நாடு முழுவதும் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த அண்மையில் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டும் தீர்வு எட்டப்படாத நிலையே இருந்து வருகிறது. குறிப்பாக பள்ளி சிறார்கள், குழந்தைகளை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் ஒருபுறம் வைரலாகி வருகிறது. அதேபோல் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் நாய் கடிக்கு உள்ளான இளைஞர் ஒருவர் நாய் கடித்த 14 மணி நேரத்தில் நாய் போலவே வினோதமாக நடந்துகொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தெருநாய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கைர் எனும் பகுதியில் உள்ள உத்வாரா கிராமத்தில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ராம்குமார் என்ற 23 வயது இளைஞரை தெருநாய் ஒன்று சிறிய அளவில் கடித்துள்ளது. காயம் சிறிதாக இருந்ததால் இதனை பொருட்படுத்தாது ராம்குமார் அலட்சியமாக இருந்துள்ளார். காயம் ஆழமாக இல்லாததால், கடிபட்ட இடத்தை லேசாக சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவியுள்ளார். இருப்பினும் அக்கபக்கத்தில் உள்ளவர்கள் நாய்க்கடி சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவுறுத்திய சிகிச்சை எடுத்து சொல்லியுள்ளனர். இருப்பினும் நாளை காலை மருத்துவமனைக்கு செல்லலாம் என ராம்குமார் அலட்சியம் காட்டியுள்ளார்.
மறுநாள் காலையில், எல்லாம் சாதாரணமாகி விட்டதாக நினைத்துள்ளார். வழக்கம்போல் உணவு அருந்தியுள்ளார். ஆனால் அடுத்த 14 மணி நேரத்திற்குள் திடீரென ராம்குமாரின் உடல்நிலை மோசமாகியது. அவர் நாய் போலவே நாக்கை வெளியே நீட்டி வினோதமாக நடந்துகொண்டதோடு பக்கத்தில் இருந்தவர்களை கடிக்க பாய்ந்துள்ளார். ராம்குமாரின் இந்த செயல் அவரது குடும்பத்தினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பொதுவாக, நாய் அல்லது பிற விலங்குகள் கடித்த ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு தொற்று பரவுகிறது. இருப்பினும், 14-15 மணி நேரத்திற்குள் ராம்குமாருக்கு தொற்று பரவியது மருத்துவர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராம்குமாரின் அலறல் மற்றும் அழுகை அவரது குடும்பத்தினரை மிகவும் பயமுறுத்தியது. நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றது. அவரின் அலறல் சத்தம் கேட்டு, கிராம மக்கள் அங்கு கூடினர். ராம்குமாரின் உடல்நிலை மோசமடைவதைக் கண்ட கிராம மக்கள், அவரை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இறுதியில் ஒரு கட்டிலில் படுக்க வைத்து கயிற்றால் கட்டி வைத்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. பின்னர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கைர் சுகாதார மையத்திற்கு ராம்குமார் கொண்டு செல்லப்பட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/24/172-2025-12-24-15-53-43.jpg)
சாதாரண சூழ்நிலைகளில், ரேபிஸ் அறிகுறிகள் அவ்வளவு விரைவாகத் தோன்றாது. ஆனால் கடிக்கும் நாய் ஏற்கனவே ரேபிஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது வெறித்தனமாக இருந்தால் நோயின் விளைவுகள் விரைவாக பாதிக்கப்பட்டோருக்கு தோன்றும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர் பதி தெரிவித்துள்ளார். எனவே, நாய் கடித்த உடனேயே ரேபிஸ் எதிர்ப்பு ஊசி போடுவது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 72,000 பேர் அங்கு நாய்களால் பாதிக்கப்பட்டுள்னர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி தரவுகளின்படி, அலிகாரில் சுமார் 60,000 தெரு நாய்கள் உள்ளன. இது ரேபிஸ் அபாயத்தை அதிகரித்திருக்கிறது.
நாய் கடி சிறிதாக இருந்தாலும் அலட்சியம் காட்டக்கூடாது. ஒரு சிறிய அலட்சியம் கூட ஆபத்தானது என்பதால் உடனடி சிகிச்சை பெறவேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது இந்த சம்பவம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/24/173-2025-12-24-16-02-34.jpg)