Advertisment

'உதயசூரியன் சின்னத்தில் ராமதாஸ்?; விரும்பாத விசிக'-விளக்கும் புதுமடம் ஹலீம்

235

'Ramadoss in the symbol of the rising sun; an unwanted gesture' - explains Pudumadam Haleem Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
088
haleem Photograph: (politics)
திராவிட கட்சிகள் வந்த பிறகுதான் ஊழல் அதிகமா இருக்கு என்றால் பாரிவேந்தர் எந்த கட்சியினால் எம்பி ஆகினார். இந்தியாவில் திராவிட கட்சிகளே ஆளாத பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் ஊழல் பெருகி இருக்கிறதே? எந்த திராவிட கட்சி போய் அங்கு கூட்டணி வச்சாங்களா? இதே பாரிவேந்தர் திமுகவுடன் கூட்டணி வச்சு எம்பி பதவிக்கு எப்படி நின்னார்? ஏன் அந்த பதவியை ராஜினாமா பண்ணவில்லை? இந்த கேள்வி இருக்கிறது. அவருக்கு ஒரு ஞான உதயம் லேட்டா வந்திருக்கு. ஊழல் கட்சியுடன் சேர்ந்து நான் எம்பி பதவிக்கு வந்திருக்க கூடாது என ராஜினாமா பண்ண வேண்டியதுதானே.
 
வட மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் ஊழல் கிடையாதா? உத்தரப்பிரதேசத்தில் ஊழலே கிடையாதா? பீகாரில் ஊழல் கிடையாதா? ஈடி ரெய்டு கிடையாதா? சிபிஐ வழக்கு இல்லையா? எத்தனை பாஜக அமைச்சர்கள் பதவி விலகினார்கள். எத்தனை ஊழல்வாதிகளை சேர்த்துக்கொண்டு நீங்கள்  வாஷிங் மெஷின் அரசியல் செய்தீர்கள். இதையெல்லாம் இந்த காலத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திராவிட கட்சிகள் ஊழல் கட்சிகள் என்றால் பாஜக  ஊழலற்ற கட்சி என்ற இந்த பச்சைப் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள்.
பாமக,பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். திமுக தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சியில், பாஜக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க போவது இல்லை என்பதை உறுதியாக சொல்லிட்டார்.ராமதாசுக்குக்காக விசிகவை திமுக பகைச்சுக்க மாட்டாங்க. 2017 ல் இருந்து ஒரு ஸ்ட்ராங்கா இந்தியா கூட்டணியில் இருக்கின்ற ஒரு கட்சியை இன்னைக்கு சின்னம் இல்லாமல்  ஏற்கனவே பலவீனப்பட்டு இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சி சேர்த்துக்க திமுக விரும்ப மாட்டார்கள். இன்னைக்கு நிலைமைக்கு என்ன தெரியுமா? ராமதாசுக்கு இருக்க ஒரே சாய்ஸ் விஜய் உடன் சேர்வதுதான். வேற சான்ஸ் இல்லை. காரணம் ராமதாஸ் தனியா நிற்க முடியாது. விஜய் உடன் சேரக்கூடிய வாய்ப்புதான் இன்னைக்கு வந்திருக்கு.
ராமதாஸ் விஜய்யோட சேர வேண்டாம் என்றுதான் திமுக விரும்புறாங்க. அன்புமணிக்கே என்ன மாதிரியான ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் மாம்பழம் சின்னம் எப்படினாலும் முடக்கப்பட போகுது. மாம்பழம் முடக்கப்பட்டு தாமரை சின்னத்தில் தான் அன்புமணி போட்டியிட போகிறார் என்ற பேச்சுதான் வருகிறது. அதனால் ராமதாஸை சேர்த்துக்கொண்டால் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தலாம் அப்படிங்கிற ஒரு பேச்சு இருந்தது. ஆனால் அதைக்கூட விசிக விரும்பவில்லை அப்படிங்கிற மாதிரிதான் வருகிறது. காரணம், வன்னியர் சங்கம் ஏற்கனவே சமீப காலமாக வந்து வன்னியர்களுக்கும், தலித் மக்களுக்குமான அந்த பிரச்சனையை 2017க்கு பிறகு பெரிய அளவில் கொண்டு போயிட்டாங்க.  திருப்பி மீண்டும் வந்து அவங்களோட களப்பணியாற்ற வேண்டியதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது. எனவே பாமக  வேண்டாம் என்று திருமாவளவன் நினைக்கிறார்.
dmk alliance parties Ramadoss pmk dmk vck thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe