தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நேற்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். துரோகி என எடப்பாடிக்கு பட்டம் சூட்டிய டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியில் இணைத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.  அதேநேரம் தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது கேள்வியாகி உள்ளது.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் பாஜக கூட்டணி குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என நினைக்கிறீர்கள்? அதேபோல் ராமதாஸ் அணி எந்த கூட்டணியில் இணையும்?

222
'Ramadoss in DMK alliance; Will VK give green signal?' - Pudumadam Haleem explains Photograph: (pmk)
Advertisment

தேமுதிகவுடைய நிலைமையை பொறுத்தவரை நமக்கு வருகிற தகவல் என்ன சொல்கிறது என்றால், தேமுதிக டிமாண்ட் வைக்கிறது. பாஜக என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு தயார் தான் ஆனால் பணமும், பதவியும் கேட்கிறாங்க அப்படிங்கற மாதிரியான டிமாண்ட் வருகிறது. பெரிய பணம் கேட்கிறார்கள், அதிக இடங்கள் கேட்கிறார்கள். ஒரு ராஜ்யசபா எம்பி கேட்கிறார்கள். அந்த ராஜ்யசபா எம்பிக்கு மினிஸ்டர் பதவி கொடுக்க வேண்டும் என கேட்கிறார்கள். இந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் தேமுதிகவுக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

கண்டிப்பாக திமுக தேமுதிகவின் எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் வைகையில் கொடுக்க மாட்டார்கள். இன்னைக்கு இருக்கிற நிலைமைக்கு 1.5% ஓட்டு கூட கிடையாது தேமுதிகவுக்கு. திமுக கூட்டணிக்கு தேமுதிக போனால் எனக்கு தெரிந்து அதிகபட்சம் 5 எம்எல்ஏக்களுக்கு மேல கொடுக்க மாட்டார்கள். திமுக கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பும் இருக்கும். அதிமுக- பாஜக கூட்டணிக்கு போனால் ஒன்றிய அரசுடைய பதவிகளை தேமுதிக எதிர்பார்க்கிறார்கள். பிரேமலதாவை எம்.பி ஆக்கணும் அப்படிங்கிற மாதிரியான பேச்சுக்கள் போகிறது.

இதே பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி பிரிவு ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இருக்காங்க. இப்போது வருகிற செய்தி பிரகாரம் பாட்டாளி மக்கள் கட்சியுடைய ராமதாஸ் பிரிவு திமுக கூட்டணியில் வந்துவிடும். அந்த பேச்சும் வருகிறது. ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வருவதால் விசிகவுக்கு சங்கடம் இருக்காது. ஏனென்றால் அவர் தனியாதான் வரப்போறாரு. கட்சி உடைஞ்சு போச்சு. ஏற்கனவே திருமாவளவன் ராமதாஸுடைய முதல் மகன் என்றெல்லாம் பேசுறாங்க. உண்மையான மகனுடைய நிலைமையே இப்படி இருக்கிறது அது வேற விஷயம்.

இதில் என்ன அர்த்தத்தை புரிஞ்சுக்க முடிகிறது என்றால் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வந்தால் விசிக சங்கடப்பட மாட்டார்கள் என்கிற மாதிரியான ஒரு விஷயத்தை கிரியேட் பண்றாங்க. நரேட்டிவ் செட் பண்றாங்க. எனக்கு தெரிஞ்சு விசிக கிரீன் சிக்னல் கொடுத்து விடும் என்றுதான் தான் நினைக்கிறேன். ராமதாஸ் இன்னைக்கு கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார். ராமதாஸ் அணி அதிகமான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் ஜெயிக்கணும். அப்போது தான்  மக்கள் மத்தியில் உண்மையான பாமக ராமதாஸ் அணி என்று எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு விசிகவுடைய உதவி ராமதாஸுக்கு தேவைப்படுகிறது.