'Same camera... same acting...' - Sangamthamizhan criticized Photograph: (vck)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நான் விஜய் பேச்சை கேட்டேன். என்னதான் பேசுறாங்க என்று பார்த்தால் ஒரு காமெடி என்டர்டைன்மென்ட். ஜனநாயகன் என்ற படத்துக்கு நான் டிக்கெட் எடுக்க ரெடியாக இருந்தேன். அதை எடுக்கவில்லை. படமும் வெளியில் வரவில்லை. ஆனால் படம் போலவே விஜய் மேடையில் சூப்பரா அழுகை சீன் இருந்தது. கோபம் வரக்கூடிய சீன் இருந்தது. அதே மாதிரி குணசித்திர நடிப்பும் கொடுத்தார் விஜய். இப்படி பல வகையை கலந்து கொடுத்திருக்கிறார். அதனால அவருக்கு நடிப்பில் பாஸ் மார்க் போடுகிறேன்.
நான் ஒன்னு கேட்கிறேன். நீங்கள் நேர்மையாக எனக்கு பதில் சொல்லுங்கள். விஜய் ஒரு ஹியூமன் ரிசோர்ஸ் மாதிரிதானே. படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் சம்பளம் டிஃபரண்ட் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு? அங்கு இருக்கிற மற்ற குணசித்திர நடிகர்களுக்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா? உனக்கு 150 கோடியா அவர்களுக்கு இரண்டு கோடியா? இதுவும் கூட ஒரு வகையான கூட்டு சுரண்டல் இல்லையா? நீயே ஒரு சுரண்டல் வாதி தானே.
உங்களுக்கு சினிமா என்பது என்ன? சினிமாவில் நீங்க என்ன உழைக்கிறீங்களோ அதையேதான் உடன் நடிப்பவர்களும் உழைக்க போகிறார்கள். அதே கேமரா அதே ஆக்டிங் தான். ஆனால் விஜய்க்கு மட்டும் அவ்வளவு பணம் என்றால் இது ஒரு வகையான சுரண்டல் தானே? எனவே விஜய் சுரண்டலை பற்றியோ லஞ்ச லாவணியத்தை பற்றியோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. யாரெல்லாம் லஞ்சம் லாவணியத்தில் எவன் இருக்கிறானோ அவர்களையெல்லாம் உண்மையிலே முகத்திரையை கிழிக்க வேண்டிய ஒரு பொறுப்பு நமக்கு இருக்கிறது.
அப்படிப் பார்த்தால் விஜய் முகத்தையும் கிழிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நீ சினிமாவுக்கு வரும்போது உனக்கு என்ன இருந்தது. நீ சம்பாதிச்ச பணத்தை எல்லாம் எங்கே வைத்துள்ளாய். ஏன் விஜய் இன்கம்டாக்ஸ் பணம் காட்டவில்லை. வாங்கிய காருக்கு ஏன் ஒழுங்காக வரி கட்டவில்லை. இதெல்லாம் லஞ்சத்தில் வராதா? என்று கேட்கிறேன். ஏன் விஜய்க்கு பெனால்டி போட்டார்கள். பெனால்டி போட்டது சரிதான் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதையெல்லாம் ஊழல் வரிசையில் சேர்க்க மாட்டீங்களா? இதுவெல்லாம் என்ன சும்மா ஹியூமன் எரர்-ஆ.
Follow Us