Advertisment

பாதியில் நிறுத்தப்பட்ட ஸ்மிருதி மந்தனா திருமணம்; சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

4

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரும் துணைக்கேப்டனுமான இவர், அண்மையில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

Advertisment

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவுக்கும் பாலிவுட் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான பலாஷ் முச்சல் என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு, மந்தனாவின் கண்களைக் கட்டி மும்பை டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்துச் சென்ற பலாஷ் முச்சல், அங்கு வைத்து அவருக்கு தனது காதலை வெளிப்படுத்தி மோதிரத்தை அணிவித்தார். அதே இடத்தில் ஸ்மிருதியும் அவருக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நவம்பர் 23-ஆம் தேதி சாங்லியில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் நடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. திருமணத்திற்கு முந்தைய நாள் சடங்கான மெஹந்தி விழாவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், திருமணத்தன்று காலை ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பதறிப்போன அனைவரும் உடனடியாக ஸ்ரீனிவாஸ் மந்தனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில், ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நிறுத்தப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் வெளியிட்ட அறிக்கையில், “தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மந்தனா உடைந்து போனார். தந்தை முழுமையாகக் குணமடைந்த பிறகே திருமணம் நடக்கும் என ஸ்மிருதி தீர்மானமாக முடிவு செய்துவிட்டார். இந்த உணர்வுபூர்வமான நேரத்தில் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயத்துக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்ட செய்தி கிரிக்கெட் ரசிகர்களையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

cricketer smriti mandhana team india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe