது என்று நியாயப்படுத்த தான் இவ்வளவு டிராமாக்கள்.
சீமானும் விஜய்யும் ஒன்றுதான். விஜய் ஒரு அணி, சீமான் ஒரு அணி. எல்லாம் பாஜக கூட்டணி தான். பாஜகவிற்கு எதிராக உள்ள வாக்குகளை எல்லாம் திமுகவிற்கு போக விடாமல் தடுப்பதற்கு தான் விஜய், சீமான் இரண்டு பேரையும் வச்சிருக்காங்க.பாஜகவை பாதுகாக்கும் கேடயங்கள் தான் சீமானும், விஜய்யும். அவங்க சண்டைக்கு வர மாட்டாங்க கேடயமாக மட்டும் இருப்பாங்க. ஆயுதங்களை தாங்குவதற்காக இருப்பாங்க. அப்படித்தான் விஜய், சீமான் என்ற இரண்டு சினிமாக்காரகளையும் பயன்படுத்தி இருக்காங்க பாஜக.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/273-2026-02-06-17-13-25.jpg)