தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
Advertisment
இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
405
vck Photograph: (sangatamilan)
மக்களை நேசிக்கும் விஜய் வேணுமா? மக்கள் விரோத ஸ்டாலின் சார் வேணுமா? என்று விஜய் கேட்கிறார். உங்களுக்கு யார் வேணும்?
அதாவது சினிமாவில் இயக்குனர் எழுதி கொடுத்ததை வந்து பேசலாம். அதில் ஒன்றும் தப்பு இல்லை. அது ஒரு நடிகருக்கான ஒரு சிறப்பியல்பு, சிறப்பு பண்பு. அதை வைத்து அவர் சினிமாவில் வெற்றி பெற்றிருக்கிறார். அதே மாதிரி அரசியலிலும் யாரோ ஒருவர் எழுதி கொடுத்ததை, ஏன் யாரோ என்று சொல்ல வேண்டும். ஜான் ஆரோக்கியசாமி எழுதி கொடுத்ததை அப்படியே வந்து ஒப்பித்து கொண்டிருந்தால் அது என்ன அர்த்தம்? சினிமாவில்தான் நடிச்சு  25 வருடம் மக்களை முட்டாப் பயலாக ஆகிவிட்டீர்கள். இதே வேலையை அரசியலும் வந்து செய்வதா? முரட்டு காளை அது இது என்று கதை வேற விட்டுவிட்டு இருக்கிறார் விஜய். குட்டி ஸ்டோரி சொல்லலாம். அது சினிமாவில் சொல்லலாம். கதைக்குள் கதை சொல்லலாம். ஆனால் அரசியல் கதை அல்ல அரசு என்பது மக்களுடைய வலி, மக்களுடைய வாழ்க்கை, மக்களுடைய வாழ்வாதாரங்கள். அதை பேசும்போது ஒரு தலைவனுக்கான பண்புகளுடன் பேச வேண்டும். பைத்தியக்காரன் மாதிரி பேசக்கூடாது.
Advertisment
என்ன பிரச்சனை இருந்தாலும் கூட இறுதியாக பதிவு செய்யக்கூடியது அல்லது அதற்கான வழிகாட்ட கூடியது எங்க ஒன்றிய அரசாங்கம் தான். எடுத்துக்காட்டுக்கு நீட் வேண்டாம் என்கிறோம். பொதுமக்கள் எல்லாருமே நீட்டை எதிர்க்கிறார்கள். நீட்டை எதிர்த்து தமிழக அரசாங்கமே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டமன்றத்தில் மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களும் போய் மனு கொடுத்தார்கள். இதற்கான தீர்வு கொடுக்காமல் இருப்பது யார்? இது மாதிரி உங்களுக்கு அதிகபட்சம் அனைத்தையுமே தீர்மானிக்க கூடியது ஒன்றிய அரசாங்கம் தான். தமிழ்நாட்டில் ஏன் நங்கள் எல்லாம் கூட்டணியாக இருக்கிறோம். ஏன் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் இதனால் தான்.
விஜய்யின் ஒரு பக்கம் கள்ள லாட்டரி சீட்டு. இந்த பக்கம் கள்ள டிக்கெட். இரண்டு பேர் தான் விஜய்க்கு லெஃப்ட் ரைட்டா இருக்கிறாங்க. ஆதவ் அர்ஜுனா பற்றி பின்னர் பேசுவோம். இன்னொருத்தர் இருக்கிறார் ஒயிட் அண்ட் ஒயிட் புஸ்ஸி ஆனந்த். அவரை யார் என்று நினைக்கிறீங்க? கள்ள டிக்கெட் விற்ற பார்ட்டிங்க அவர். அங்கங்கு இருக்க தியேட்டர்களுக்கு முன்னாடியே போய் இருக்கிற டிக்கெட்டை எல்லாம் வாங்கிட்டு எல்லாத்தையும் போய் விற்று ரொம்ப பரபரப்பா இருக்கிற மாதிரி காட்டுவது தான் ஆனந்தின் வேலை. விஜய் இதைப் பார்த்து யாரு இது நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கிறது. தமிழ் உருப்படியாக பேசத் தெரியவில்லை. இது நல்ல அடிமை என அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரைக்கும் பக்கத்தில் வைத்திருக்கிறார்.
இவரை மட்டும் பக்கத்திலேயே விஜய் வைத்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? புஸ்ஸி ஆனந்த் ஒன்லி கல்லாப்பெட்டியை பார்க்கக்கூடிய ஆளு. கள்ள டிக்கெட் விற்கக்கூடிய ஆளு. இன்னொருத்தர் இருக்கிறார் அவர் யாரு? அவர் தான் லாட்டரி சீட்டு பார்ட்டிதான். இப்படிப்பட்ட ஆட்களுக்கு எப்போதும் கல்லாப்பெட்டி மேல்தான் அவர்களுக்கு எண்ணங்கள் இருக்கும். ஏனென்றால் விஜய் பேசும்போது சொல்கிறார். நான் வெற்றிபெற்று வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் வந்து நான் பார்ப்பேன். நான் வெற்றிபெற்ற பிறகு ஒவ்வொரு குடும்பமாக வந்து பார்ப்பேன். எப்படி ஏழு கோடி, எட்டு கோடி மக்கள் இருக்காங்க எல்லா வீட்டையும் பார்ப்பாரா?