உத்தரபிரதேசத்தில் காணாமல் போன விவசாய சங்கத்தின் மகளிர் பிரிவு நிர்வாகியின் உடல் பாகங்கள் நீண்ட தேடுதலுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சல் மிஸ்ரா. இவர் அரசியல் சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மகளிர் பிரிவின் மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அஞ்சல் மிஸ்ரா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் காவல்துறையிலும் புகாரளித்திருந்தனர்.
இந்நிலையில் ஷ்ரவஸ்தி மாவட்டத்தின் மல்கிபூர் காவல் எல்லைக்குட்பட்ட காகர்தாரி என்ற வனப்பகுதியில் கடந்த மார்ச் 3, 2026 அன்று அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் பாகங்கள் ஒன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டன. அது அஞ்சல் மிஸ்ராவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. காணாமல் போன கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அஞ்சல் மிஸ்ராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/39-2026-03-05-18-06-30.jpg)
போலீசார் தரப்பில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், பிங்காவில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அஞ்சல் மிஸ்ரா வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சந்தோஷ் மிஸ்ரா பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த பிப்ரவரி 19 அன்று காணாமல் போனதாக புகார் அளித்தார்.
தொடர்ந்து விசாரித்து வந்தோம். அஞ்சல் மிஸ்ராவின் செல்போன் கடைசியாக எங்கே செயலில் இருந்தது என்பதுகுறித்த விசாரணையில் காகர்தாரி மலைத்தொடரில் உள்ள காட்டில் அவரது மொபைல் போன் கடைசியாக இருந்த இடத்தை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அங்கு சென்று தேடியபோது அதில் அவரது மண்டை ஓடு, தாடை எலும்பு மற்றும் முதுகெலும்பு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. உடல் உறுப்புகள் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் உடைகள் மற்றும் காலணிகள் கிடந்தன.
அஞ்சல் மிஸ்ராவின் கணவர் சந்தோஷ் மிஸ்ரா சந்தேக நபராக சூரஜ் வர்மா என்பவரை சுட்டிக்காட்டியதை த் தொடர்ந்து சூரஜ் வர்மா என்ற நபரை கைது செய்து விசாரித்தோம். விசாரணையில் அஞ்சல் மிஸ்ராவைக் கொன்றதாக சூராஜ் வர்மா ஒப்புக்கொண்டார். சூராஜ் வர்மாவை காகர்தாரி வனப்பகுதிக்கு அழைத்து சென்று உடல் அஞ்சல் மிஸ்ராவின் மீதி உடல் பாகங்களை மீட்டடோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/37-2026-03-05-18-06-48.jpg)
அஞ்சல் மிஸ்ராவும் வர்மாவும் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளனர். இருவரும் முறையற்ற உறவில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனடிப்படையில் அஞ்சல் மிஸ்ரா தன்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் என் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக அஞ்சல் மிரட்டினார். மிரட்டல்களால் ஆத்திரமடைந்த சூரஜ் வர்மா, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி அஞ்சல் மிஸ்ராவை பேசி கக்கர்தாரி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை மறைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். காட்டு விலங்குகள் அஞ்சலின் உடலின் எலும்புக்கூடுகளை மட்டுமே விட்டுச் சென்றதாக போலீசார் நம்புகின்றனர்.
கைது செய்யப்பட்ட சூரஜ் வர்மா மீது குற்றவியல் வரலாறு இருப்பதாகவும், இது வரை ஏழு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/38-2026-03-05-18-05-19.jpg)