Advertisment

விஜய்யை டச் பண்ண விரும்பாத 'அதிமுக'- காரணம் சொன்ன புதுமடம் ஹலீம்

239

Pudumadam Haleem explains why AIADMK doesn't want to touch Vijay Photograph: (admk)


தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள்குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
236
politics Photograph: (interview)
திமுக- அதிமுக இரண்டு கட்சிகளையும் விஜய் விமர்சித்துள்ளார். ஆனால் அவரது தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை இணைந்துள்ளாரே எப்படி பார்க்கிறீர்கள்?  
இரண்டு கட்சியும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்காக தான் விஜய் பேசியதாக சொல்லப்பட்டது. அப்படி பார்த்தால் செங்கோட்டையன் புனிதரா? அதிமுக ஊழல் கட்சி என்றால் அதிமுக கட்சியில் இருந்து வருகின்ற செங்கோட்டையன் போன்றவர்கள் புனிதர்களா என்ற கேள்வி உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் ஊழல் செய்தாரா? அதிமுகவில் இருக்கும் மற்றவர்கள் ஊழல் செய்யவில்லை என்று  நீங்களே சொல்கிறீர்களா? என்ற கேள்வி உள்ளது. அதேநேரம் விஜய்யை பற்றி பேசவேண்டாம். விஜய்யை நீங்கள் டார்கெட் பண்ணாதீர்கள் என்று அதிமுகவுடைய நிர்வாகிகளுக்கு பாஜகவில் இருந்து உத்தரவு போயிருக்கிறது.
ஏனென்றால் இப்பொழுது விஜய் பாஜகவை பற்றி பேசுவதில்லை. நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும். அவர் ஜனநாயகன் பட விஷயத்துக்கும் விஜய் பேசவில்லை. நடந்த பொதுக்கூட்டத்திலும் விஜய் பாஜகவை டார்கெட் பண்ணவில்லை. பிரதமர் மோடியை பற்றியோ, அமித்ஷாவை பற்றியோ பேசவில்லை. விஜய் பேசியது திமுகவை அதிகமாக,  அதிமுகவைகொஞ்சமாக டச் பண்ணார். உடனே அதிமுக கொதித்து போய் இரண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த கரூர் விஷயத்தை எல்லாம் எடுத்து பேசுனாங்க. அதுவரை கரூர் விஷயத்தை பேசவில்லை.
என்னவோ கரூர் சம்பவம் நேற்று நடந்த மாதிரியே அதிமுகவினர் பேசுனாங்க. செல்லூர் ராஜு எல்லாம் நேற்று கரூரில் 41 பேர் கொல்லப்பட்டார்கள். விஜய் ஓடி வந்துட்டார் என்றெல்லாம் பேசினார். என்ன காரணம் என்றால் அதிமுகவும் விஜயை டச் பண்ண விரும்பவில்லை. அடிப்படையில் அதிமுகவும் விஜயை விமர்சிக்க விரும்பவில்லை. அவரை திட்ட விரும்பவில்லை. நேரடியாக திமுகவுடன் தான் எங்களுக்கு போட்டி என்ற இடத்திற்கு தான் அதிமுக நகர விரும்புகிறார்கள்.
அதிமுக- திமுக இடையேதான் போட்டி என்ற போக்கு உடைக்கிற மாதிரி ஒரு சூழல் வந்த உடனே இன்னைக்கு இன்ஸ்ட்ரக்சன் போயிருக்கு. விஜய்க்கும் போயிருக்கிறது, அதிமுகவிற்கும் போயிருக்கிறதா சொல்றாங்க. நீங்க அதிமுகவை பற்றி பேச வேண்டாம். அவர்கள் உங்களை பற்றி பேச மாட்டாங்க. காரணம் என்னவென்றால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்பது நீங்கள் சிறுபான்மை வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது தான்.
admk b.j.p Sellur K. Raju tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe