Advertisment

'டென்ட் அடிச்ச ஓவைசி டீமுக்கு ஏமாற்றம்'-லோக்கல் பாலிடிக்ஸில் பகிர்ந்த  வி.எஸ்.ஞானவேலன்

380

'Owaisi's team disappointed with the tent' - shared by V.S. Gnanavelan in Local Politics Photograph: (dmk)

தமிழகத்தில் விரைவில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சி தலைமைகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் அதேவேளையில் மறுபுறம் உள்ளூர்களில் உள்ள அரசியல் நிலவரங்களும் வேகமெடுத்துள்ளது. அதனை வெளிக்கொணரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி தான் 'லோக்கல் பாலிடிக்ஸ்'

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா, ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன். திமுகவின் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், ஒன்றிய கழக பொறுப்பாளர்,  ஒன்றிய கழக செயலாளர் என கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு அவருடைய சிறிய கிராமத்தில் 'தளபதி அறிவாலயம்' என்ற ஒன்றை உருவாக்கி, அதனை அப்போதைய திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை வைத்து திறந்துள்ளார். நக்கீரன் டிவியில் ஒளிபரப்பாகும் 'லோக்கல் பாலிடிக்ஸ்' தொடருக்காக வி.எஸ்.ஞானவேலனை சந்தித்து கலந்துரையாடினோம்.

Advertisment


சண்டே வந்தாலே இங்கு முதல் வேலை பிரியாணி சாப்பிடுவது தான் பின்னர் தான் எதுவாக இருந்தாலும். அந்த அளவுக்கு பிரியாணி இங்கு ஸ்பெஷல். அதே மாதிரி இந்த ஜாபராபாத் பகுதிக்கு பெரிய சிறப்பு என்னவென்றால் பெருமான்மையாக இங்கு இஸ்லாமியர்கள் தான் இருக்கிறார்கள். மோடியோட எதிர்ப்பு என்ற ஒன்று இருக்கு இல்லைங்களா மோடியோட அந்த இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் கூடிய செயலுக்கு இன்றளவும் 100 சதவீதத்தில் ஒரு சதவீதம் கூட குறையாமல் அந்த எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் ஒன்று இந்த ஜாபராபாத்.  குறிப்பாக சொன்னால் 2021 தேர்தலில் ஓவைசியின் மொத்த டீமும் டென்ட் அடிச்சு. எப்படியாவது திமுகவுக்கு எதிராக அந்த ஓட்டுக்களை பிரிப்பதற்கான ஒரு வேலையில் ஈடுபட்டார்கள்.

அவர்கள் ரொம்ப எதிர்பார்த்தது ஏதாவது ஒரு பகுதியில் இருந்து ஓட்ட பிரிச்சிட முடியுமா என்பதுதான். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பார்த்தால் 95%  திமுக வெற்றி பெற்றது. ஓவைசி எதிர்பார்த்த சூழலே இங்கு இல்லை. பூத் கவுண்டிங் இடத்தில் இருந்து அந்த ஒவைசி டீம் மொத்தமும் வெளியே போயிட்டாங்க. அந்த அளவிற்கு திமுகவிற்கும் திமுக சார்ந்த தோழமை கட்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் பகுதி இந்த ஜாபார்பேட்

இந்த ஜாபராபாத் பகுதியை பொறுத்தவரைக்கும் திமுகவுடைய அசைக்க முடியாத ஒரு கோட்டை என்றே சொல்லலாம். அதே மாதிரி ஜாபராபாதத்துக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய கிராம பகுதிகள் ஒரு காலத்தில்  அண்ணா திமுகவோட வலிமையான வாக்கு வங்கியாக இருந்த பகுதி. ஒரு 20 வருஷத்துக்கு மேல் இப்போது படிப்படியாக படிப்படியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு 20 பகுதிகளில் வருஷா வருஷம் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள், உதயநிதி பிறந்தநாள், கலைஞர் பிறந்தநாள், அதேபோல எந்த ஒரு கட்சி நிகழ்ச்சி, எந்த ஒரு பிறந்தநாள் விழாக்கள் எதுவாக இருந்தாலும் ஒரு 20 கிராமங்களில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான  விளையாட்டு உபகரணங்கள், டொனேஷன், கல்விக்கு உண்டான அந்த உதவி செய்து வருகிறோம். அதனால் இந்த ஜெனரேஷன்  திமுக நோக்கி மாறுகிறது.

vaniyambadi dmk owaisi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe