Advertisment

பாசிட்டிவ் பாலாஜி - ஒரு நம்பிக்கையின் கதை!

rajendra-balaji-shawal

அதிமுக கட்சியில் அடிமட்டத் தொண்டனாக இருந்து படிப்படியாக மேலே உயர்ந்து மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சராக உயர்ந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. தனது இந்த வளர்ச்சிக்குக் காரணம் தனது பாசிடிவான எண்ணங்களே என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். அதனால் பாசிடிவாகப் பேசுவது, பாசிடிவான வார்த்தைகளையே கேட்பது, பாசிடிவான மனிதர்களையே தன்னைச் சுற்றி வைத்துக்கொள்வது என ‘பாசிடிவ் பாலாஜி’யாக செயல்பட்டு வருகிறார்.

Advertisment

rajendra-balaji-name

வீட்டின் மாடியில் இருக்கும் போது தரைத்தளத்திலிருந்து யாராவது அழைத்தாலும் “இதோ கீழே இறங்கி வருகிறேன்” என்று கூறமாட்டார். ஏனெனில் “கீழே”, “இறங்கி” போன்ற வார்த்தைகள் அவரது எண்ணப்படி நெகடிவ் உணர்வைத் தரக்கூடியவை. அதனால் “இதோ வருகிறேன்” என்பார். அதேபோல் தனது பெயரில் வரும் தி, ஜி போன்ற எழுத்துகள் போஸ்டர் அல்லது பேனரில் இடம்பெறும் போது, அவற்றில் உள்ள சுழி கீழ்நோக்கி அமையாமல் மேல்நோக்கி இருக்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பார்.

Advertisment

ஒரு முறை அவருடன் காரில் பயணித்த உதவியாளரின் ரிங் டோனில் “போனால் போகட்டும் போடா” என்ற பாடல் ஒலித்தபோது உடனே அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டார். கடந்த தேர்தலில் தொகுதி மாற்றம் காரணமாக எதிர்பார்த்த முடிவு கிடைக்காத நிலையில், தன்னை வளர்த்த சிவகாசி என்ற பெயரை தனது பெயருக்கு முன்னால் இணைத்ததும் பாசிடிவ் அடையாளமாகவே கருதப்படுகிறது. பிறருக்கு அவர் உதவி செய்வதும் ஒரு பாசிடிவான செயலாகவே பார்க்கப்படுகிறது.

rajendra-balaji-play

ஒரு வசனம், ஒரு நம்பிக்கை : 

இந்தியன் திரைப்படத்தில் “நோக்கு வர்மத்தாலேயே விலங்கை உடைத்துவிடலாம்; பார்க்கிறீர்களா, சேனாதிபதி?” என்றொரு வசனம் வரும். அதுபோல தனது பாசிடிவ் அணுகுமுறையால் சிவகாசி தொகுதியில் வெற்றியைப் பெறலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராஜேந்திர பாலாஜி. உடன் செல்பவர்களும் அண்ணனிடம் பாசிடிவாக மட்டுமே பேச வேண்டும் என்பதால், தேவையற்ற வார்த்தைகள் வெளிவராமல் இருக்க மெனக்கெட்டு வருகின்றனர்.

பாசிடிவ் எனர்ஜி – அறிவியல் பார்வை :

இங்கே “பாசிடிவ் எனர்ஜி என்பது உண்மையா?” என்ற கேள்வி எழுவது இயல்பு. ரஜினி நடித்த 2.0 திரைப்படத்திலும் ‘ஆரா’, ‘பாசிடிவ் எனர்ஜி’, ‘நெகடிவ் எனர்ஜி’ போன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. இவை நேரடி விஞ்ஞானக் கோட்பாடுகளாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. இருப்பினும் மனிதர்களின் எண்ணங்களும் உணர்வுகளும் சமூகத்தில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இங்கு ‘பாசிடிவ் எனர்ஜி’ என்று குறிப்பிடப்படுவது ஒரு மர்ம சக்தி அல்ல; அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி, ராஜேந்திர பாலாஜி மக்களுக்குச் செய்யும் உதவிகள் மற்றும் நல்ல எண்ணங்களைக் குறிக்கும் சொல்லாக இதைப் புரிந்துகொள்ளலாம்.

நல்ல மனநிலை எப்படி செயல்படுகிறது? :

“ஒருவருடைய பாசிடிவ் எனர்ஜி எப்படி வேலை செய்கிறது?” அது வேறு எங்கிருந்தும் வருவதில்லை; ஒருவரின் மனநிலையிலிருந்தே தொடங்குகிறது. நல்ல எண்ணம் இருந்தால் பேச்சும் மாறும்; பேச்சு மாறினால் செயல்களும் மாறும். அந்த மாற்றம் சுற்றியுள்ளவர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். நம்பிக்கையுடன் பேசும் ஒருவரை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். உற்சாகமாக செயல்படும் ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் உற்சாகம் பெறுவார்கள். இப்படித்தான் ஒரு மனிதரின் நல்ல மனப்பாங்கு மெதுவாக ஒரு சூழலையே மாற்றும். அதுதான் எளிமையாக ‘பாசிடிவ் எனர்ஜி’ என்று சொல்லப்படுகிறது.

rajendra-balaji-mic

மூடநம்பிக்கையா? நியாயமான பார்வையா? :

“பாசிடிவ் விஷயத்தில் இத்தனை தீவிரமாக இருப்பது ஒருவகையில் மூடநம்பிக்கை அல்லவா?” என்ற கேள்வி எழலாம். எந்த ஒரு கருத்தையும் அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் அது வலுவிழக்கும். ‘பாசிடிவ் எனர்ஜி’ என்ற சொல்லை எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே காரணமாகக் காட்டினால் அது நியாயமான அணுகுமுறையாக இருக்காது. ஆனால் அதை ஒருவரின் அணுகுமுறை, செயல்முறை, மக்களிடம் உருவாகும் நம்பிக்கை ஆகியவற்றை விளக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தினால் அதில் தவறு இல்லை. முக்கியம் - நம்பிக்கையை நியாயத்துடன் இணைத்துப் பார்க்கிறோமா என்பதே.

ஒரே வார்த்தை பதில் வேண்டுமென்றால்… :

“பாசிடிவ் எனர்ஜி நன்மை தருமா? தராதா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!” என்று வற்புறுத்தலாம். ஆனால் வாழ்க்கை என்பது “ஆம்” அல்லது “இல்லை” என்று டிக் அடிக்கக்கூடிய தேர்வு வினா அல்ல. சில விஷயங்கள் அனுபவத்தின் மூலமாகத்தான் புரியும். “பேய் இருக்கிறதா? இல்லையா?” என்று சந்திரமுகி படத்தில் வடிவேலு ரஜினியிடம் பிடிவாதமாகக் கேட்பது போல பதில் கேட்கலாம்; ஆனால் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதல்ல. இருந்தாலும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் “நன்மை தரும்” தான்; ஆனால் அதோடு முயற்சி, செயல்பாடு, நியாயமான அணுகுமுறை ஆகியவை இணைந்திருக்க வேண்டும்.

admk Sivakasi Virudhunagar K.T.Rajendra Balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe