OPS's son asked for an opportunity; TTV Sasikala is a friend? - Adukum Pudumadam Haleem Photograph: (politics)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நேற்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். துரோகி என எடப்பாடிக்கு பட்டம் சூட்டிய டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியில் இணைத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது. அதேநேரம் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுகவில் சேர்ந்துள்ளதும் உற்றுநோக்கும் நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் பாஜக கூட்டணி குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
திமுகவில் வைத்திலிங்கம் இணைந்துள்ளார். ஓபிஎஸ்சும் திமுகவில் இணையும் சூழல் உள்ளதா?
வைத்தியலிங்கம் 'திமுக தான் தாய் கழகம் எங்களுக்கு' என்கிறார். அடிப்படையில் திராவிட சிந்தனை கொண்டதால் தாய் கழகத்தில் வந்து சேர்ந்தது ஒரு பெருமைதான் வைத்திலிங்கத்தை பொறுத்தவரை. அன்வர்ராஜா போன்றவர்கள் நாமெல்லாம் திராவிட சிந்தனையில் ஊறியவர்கள் திமுகவிற்கு வந்து சேர்ந்துட்டோம் என்று நினைக்கிறார்கள். ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்துவிடுவார் என்றுகூட சொல்கிறார்கள். அவருக்கு இருக்கிற கடைசி வாய்ப்பு.
ஓபிஎஸ்சும் மனதில் வைத்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என வைத்திலிங்கம் சொல்கிறார். இன்னொரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஓபிஎஸ் உடைய மகன் போய் பியூஷ் கோயலை சந்தித்ததாக ஒரு செய்தி வருகிறது. 'நாங்கள் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறோம். எனக்கு சீட் கொடுங்க' என ஓபிஎஸ் மகன் கேட்டதாக ஒரு செய்தி வருகிறது. ஓபிஎஸக்கு ஒரு பெரிய சங்கடம் உள்ளது. ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தாலும் இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர். இது எப்படி என்றாலும் தரையில விழுந்தாலும் மண்ணு ஓட்டாத கதைதான்.
ஓபிஎஸ் கூட இருந்த தளபதிகள் எல்லாம் சிக்கி சிதைந்து போயிட்டாங்க. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம் மூன்று பேரும் முக்கியமான ஆளுங்கள். மனோஜ் பாண்டியன் அதிமுக பொதுக்குழுவில் எப்படி ஓபிஎஸ்க்கு பாதுகாப்பாகே வந்து நின்றார் என்று பார்த்தோம். வைத்தியலிங்கம் முக்கியமான கை. மூணு பேரும் அங்கே போயிட்டாங்க. இன்னைக்கு ஓபிஎஸ் தனியாக இருக்கிறார். இன்னைக்கு ஓபிஎஸ் டீ குடிக்க போனால் கூட தனியா தான் நடந்து போகணும்.
தேவர் பூஜையில் சசிகலா வரும்போது தினகரன் இல்லை. இதனால் ஒரு சர்ச்சை வந்தது. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் வெளிப்படையில் சசிகலா டி.டி.வி.தினகரன் இடையே டேர்ம் சரியாக இல்லாத மாதிரி தெரியுது. உள்ளுக்குள்ள நல்ல உறவு இருக்கலாம். அவ்வளவு சீக்கிரம் உறவுகளை விட்டுட்டு போயிருவாங்க என்று சொல்ல முடியாது. ஜெயலலிதா காலத்திலேயே சசிகலாவும் டிடிவியும் ரொம்ப நெருக்கம். எப்பொழுதுமே சசிகலாவை மதிக்கக்கூடிய ஒரு நபர்தான் தினகரன். ஆனால் வெளியே பார்வைக்கு டிடிவி,சசிகலா ஒன்றாக இருக்கிற மாதிரி தெரியவில்லை.
Follow Us